Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2942 — Sahih al Bukhari 56:154
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْد ٍ ـ رضى الله عنه ـ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ خَيْبَرَ ‏"‏ لأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ ‏"‏‏.‏ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ ‏"‏ أَيْنَ عَلِيٌّ ‏"‏‏.‏ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَأَمَرَ فَدُعِيَ لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَىْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا‏.‏ فَقَالَ ‏"‏ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ ‏"‏‏.‏
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன்; அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறக் கேட்டேன். உடனே நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்ற ஆசையோடு மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அலீ எங்கே?” என்று கேட்டார்கள். ‘‘அவருக்குக் கண் வலி” என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகிவிட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள், ‘‘நம்மைப் போன்று அவர்களும் (ஏக இறையை ஏற்போராக) ஆகும்வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதான மாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு அவர்களை இஸ்லாத் திற்கு அழைத்து (அதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற வற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி யளிக்கப்படுவது (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உமக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2943 — Sahih al Bukhari 56:155
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ، فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ، فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلاً‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும்வரை தாக்குதலைத் தொடங்கமாட்டார்கள். (அந்த மக்களிடையே) தொழுகை அறிவிப் பின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்தமாட்டார்கள். தொழுகை அறிவிப்பின் ஓசையைக் கேட்காவிட்டால், காலை நேரம் வந்தபின் தாக்குதல் நடத்துவார்கள். கைபருக்கு நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2944 — Sahih al Bukhari 56:156
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அறப்போருக்குச் சென்றால்.... (என்று ஹதீஸ் தொடங்குகிறது)86 அத்தியாயம் :
ஹதீஸ் 2945 — Sahih al Bukhari 56:157
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى خَيْبَرَ فَجَاءَهَا لَيْلاً، وَكَانَ إِذَا جَاءَ قَوْمًا بِلَيْلٍ لاَ يُغِيرُ عَلَيْهِمْ حَتَّى يُصْبِحَ، فَلَمَّا أَصْبَحَ، خَرَجَتْ يَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். லிஅவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் சென்றால், காலை நேரம் வரும்வரை அவர்கள்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். அவ்வாறே காலையான தும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, ‘‘முஹம்மதும் (அவரது) ஐம் படையும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் முற்றத்தில் (அவர் களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2946 — Sahih al Bukhari 56:158
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ فَمَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏"‏‏.‏ رَوَاهُ عُمَرُ وَابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுகின்ற (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள் ளேன். யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுகிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக்கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே நபிமொழியை உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2947 — Sahih al Bukhari 56:159
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ غَزْوَةً إِلاَّ وَرَّى بِغَيْرِهَا‏.‏
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப் போருக்கு (தலைமை தாங்கி)ச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைக்காமல் இருக்கமாட்டார்கள். இதை, ‘‘தபூக் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கியது தொடர்பாக என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்” என அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். கஅப் (ரலி) அவர்க(ள் முதுமை அடைந்து கண்பார்வையிழந்துவிட்டபோது அவர்க)ளை, அவர்களுடைய மக்களி லேயே கைப்பிடித்து அழைத்துச் செல்பவ ராயிருந்தவர்தான் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2948 — Sahih al Bukhari 56:160
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَلَّمَا يُرِيدُ غَزْوَةً يَغْزُوهَا إِلاَّ وَرَّى بِغَيْرِهَا، حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ، فَغَزَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ، وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا، وَاسْتَقْبَلَ غَزْوَ عَدُوٍّ كَثِيرٍ، فَجَلَّى لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ، لِيَتَأَهَّبُوا أُهْبَةَ عَدُوِّهِمْ، وَأَخْبَرَهُمْ بِوَجْهِهِ الَّذِي يُرِيدُ‏.‏
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்கு(த் தலைமையேற்று)ச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் வனப் பகுதியையும் அவர்கள் எதிர்நோக்கினார் கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரி களைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தமது எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பும் இலக்கை முஸ்லிம்களுக்கு அறிவித்து விட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2949 — Sahih al Bukhari 56:161
وَعَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ كَانَ يَقُولُ لَقَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْرُجُ إِذَا خَرَجَ فِي سَفَرٍ إِلاَّ يَوْمَ الْخَمِيسِ‏.‏
அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்றுதான் புறப்படுவார்கள்” என்று கூறிவந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2950 — Sahih al Bukhari 56:162
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْخَمِيسِ فِي غَزْوَةِ تَبُوكَ، وَكَانَ يُحِبُّ أَنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيسِ‏.‏
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்றுதான் புறப்பட் டார்கள். வியாழக்கிழமையன்று (பயணம்) புறப்படுவதை அவர்கள் விரும்பி வந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2951 — Sahih al Bukhari 56:163
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَسَمِعْتُهُمْ يَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தமது ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ர் தொழுகையை நான்கு ரக்அத்களாகவும் அஸ்ர் தொழுகையை துல்ஹுலைஃபா எனுமிடத்தில் இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் (தல்பியாவை) உரக்கக் கூறுவதை நான் செவியுற்றேன்.87 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.