حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ يَتَتَرَّسُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِتُرْسٍ وَاحِدٍ، وَكَانَ أَبُو طَلْحَةَ حَسَنَ الرَّمْىِ، فَكَانَ إِذَا رَمَى تَشَرَّفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْظُرُ إِلَى مَوْضِعِ نَبْلِهِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தம்மை ஒரே கேடயத்தைக் கொண்டே தற்காத்துக் கொள்வார்கள்.55 அபூதல்ஹா (ரலி) அவர்கள் நன்கு அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பெய்தால் நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, அவர்களது அம்பின் இலக்கைப் பார்ப்பார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ்வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்துகொண்டிருந் தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் காயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின்மேல் வைத்து அழுத்திவிட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 2904 — Sahih al Bukhari 56:118
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلاَ رِكَابٍ، فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاصَّةً، وَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِ، ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلاَحِ وَالْكُرَاعِ، عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனுந் நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அளித்தவையாகும். அதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ செலுத்திப் போர் செய்திருக்கவில்லை.56 ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தம் வீட்டாருக்கு ஆண்டுச் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு மீதியை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக் காகவும் செலவிட்டுவந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2905 — Sahih al Bukhari 56:119
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُفَدِّي رَجُلاً بَعْدَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ " ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي ".
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்காகவும் தம் தாய் தந்தையை(ச் சேர்த்து) அர்ப்பணிப்ப தாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. சஅத் (ரலி) அவர்களிடம் (உஹுத் போரின்போது) நபி (ஸல்) அவர்கள், ‘‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதை நான் கேட்டேன்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2906 — Sahih al Bukhari #2906
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ عَمْرٌو حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " دَعْهُمَا ". فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا. قَالَتْ وَكَانَ يَوْمُ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ " تَشْتَهِينَ تَنْظُرِينَ ". فَقَالَتْ نَعَمْ. فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَيَقُولُ " دُونَكُمْ بَنِي أَرْفِدَةَ ". حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ " حَسْبُكِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاذْهَبِي ". قَالَ أَحْمَدُ عَنِ ابْنِ وَهْبٍ، فَلَمَّا غَفَلَ.

ஹதீஸ் 2907 — Sahih al Bukhari 56:120

ஹதீஸ் 2908 — Sahih al Bukhari 56:121
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدِ اسْتَبْرَأَ الْخَبَرَ، وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ وَفِي عُنُقِهِ السَّيْفُ وَهْوَ يَقُولُ " لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا ". ثُمَّ قَالَ " وَجَدْنَاهُ بَحْرًا ". أَوْ قَالَ " إِنَّهُ لَبَحْرٌ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாகவும் வீரமிக்கவர்களாக வும் இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சப்தம் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூதல்ஹா (ரலி) அவர் களின் சேணம் பூட்டப்படாத குதிரைமீது அமர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக்கொண்டி ருந்தது. அவர்கள், ‘‘பயப்படாதீர்கள். பயப்படா தீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ‘‘நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டோம்” என்று கூறினார்கள். அல்லது, ‘‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு சமுதாயத்தார் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களுடைய வாட்களின் ஆபரணம் பொன்னாகவோ வெள்ளியாகவோ இருக்கவில்லை; அவர் களுடைய (வாட்களின்) ஆபரணங்களெல் லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல்முனையில் சுற்றிவைக்கப்படும்) ஒட்டகத்தின் கழுத்து நரம்பு (அல்லது பதனிடப்படாத தோல்), ஈயம், இரும்பு ஆகியவைதான். அத்தியாயம் :
ஹதீஸ் 2910 — Sahih al Bukhari 56:123
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ الدُّؤَلِيُّ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَ أَنَّهُ، غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ " إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَىَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهْوَ فِي يَدِهِ صَلْتًا ". فَقَالَ مَنْ يَمْنَعُكَ مِنِّي فَقُلْتُ " اللَّهُ ". ثَلاَثًا وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிநஜ்த்’ நாட்டை நோக்கி அறப்போருக்காகச் சென்றேன்.61 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர் களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்துகொண்டிருந்தபோது மதிய ஓய்வுகொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கி னார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத் தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த் தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக்கொண்டார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறை’லிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், யிஎன்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?› என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்குதான்) அமர்ந் திருந்தார். அவரை நபியவர்கள் தண்டிக்க வில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2911 — Sahih al Bukhari 56:124
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سُئِلَ عَنْ جُرْحِ النَّبِيِّ، صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ. فَقَالَ جُرِحَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ، فَكَانَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ تَغْسِلُ الدَّمَ وَعَلِيٌّ يُمْسِكُ، فَلَمَّا رَأَتْ أَنَّ الدَّمَ لاَ يَزِيدُ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ حَصِيرًا فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا ثُمَّ أَلْزَقَتْهُ، فَاسْتَمْسَكَ الدَّمُ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு உஹுத் போர் நாளில் ஏற்பட்ட காயம் பற்றி என்னி டம் கேட்கப்பட்டது. நான், ‘‘நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக் கவசம் அவர்களின் தலைமீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டி ருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் (தண்ணீரை) ஏந்திக்கொண்டிருந்தார்கள். இரத்தம் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் பார்த்தபோது, ஒரு பாயை எடுத்து, அது சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு அதைக் காயத்தில் வைத்து அழுத்தி னார்கள். உடனே இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது” என்று கூறினேன்.62 அத்தியாயம் :