அம்ர் பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆசிரியர் சிறுவர்களுக்கு எழுத்தைக் கற்பிப்பதைப் போன்று, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள்; மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின்னால் இவற்றைச் சொல்லி பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்றும் கூறுவார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் —ýப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி. (பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; தள்ளாத வயதில் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனை’லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானதுதான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2823 — Sahih al Bukhari 56:39
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி வல்—ýப்னி வல்ஹரம்; வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்; வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர்” என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! நான் இயலாமை ‘லிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனை’லிருந்தும் இறப்பின் சோதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) அத்தியாயம் :
ஹதீஸ் 2824 — Sahih al Bukhari 56:40
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ صَحِبْتُ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَسَعْدًا وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ـ رضى الله عنهم ـ فَمَا سَمِعْتُ أَحَدًا، مِنْهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரு டன் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்ட தில்லை. ஆனால், தல்ஹா (ரலி) அவர்கள் உஹுத் போர் நாள் குறித்து அறிவித்ததை நான் கேட்டிருக்கிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2825 — Sahih al Bukhari 56:41
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْفَتْحِ " لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது; ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி சொல்லப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 2826 — Sahih al Bukhari 56:42
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ يَدْخُلاَنِ الْجَنَّةَ، يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ فَيُسْتَشْهَدُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவ மன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ் வின் தூதரே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்” என்று நான் கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். உடனே நான், ‘‘இவர் (நுஅமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். அதற்கு சயீத் பின் அல்ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘‘என்ன ஆச்சரி யம்! (தன் யிதவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறைசொல்கிறதே! அந்த முஸ்லிமை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை” என்று கூறினார்.24 அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறுகிறார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள சயீதீ (ரஹ்) அவர்களின் (முழுப்) பெயர்: அம்ர் பின் யஹ்யா பின் சயீத் பின் அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ். அத்தியாயம் :
ஹதீஸ் 2828 — Sahih al Bukhari 56:44
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ لاَ يَصُومُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ الْغَزْوِ، فَلَمَّا قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ أَرَهُ مُفْطِرًا، إِلاَّ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்துகொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை நோன்புப் பெருநாளிலும் ஹஜ் பெருநாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காத வராகக் கண்டதில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2829 — Sahih al Bukhari 56:45
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவர்: 1) கொள்ளை நோயால் இறந்தவர் 2) வயிற்று(ப் போக்கு போன்ற) நோய்களால் இறந்தவர் 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர் 4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.26 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2830 — Sahih al Bukhari 56:46
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: கொள்ளை நோயால் இறக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது வீர மரணமாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2831 — Sahih al Bukhari 56:47
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا، فَجَاءَ بِكَتِفٍ فَكَتَبَهَا، وَشَكَا ابْنُ أُمِّ مَكْتُومٍ ضَرَارَتَهُ فَنَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ }.
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் தமது (கண்பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, யிதக்க காரணமின்றி’ என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (4:95) அருளப்பட்டது. அத்தியாயம் :