Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2832 — Sahih al Bukhari 56:48
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ قَالَ رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ جَالِسًا فِي الْمَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمْلَى عَلَيْهِ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَىَّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ‏.‏ وَكَانَ رَجُلاً أَعْمَى، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَىَّ حَتَّى خِفْتُ أَنْ تَرُضَّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏غَيْرُ أُولِي الضَّرَرِ‏}‏‏.‏
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘இறை நம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும் இறைவழியில் தம் செல்வங் களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உம்மி மக்த் தூம் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப் போரில் பங்கெடுத்திருப்பேன்” என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். ஆகவே, அப்போது உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் தன் தூதருக்கு (வேத அறிவிப்பை) அருளினான். நபி (ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத அறிவிப்பு வரத்தொடங்கிய காரணத் தால்) அது என்மீது (கனத்துப்போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவுக்கென்றால் என் தொடை நசுங்கிவிடும் என்று அஞ்சினேன். பிறகு நபியவர்களைவிட்டு அந்நிலை அகற்றப்பட்டது. அப்போது அல்லாஹ், யிதகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)› எனும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான். அத்தியாயம் :
ஹதீஸ் 2833 — Sahih al Bukhari 56:49
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، كَتَبَ فَقَرَأْتُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا ‏"‏‏.‏
சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார் கள். நான் அதைப் படித்தேன். அதில் அவர், ‘‘பகைவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையுடன் (நிலைகுலையாமல்) இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எழுதியிருந் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2834 — Sahih al Bukhari 56:50
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ، فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ، فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ‏.‏ فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப் பட்டார்கள்.27 அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக்கொண்டி ருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக் காகச் செய்திட அவர்களிடம் அப்போது அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவாமறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடலில்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்” என்று (பாடியபடி) கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2835 — Sahih al Bukhari 56:51
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ جَعَلَ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ حَوْلَ الْمَدِينَةِ، وَيَنْقُلُونَ التُّرَابَ عَلَى مُتُونِهِمْ وَيَقُولُونَ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الإِسْلاَمِ مَا بَقِينَا أَبَدًا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُجِيبُهُمْ وَيَقُولُ اللَّهُمَّ إِنَّهُ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَبَارِكْ فِي الأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள்மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டுசெல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், ‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்துள்ளோம்உயிரோடு இருக்கும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்” என்று பாடலானார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா!மறுமையின் நன்மை தவிரவேறு நன்மை கிடையாது!அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வளம் வழங்குவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2836 — Sahih al Bukhari 56:52
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ وَيَقُولُ ‏ "‏ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا ‏"‏‏.‏
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக் காக அகழ் தோண்டியபோது) மண்ணைச் சுமந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, ‘‘(இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்” என்று (பாடலில்) கூறிக்கொண்டிருந் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2837 — Sahih al Bukhari 56:53
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ يَنْقُلُ التُّرَابَ وَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، وَهُوَ يَقُولُ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا‏.‏ فَأَنْزِلِ السَّكِينَةَ عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا‏.‏ إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا‏.‏
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்துகொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்: (இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்!தொழுதும் இருக்கமாட்டோம்! எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள்விரும்பினாலும்இடம் தரமாட்டோம்! அத்தியாயம் :
ஹதீஸ் 2838 — Sahih al Bukhari 56:54
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَجَعْنَا مِنْ غَزْوَةِ تَبُوكَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் தபூக் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பிவந்தோம்... அத்தியாயம் :
ஹதீஸ் 2839 — Sahih al Bukhari 56:55
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي غَزَاةٍ فَقَالَ ‏ "‏ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلاَّ وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ الْعُذْرُ ‏"‏‏.‏ وَقَالَ مُوسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الأَوَّلُ أَصَحُّ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப்போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘(நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் மதீனாவில் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும் கடந்து சென்றாலும், அவர்களும் நம்முடன் அதில் இல்லாமல் இருப்பதில்லை. தகுந்த காரணமே (அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) அவர்களைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரே மிகவும சரியானது ஆகும். அத்தியாயம் :
ஹதீஸ் 2840 — Sahih al Bukhari 56:56
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2841 — Sahih al Bukhari 56:57
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَاهُ خَزَنَةُ الْجَنَّةِ، كُلُّ خَزَنَةِ باب أَىْ فُلُ هَلُمَّ ‏"‏‏.‏ قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ، ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي لأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘யார் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், யிஇன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.