இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடமும் தம் புதல்வர் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமும், ‘‘அபூசயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் கூறும் ஹதீஸைச் செவியுறுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்களும் அவர்களுடைய (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூசயீத் (ரலி) அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் வந்து, முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள். பிறகு கூறலானார்கள்: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டிருந்தோம். அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரது தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அவர்களை அம்மார், அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தார் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.17 அத்தியாயம் :
ஹதீஸ் 2813 — Sahih al Bukhari 56:29
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا رَجَعَ يَوْمَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، فَأَتَاهُ جِبْرِيلُ وَقَدْ عَصَبَ رَأْسَهُ الْغُبَارُ فَقَالَ وَضَعْتَ السِّلاَحَ، فَوَاللَّهِ مَا وَضَعْتُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَأَيْنَ ". قَالَ هَا هُنَا. وَأَوْمَأَ إِلَى بَنِي قُرَيْظَةَ. قَالَتْ فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் முடிந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலை யைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஆயுதத்தைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இதோ, இங்கே!” என்று பனூ குறைழா (எனும் யூதக்) குலத்தாரை நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2814 — Sahih al Bukhari 56:30
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ أَنَسٌ أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிபிஃரு மஊனா’ (எனுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் காலை (நேரத் தொழுகை)களில் பிரார்த்தித்தார்கள். ரிஅல், தக்வான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய கூட்டத்தாரே அவர்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதிவந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.18 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.19 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப் பில் இல்லை” என்று பதிலளித்தார். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரின்போது) என் தந்தை (அப்துல்லாஹ்), உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் சமூகத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரிவைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர் (ரலி) அவர்களின் மகள் என்றோ அவர்களுடைய சகோதரி என்றோ (அதாவது ஜாபிரின் அத்தை என்றோ, தந்தையின் அத்தை என்றோ) கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஏன் அழுகிறாய்?› அல்லது ‘நீ அழாதே!› வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள். (புகாரீ ஆகிய) நான் அறிவிப்பாளர் ஸதகா பின் ஃபள்ல் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் (உடல்) தூக்கப்படும்வரை (நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் உறுதியின்றிக் கூறினார்கள்)” எனப் பதிலளித் தார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 2817 — Sahih al Bukhari 56:33
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணி யத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறை வழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 2818 — Sahih al Bukhari 56:34
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَكَانَ كَاتِبَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ". تَابَعَهُ الأُوَيْسِيُّ عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ.
உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையும் எழுத்தருமான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, ‘‘சொர்க்கம், வாட் களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என (கடிதம்) எழுதினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2819 — Sahih al Bukhari 56:35
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ ـ أَوْ تِسْعٍ وَتِسْعِينَ ـ كُلُّهُنَّ يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ، لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நபி) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு லிஅல்லது தொண்ணூற்றொன்பதுலி துணைவியரிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ் வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்” என்று கூறினார்கள். அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘அல்லாஹ் நாடினால்’ (இன்ஷா அல்லாஹ்) என்று சொல்லுங்கள் என்றார். சுலைமான் (அலை) அவர்கள் யிஇன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத்தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அவர், ‘அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால், (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப் போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2820 — Sahih al Bukhari 56:36
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ، فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبَقَهُمْ عَلَى فَرَسٍ، وَقَالَ " وَجَدْنَاهُ بَحْرًا ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந் தார்கள். ‘‘(ஒருமுறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ள)ப் புறப்பட்டார்கள்; மேலும், ‘‘இந்தக் குதிரை யைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2821 — Sahih al Bukhari 56:37
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، قَالَ أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ النَّاسُ، مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلاً وَلاَ كَذُوبًا وَلاَ جَبَانًا ".
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; கருவேல முள்மரம்வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் மேல் துண்டு முள்மரத்தில் சிக்கிக்கொண்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் மேல்துண்டை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தாலும்கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்ய னாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :