அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று, ‘‘எனக் குப்பின், உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள் வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்” என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள். (அவற்றில்) முதலில் ஒன்றை (அருள் வளங்கள்) பற்றிக் கூறி, பிறகு மற்றொன்றை (உலகின் கவர்ச்சி) பற்றி இரண்டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டுவருமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்படுகிறது” என்று கூறிக்கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதைப் போன்று (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?” என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, ‘‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்)நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டுவராதுதான். ஆனால், வாய்க்கால் (தாவரங்களை) விளைவிக்கும்போதெல்லாம், (அவற்றைத் தின்னும்கால்நடைகளை) வயிறு புடைக்கவைத்து கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. (அப்போதுதான் துளிர்விட்ட பசும்புற் களைத் தின்னும் கால்நடைகளைத் தவிர!) அவை (அதைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற் காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்துக்)கொள்கிறது. (இதனால், நன்கு சீரணமாகி குழைந்த) சாணமிடுகிறது; சிறுநீர் கழிக்கி றது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் மேய்கிறது. (இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதை களுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். அச்செல்வம் மறுமை நாளில் அவருக்கெதிரான சாட்சி யாக அமையும்” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 2843 — Sahih al Bukhari 56:59
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ خَالِدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவ ராவார். இதை ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2844 — Sahih al Bukhari 56:60
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ غَيْرَ بَيْتِ أُمِّ سُلَيْمٍ، إِلاَّ عَلَى أَزْوَاجِهِ فَقِيلَ لَهُ، فَقَالَ " إِنِّي أَرْحَمُهَا، قُتِلَ أَخُوهَا مَعِي ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் துணைவியரின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற் கும் (அதிகமாகச்) செல்வதில்லை.29 அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்ட போது, ‘‘நான் அவர் (உம்மு சுலைம்)மீது, இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு இருந்தபோது (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப் பட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் யமாமா போரை நினைவு கூர்ந்து கூறியதாவது:30 (என் தந்தை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக்கொண்டிருந்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (அறப்போருக்கு) ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இதோ! இப்போது வருகின் றேன்; என் சகோதரர் மகனே!” என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கி விட்டார்கள். பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள். லிஅப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள்லி (மக்கள் தோற்றுப் பின் வாங்குவதைக் கண்ட) ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘எமக்கு விலகி வழிவிடுங்கள். நாம் எதிரிகளுடன் போரிடுவோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோச மானது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2846 — Sahih al Bukhari 56:62
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ يَوْمَ الأَحْزَابِ ". قَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ " مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ ". قَالَ الزُّبَيْرُ أَنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ ".
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ் (அஹ்ஸாப்) போர் நாளில், எதிரிகளின் செய்தியை உளவறிந்து என்னிடம் கொண்டுவருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘நான் (உளவறிந்து வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகளின் செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்?” என்று கேட்க, ஸுபைர் (ரலி) அவர்களே, யிநான்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2847 — Sahih al Bukhari 56:63
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ ـ قَالَ صَدَقَةُ أَظُنُّهُ ـ يَوْمَ الْخَنْدَقِ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ فَانْتَدَبَ الزُّبَيْرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது; (உளவுப் பணிக்காக) நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்.லி ‘‘அது அகழ்ப் போரின்போது என்றே நினைக்கி றேன்” என அறிவிப்பாளர் ஸதகா பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். லி ஸுபைர் (ரலி) அவர்கள் (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத் தார்கள்; அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் தோழர் ஒருவருக்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2849 — Sahih al Bukhari 56:65
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை உள்ளது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது. இதை உர்வா பின் அபில்ஜஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2851 — Sahih al Bukhari 56:67
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَرَكَةُ فِي نَوَاصِي الْخَيْلِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் வளம் (பரக்கத்) உள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :