Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2922 — Sahih al Bukhari 56:135
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَخَّصَ أَوْ رُخِّصَ لِحِكَّةٍ بِهِمَا‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அவ்விருவருக்கும் இருந்த சொறி சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்; அல்லது சலுகை கொடுக்கப்பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 2923 — Sahih al Bukhari 56:136
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ مِنْ كَتِفٍ يَحْتَزُّ مِنْهَا، ثُمَّ دُعِيَ إِلَى الصَّلاَةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ‏.‏ حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ وَزَادَ فَأَلْقَى السِّكِّينَ‏.‏
அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பதை நான் பார்த்தேன். பிறகு தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில், ‘‘தொழுகைக்கு அழைக்கப் பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கத்தி யைக் கீழே போட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக வந்துள்ளது.70 அத்தியாயம் :
ஹதீஸ் 2924 — Sahih al Bukhari 56:137
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، أَنَّ عُمَيْرَ بْنَ الأَسْوَدِ الْعَنْسِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهْوَ نَازِلٌ فِي سَاحِلِ حِمْصَ، وَهْوَ فِي بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ، قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوا ‏"‏‏.‏ قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ‏.‏ قَالَ ‏"‏ أَنْتِ فِيهِمْ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ ‏"‏‏.‏ فَقُلْتُ أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏
உமைர் பின் அஸ்வத் அல் அன்ஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) யிஹிம்ஸ்’ கடற்கரையில் தமது கட்டடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் எம்மிடம் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் முதலில் கடலில் (சென்று) அறப்போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்” என்று கூறி னார்கள்.72 இதைச் செவியுற்ற நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அவர்களில் ஒருத் தியா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் கைஸர் (சீசர்) உடைய நகரம் (கான்ஸ்டான்டி நோபிள்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.73 ‘‘அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2925 — Sahih al Bukhari 56:138
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تُقَاتِلُونَ الْيَهُودَ حَتَّى يَخْتَبِيَ أَحَدُهُمْ وَرَاءَ الْحَجَرِ فَيَقُولُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்தக் கல், ‘‘அல்லாஹ் வின் அடியாரே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும். இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2926 — Sahih al Bukhari 56:139
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் யூதர்களுடன் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது. எந்த அளவுக்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருப் பான். அந்தக் கல், ‘‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்றுவிடு” என்று கூறும்.74 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2927 — Sahih al Bukhari 56:140
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முடியாலான காலணிகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடுவது, யுகமுடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரிவது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.75 இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2928 — Sahih al Bukhari 56:141
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் உள்ள துருக்கியர் களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று இருக்கும். முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2929 — Sahih al Bukhari 56:142
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ ‏"‏‏.‏ قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً ‏"‏ صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (யிதோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்’ என்பதற்கு முன்னால்)லி யிசிறிய கண்களும் சப்பை மூக்குகளும் உள்ளன என்னும் சொற்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
ஹதீஸ் 2930 — Sahih al Bukhari 56:143
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَسَأَلَهُ، رَجُلٌ أَكُنْتُمْ فَرَرْتُمْ يَا أَبَا عُمَارَةَ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ، وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ بِسِلاَحٍ، فَأَتَوْا قَوْمًا رُمَاةً، جَمْعَ هَوَازِنَ وَبَنِي نَصْرٍ، مَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ، فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ، فَأَقْبَلُوا هُنَالِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَابْنُ عَمِّهِ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَقُودُ بِهِ، فَنَزَلَ وَاسْتَنْصَرَ ثُمَّ قَالَ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ثُمَّ صَفَّ أَصْحَابَهُ‏.‏
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَسَأَلَهُ، رَجُلٌ أَكُنْتُمْ فَرَرْتُمْ يَا أَبَا عُمَارَةَ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ، وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ بِسِلاَحٍ، فَأَتَوْا قَوْمًا رُمَاةً، جَمْعَ هَوَازِنَ وَبَنِي نَصْرٍ، مَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ، فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ، فَأَقْبَلُوا هُنَالِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَابْنُ عَمِّهِ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَقُودُ بِهِ، فَنَزَلَ وَاسْتَنْصَرَ ثُمَّ قَالَ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ثُمَّ صَفَّ أَصْحَابَهُ‏.‏
ஹதீஸ் 2931 — Sahih al Bukhari 56:144
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَلأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ الْوُسْطَى حِينَ غَابَتِ الشَّمْسُ ‏"‏‏.‏
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ் (அஹ்ஸாப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ், (எதிரிகளான) அவர்களின் வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை) ‘லிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.