Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2912 — Sahih al Bukhari 56:125
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَةً بَيْضَاءَ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً‏.‏
அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறக்கும்போது தமது ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒரு நிலத்தையும் தவிர. வேறெதையும் அவர்கள் விட்டுச்செல்லவில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தர்மமாக ஆக்கிவிட்டிருந்தார்கள்.64 அத்தியாயம் :
ஹதீஸ் 2913 — Sahih al Bukhari 56:126
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ، وَأَبُو سَلَمَةَ أَنَّ جَابِرًا، أَخْبَرَهُ‏.‏ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَتَفَرَّقَ النَّاسُ فِي الْعِضَاهِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ بِهَا سَيْفَهُ ثُمَّ نَامَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَجُلٌ وَهْوَ لاَ يَشْعُرُ بِهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي ‏"‏‏.‏ فَقَالَ مَنْ يَمْنَعُكَ قُلْتُ ‏"‏ اللَّهُ ‏"‏‏.‏ فَشَامَ السَّيْفَ، فَهَا هُوَ ذَا جَالِسٌ، ثُمَّ لَمْ يُعَاقِبْهُ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள் ளும் நேரம் வந்தது. மக்கள் அங்கிருந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்கவிட்டார்கள்; பிறகு தூங்கிவிட்டார் கள். பிறகு கண்விழித்தபோது நபியவர் களுக்கே தெரியாமல் அங்கே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். (அவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் என் வாளை உருவிக்கொண்டு, யிஉன்னை (என்னிடமிருந்து) காப்பவர் யார்?› என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே வாளை உறையில் போட்டுக்கொண்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்கவில்லை.65 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2914 — Sahih al Bukhari 56:127
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهْوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا، فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ، فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَأَبَى بَعْضٌ، فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلُوهُ عَنْ ذَلِكَ قَالَ ‏"‏ إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ ‏"‏‏.‏ وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ فِي الْحِمَارِ الْوَحْشِيِّ مِثْلُ حَدِيثِ أَبِي النَّضْرِ قَالَ ‏"‏ هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ ‏"‏‏.‏
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில்) இருந்தேன். நான் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்க வில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரைமீதேறி அமர்ந்துகொண்டு என் சகாக்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்துவிட்டார்கள். எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு நானே அதை எடுத்துக்கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்றுவிட்டேன். நபித்தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் (சமைக்கப்பட்ட) இறைச்சியை உண்டார்கள். வேறுசிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்தபொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவுதான்” என்று பதிலளித் தார்கள்.66 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், ‘‘அதன் இறைச்சி யில் மீதி ஏதும் உங்களிடம் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2915 — Sahih al Bukhari 56:128
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي قُبَّةٍ ‏"‏ اللَّهُمَّ إِنِّي أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ ‏"‏‏.‏ فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ، وَهْوَ فِي الدِّرْعِ، فَخَرَجَ وَهْوَ يَقُولُ ‏{‏سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ * بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ ‏}‏‏.‏ وَقَالَ وُهَيْبٌ حَدَّثَنَا خَالِدٌ يَوْمَ بَدْرٍ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உனது நாட்டம் (முஸ்லிம்களாகிய நாங்கள் தோற்றுப்போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வழிபடுவது நின்றுபோய்விடும். (மக்கள் பொய்த் தெய்வங்களையே வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி மன்றாடிப்) பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்க ளிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” (54:45,46) எனும் குர்ஆன் வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில் பத்ர் போரின்போது என்னும் வாசகம் (அதிகப்படியாக) இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2916 — Sahih al Bukhari 56:129
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ‏.‏ وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ‏.‏ وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: தமது போர்க் கவசம் முப்பது ‘ஸாஉ’கள் தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகர மாக ஒரு யூதரிடம் அடகுவைக்கப்பட்டி ருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், யிஇரும்புக் கவசம்’ என்றும் மற்றொன்றில், ‘‘இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகுவைத்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2917 — Sahih al Bukhari 56:130
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَتِهِ اتَّسَعَتْ عَلَيْهِ حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ الْبَخِيلُ بِالصَّدَقَةِ انْقَبَضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا وَتَقَلَّصَتْ عَلَيْهِ وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ ‏"‏‏.‏ فَسَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلاَ تَتَّسِعُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: (தர்மம் செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உவமை, இரும்பு நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களின் கைகள் அவர்களின் கழுத்தெலும்புகளோடு பிணைந்துள்ளன. (அந்த அளவுக்கு அவை இறுக்க மானவை.) தர்மம் செய்பவர் தர்மம் செய்ய நாடும்போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விரிந்துகொடுத்து, அவரது பாதச் சுவட்டைக்கூட அழித்து விடுகிறது. கஞ்சன் தர்மம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனது இரும்பு அங்கி யின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகிறது; அவனைப் பிடித்து அழுத்துகிறது. அவனுடைய கைகள் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.68 (இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை அறிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘கஞ்சன் அந்த அங்கியை விரிவுபடுத்த முயல்வான். ஆனால், அது விரியாது” என்று (பலமுறை) சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2918 — Sahih al Bukhari 56:131
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، مُسْلِمٍ ـ هُوَ ابْنُ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، قَالَ حَدَّثَنِي الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَتِهِ ثُمَّ أَقْبَلَ، فَلَقِيتُهُ بِمَاءٍ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتُ، فَغَسَلَهُمَا وَمَسَحَ بِرَأْسِهِ وَعَلَى خُفَّيْهِ‏.‏
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் போரின்போது) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொள்ளச் சென்றார் கள். பிறகு திரும்பி வந்தபோது, நான் தண்ணீருடன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கியொன்றை அணிந்திருந் தார்கள். அவர்கள் (நான் கொண்டுசென்ற தண்ணீரில்) வாய் கொப்புளித்து, மூக்கில் நீர் செலுத்தி (மூக்கைச் சிந்தி)னார்கள்; முகத்தைக் கழுவிக்கொண்டார்கள். நீளங்கியின் கைப் பகுதிகள் வழியாக தம் கைகளை வெளியே எடுக்கலானார்கள். அவை மிகவும் இறுக்கமாக இருந்தன. ஆகவே, கீழ்ப் பகுதி வழியாக இரு கைகளையும் வெளியே எடுத்து, அவற் றைக் கழுவினார்கள்; தலைமீது (ஈரக் கையால்) தடவினார்கள்; காலுறைகளின் மீதும் தடவிக்கொண்டார்கள்.69 அத்தியாயம் :
ஹதீஸ் 2919 — Sahih al Bukhari 56:132
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ، مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்குச் சொறி சிரங்கு இருந்த காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2920 — Sahih al Bukhari 56:133
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ عَبْدَ، الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ شَكَوَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يَعْنِي الْقَمْلَ ـ فَأَرْخَصَ لَهُمَا فِي الْحَرِيرِ، فَرَأَيْتُهُ عَلَيْهِمَا فِي غَزَاةٍ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம், (தம் உடலில் சிரங்கை உண்டாக்கும்) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார் கள். எனவே, ஓர் அறப்போரில் அவ்விரு வரும் பட்டாடை அணிந்திருப்பதை நான் கண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2921 — Sahih al Bukhari 56:134
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي قَتَادَةُ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي حَرِيرٍ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.