حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنَا عُرْوَةُ الْبَارِقِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الأَجْرُ وَالْمَغْنَمُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது. அந்த நன்மை யாதெனில், (அந்தக் குதிரையில் ஏறி அறப்போர் புரிவதால் மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும். இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிகீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2853 — Sahih al Bukhari 56:69
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ أَبِي سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدًا الْمَقْبُرِيَّ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ الْقِيَامَةِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் யார் இறைவழியில் (போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டிவைக்கிறாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும், அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும், அதன் சாணமும், அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும் தராசில் நற்செயல்களின்) தட்டில் (வைத்து எடை) போடப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என் தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கிவிட்டேன். அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்; நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தபொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். (நான் அதைப் பார்த்தவுடன்) ‘அல்—ராதா’ எனப்படும் எனது குதிரையின் மீது ஏறிக்கொண்டு என் தோழர்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். ஆகவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன்; பிறகு (அதை அறுத்து சமைத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற் காக) வருந்தினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதிலிருந்து ஏதேனும் உங்களிடம் எஞ்சி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ‘‘அதன் கால் எங்களிடம் இருக்கிறது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து உண் டார்கள்.31 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் தோட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) யிலுஹைஃப்’ எனப்படும் குதிரையொன்று இருந்தது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அவர்களில் சிலர் அதன் பெயர் யிலுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் யிஉஃபைர்’ எனப்படும் கழுதை யின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள்மீதுள்ள உரிமை என்ன; மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று (என்னி டம்) கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென் றால், அவர்கள் அவனை(யே) வழிபட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்” என்று பதில் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக் கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களுக்கு (இந்த நற் செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடு படாமல்) இருந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2857 — Sahih al Bukhari 56:73
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ، فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لَنَا يُقَالُ لَهُ مَنْدُوبٌ. فَقَالَ " مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் யிமன்தூப்’ எனப்படும் எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சென்று திரும்பிவந்து) ‘‘பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 2858 — Sahih al Bukhari 56:74
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்றில் மட்டுமே (இருக்க முடியும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2859 — Sahih al Bukhari 56:75
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنْ كَانَ فِي شَىْءٍ فَفِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالْمَسْكَنِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும் வீட்டிலும் தான் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை மூவருக்கு (மூன்று வகை விளைவுகளைத் தரும்). ஒருவருக்கு நற்கூலி ஆகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளா தாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான புல்வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற் பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்னைக் கட்டிவைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவுக்குப் பசும்புல் வெளிகளில், அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு, ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடு கள் அளவுக்கும் அதன் விட்டைகளின் அளவுக்கும் அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருடைய நன்மைகளாக அமையும். குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் இஸ்லாமியர்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் (ஸகாத்) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. யியார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அதனை (அதற்கான தண்டனை யைக்) கண்டுகொள்வார்’ (99:7,8) எனும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த (குர்ஆன்) வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
ஹதீஸ் 2861 — Sahih al Bukhari 56:77
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، فَقُلْتُ لَهُ حَدِّثْنِي بِمَا، سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَافَرْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ ـ قَالَ أَبُو عَقِيلٍ لاَ أَدْرِي غَزْوَةً أَوْ عُمْرَةً ـ فَلَمَّا أَنْ أَقْبَلْنَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَحَبَّ أَنْ يَتَعَجَّلَ إِلَى أَهْلِهِ فَلْيُعَجِّلْ ". قَالَ جَابِرٌ فَأَقْبَلْنَا وَأَنَا عَلَى جَمَلٍ لِي أَرْمَكَ لَيْسَ فِيهِ شِيَةٌ، وَالنَّاسُ خَلْفِي، فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ قَامَ عَلَىَّ، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا جَابِرُ اسْتَمْسِكْ ". فَضَرَبَهُ بِسَوْطِهِ ضَرْبَةً، فَوَثَبَ الْبَعِيرُ مَكَانَهُ. فَقَالَ " أَتَبِيعُ الْجَمَلَ ". قُلْتُ نَعَمْ. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ فِي طَوَائِفِ أَصْحَابِهِ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الْجَمَلَ فِي نَاحِيَةِ الْبَلاَطِ. فَقُلْتُ لَهُ هَذَا جَمَلُكَ. فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ وَيَقُولُ " الْجَمَلُ جَمَلُنَا ". فَبَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَاقٍ مِنْ ذَهَبٍ فَقَالَ " أَعْطُوهَا جَابِرًا ". ثُمَّ قَالَ " اسْتَوْفَيْتَ الثَّمَنَ ". قُلْتُ نَعَمْ. قَالَ " الثَّمَنُ وَالْجَمَلُ لَكَ ".
அபுல்முத்தவக்கில் அலீ பின் தாவூத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸ் ஒன்றை எனக்கு அறி வியுங்கள்” என அவர்களிடம் சொன் னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன் லிஅறிவிப்பாளர் அபூஅகீல் (ரஹ்) அவர்கள், ‘‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்லி நாங்கள் திரும்பி வந்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘தன் வீட்டாரிடம் விரைவாகச் செல்ல விரும்புபவர் விரைவாகச் செல்லட்டும்” என்று கூறினார்கள். நான் எனக்குச் சொந்தமான, குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து செல்ல, நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நான் அவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்படைந்து) நின்றுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘ஜாபிரே! சற்றுப்பொறு!” என்று கூறிவிட்டு, தமது சாட்டையால் அதை ஒருமுறை அடித் தார்கள். உடனே ஒட்டகம் தன் இடத்தி லிருந்து வேகமாக ஓடியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டகத்தை நீ விற்கிறாயா?” என்று கேட்க, நான், ‘‘ஆம் (விற்கிறேன்)” என்று பதிலளித்தேன். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். ஒட்டகத்தை (கற்கள் பரப்பப்பட்ட) பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு, ‘‘இது தங்களின் ஒட்டகம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை (ஆராயும் வகையில்) சுற்றி வரத் தொடங்கினார்கள். (பிறகு) ‘‘இந்த ஒட்டகம் நமது ஒட்டகம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஐந்து) யிஊக்கியா’க்கள் தங்கத்தைக் கொடுத்து அனுப்பிவைத்து, ‘‘இதை ஜாபிரிடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக்கொண்டாயா?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘‘ஆம் (பெற்றுக்கொண்டேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலையும் ஒட்டகமும் உமக்கே உரியவை (இரண்டையும் நீரே வைத்துக்கொள்வீராக!)” என்று கூறினார்கள்.35 அத்தியாயம் :