Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2952 — Sahih al Bukhari 56:164
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسِ لَيَالٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، وَلاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ إِذَا طَافَ بِالْبَيْتِ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ‏.‏ قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ فَقَالَ أَتَتْكَ وَاللَّهِ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் துல்கஅதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது (துல்கஅதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் கஅபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா 10ஆம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரின் சார்பாக (குர்பானி பிராணியை) அறுத்துப் பலியிட்டார்கள்” என்று பதிலளித்தார் கள்.89 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை முறைப்படியே உம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் உங்களி டம் செல்லியுள்ளார்கள்” என்றார். அத்தியாயம் :
ஹதீஸ் 2953 — Sahih al Bukhari 56:165
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ أَفْطَرَ‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி யின்போது) ரமளான் மாதத்தில் பயணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். யிகதீத்’ எனுமிடம் வந்தபின் நோன்பை விட்டுவிட்டார்கள்.90 அத்தியாயம் :
ஹதீஸ் 2954 — Sahih al Bukhari 56:166
وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْثٍ، وَقَالَ لَنَا ‏"‏ إِنْ لَقِيتُمْ فُلاَنًا وَفُلاَنًا ‏"‏‏.‏ ـ لِرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ سَمَّاهُمَا ـ فَحَرِّقُوهُمَا بِالنَّارِ‏.‏ قَالَ ثُمَّ أَتَيْنَاهُ نُوَدِّعُهُ حِينَ أَرَدْنَا الْخُرُوجَ فَقَالَ ‏"‏ إِنِّي كُنْتُ أَمَرْتُكُمْ أَنْ تُحَرِّقُوا فُلاَنًا وَفُلاَنًا بِالنَّارِ، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ، فَإِنْ أَخَذْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், ‘‘நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் லிஎன்று குறைஷியரில் இருவரின் பெயர் குறிப்பிட்டுலி அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றோம். அப்போது அவர்கள், ‘‘நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்துவிடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. எனவே நீங்கள் அவ்விருவரையும் பிடித்தால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.91 அத்தியாயம் :
ஹதீஸ் 2955 — Sahih al Bukhari 56:167
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ، مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மாறு செய்யுமாறு கட்டளையிடப்படாத வரை, (தலைவரின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ் வுக்கு மாறுசெய்யுமாறு கட்டளையிடப் பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2956 — Sahih al Bukhari #2956
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ ‏"‏‏.‏ وَبِهَذَا الإِسْنَادِ ‏"‏ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي، وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ، فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ، فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا، وَإِنْ قَالَ بِغَيْرِهِ، فَإِنَّ عَلَيْهِ مِنْهُ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்கள்; (மறுமையில் தகுதியால்) முந்தியவர்கள்” என்று கூற நான் கேட்டேன்.92 அத்தியாயம் :
ஹதீஸ் 2957 — Sahih al Bukhari 56:168
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ ‏"‏‏.‏ وَبِهَذَا الإِسْنَادِ ‏"‏ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي، وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ، فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ، فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا، وَإِنْ قَالَ بِغَيْرِهِ، فَإِنَّ عَلَيْهِ مِنْهُ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்கள்; (மறுமையில் தகுதியால்) முந்தியவர்கள்” என்று கூற நான் கேட்டேன்.92 அத்தியாயம் :
ஹதீஸ் 2958 — Sahih al Bukhari 56:169
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَجَعْنَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَمَا اجْتَمَعَ مِنَّا اثْنَانِ عَلَى الشَّجَرَةِ الَّتِي بَايَعْنَا تَحْتَهَا، كَانَتْ رَحْمَةً مِنَ اللَّهِ‏.‏ فَسَأَلْتُ نَافِعًا عَلَى أَىِّ شَىْءٍ بَايَعَهُمْ عَلَى الْمَوْتِ قَالَ لاَ، بَايَعَهُمْ عَلَى الصَّبْرِ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹுதைபியா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். யிநாங்கள் (ஹுதைபியா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி (ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக்கொண்டோமோ அந்த மரம் இது தான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்வின் அருளாக அமைந்தது. அறிவிப்பாளர் ஜுவைரியா பின் அஸ்மா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘‘எதன்மீது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார் கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்ப தற்காகவா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. ஆனால், (நிலை குலைந்துபோகாமல்) பொறுமையாக இருக்குமாறுதான் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2959 — Sahih al Bukhari 56:170
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ زَمَنَ الْحَرَّةِ أَتَاهُ آتٍ فَقَالَ لَهُ إِنَّ ابْنَ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ عَلَى الْمَوْتِ‏.‏ فَقَالَ لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘‘அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள், மக்களிடம் மரணத்தைச் சந்திக்க தயாராயிருக்கும்படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்கமாட்டேன்”என்று கூறினேன்.94 அத்தியாயம் :
ஹதீஸ் 2960 — Sahih al Bukhari 56:171
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ ‏"‏ يَا ابْنَ الأَكْوَعِ، أَلاَ تُبَايِعُ ‏"‏‏.‏ قَالَ قُلْتُ قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ وَأَيْضًا ‏"‏‏.‏ فَبَايَعْتُهُ الثَّانِيَةَ،‏.‏ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُسْلِمٍ، عَلَى أَىِّ شَىْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ قَالَ عَلَى الْمَوْتِ‏.‏
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (யிஇறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன்’ என்று) நபி (ஸல்) அவர்களிடம் (ஹுதைபியாவில்) உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஉ உடைய மகனே! (சலமாவே!) நீர் உறுதிமொழியளிக்க வில்லையா?” என்று கேட்டார்கள். ‘‘நான் ஏற்கெனவே உறுதிமொழியளித்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மீண்டும் (அளிப்பீராக!)” என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன். அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம்) நான், ‘‘அபூமுஸ்லிமே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2961 — Sahih al Bukhari 56:172
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُولُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِينَا أَبَدَا فَأَجَابَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள், ‘‘நாங்கள்”முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்.வாழும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்” என்று பாடியவண்ணம் (அகழ் தோண் டிக்கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்;ஆகவே,அன்சாரிகளையும்முஹாஜிர்களையும்கண்ணியப்படுத்துவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.