حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ مُجَاشِعٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَا وَأَخِي فَقُلْتُ بَايِعْنَا عَلَى الْهِجْرَةِ. فَقَالَ " مَضَتِ الْهِجْرَةُ لأَهْلِهَا ". فَقُلْتُ عَلاَمَ تُبَايِعُنَا قَالَ " عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ ".
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2963 — Sahih al Bukhari 56:173
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ مُجَاشِعٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَا وَأَخِي فَقُلْتُ بَايِعْنَا عَلَى الْهِجْرَةِ. فَقَالَ " مَضَتِ الْهِجْرَةُ لأَهْلِهَا ". فَقُلْتُ عَلاَمَ تُبَايِعُنَا قَالَ " عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ ".
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இன்று என்னிடம் ஒரு மனிதர் வந்து, ஒரு விஷயம் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர், ‘‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் அறப்போருக்குச் செல்கிறார். அப்போது தலைவர், அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்துகிறார் எனில் அவர் என்ன செய்வது?” என்று கேட்டார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன (பதில்) சொல்வதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய அறப்போர்களில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கி றோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறைதான் உத்தரவிடு வார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும்வரை நன்மையில் இருப்பீர்கள். உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக்கூடும். யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே நான் கருதுகின்றேன்” என்று கூறினேன். அத்தியாயம் :
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَتَلاَحَقَ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا عَلَى نَاضِحٍ لَنَا قَدْ أَعْيَا فَلاَ يَكَادُ يَسِيرُ فَقَالَ لِي " مَا لِبَعِيرِكَ ". قَالَ قُلْتُ عَيِيَ. قَالَ فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَزَجَرَهُ وَدَعَا لَهُ، فَمَا زَالَ بَيْنَ يَدَىِ الإِبِلِ قُدَّامَهَا يَسِيرُ. فَقَالَ لِي " كَيْفَ تَرَى بَعِيرَكَ ". قَالَ قُلْتُ بِخَيْرٍ قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ. قَالَ " أَفَتَبِيعُنِيهِ ". قَالَ فَاسْتَحْيَيْتُ، وَلَمْ يَكُنْ لَنَا نَاضِحٌ غَيْرَهُ، قَالَ فَقُلْتُ نَعَمْ. قَالَ " فَبِعْنِيهِ ". فَبِعْتُهُ إِيَّاهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى أَبْلُغَ الْمَدِينَةَ. قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي عَرُوسٌ، فَاسْتَأْذَنْتُهُ فَأَذِنَ لِي، فَتَقَدَّمْتُ النَّاسَ إِلَى الْمَدِينَةِ حَتَّى أَتَيْتُ الْمَدِينَةَ، فَلَقِيَنِي خَالِي فَسَأَلَنِي عَنِ الْبَعِيرِ، فَأَخْبَرْتُهُ بِمَا صَنَعْتُ فِيهِ فَلاَمَنِي، قَالَ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ " هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا ". فَقُلْتُ تَزَوَّجْتُ ثَيِّبًا. فَقَالَ " هَلاَّ تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ تُوُفِّيَ وَالِدِي ـ أَوِ اسْتُشْهِدَ ـ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ، فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ مِثْلَهُنَّ، فَلاَ تُؤَدِّبُهُنَّ، وَلاَ تَقُومُ عَلَيْهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ. قَالَ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ غَدَوْتُ عَلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ، وَرَدَّهُ عَلَىَّ. قَالَ الْمُغِيرَةُ هَذَا فِي قَضَائِنَا حَسَنٌ لاَ نَرَى بِهِ بَأْسًا.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘‘உமது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது தனக்குமுன் சென்றுகொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக்கொண்டு செல்லத் தொடங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உமது ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறீர்?” என்று கேட்டார்கள். நான், ‘‘நல்ல நிலையில் காண்கிறேன். அது தங்களின் வளத்தை (பரக்கத்தை)ப் பெற்றுக்கொண்டுவிட்டது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நீர் அதை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘‘சரி (விற்றுவிடுகிறேன்)” என்று பதிலளித் தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியாயின் அதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்று கூற, நான் அதன் மீது பயணம் செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனு மதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன். நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணமானவன்” என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மற்ற மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து பின் கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘‘நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதில் சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில்தான் என் தந்தை (உஹுத் போரில்) மரணித்துவிட்டார்கள் லிஅல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.லி ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் இயலாத அவர்களைப் போன்றே (அனுப வமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்துகொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காக வும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற் காகவும் (வாழ்ந்த அனுபவமுள்ள) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலை யில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தை யும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட் டார்கள். ‘‘(யிமதீனாவரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நமது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான (அறிஞர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2968 — Sahih al Bukhari 56:177
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ، فَقَالَ " مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரப்) புறப் பட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :
ஹதீஸ் 2969 — Sahih al Bukhari 56:178
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ فَزِعَ النَّاسُ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ بَطِيئًا، ثُمَّ خَرَجَ يَرْكُضُ وَحْدَهُ، فَرَكِبَ النَّاسُ يَرْكُضُونَ خَلْفَهُ، فَقَالَ " لَمْ تُرَاعُوا، إِنَّهُ لَبَحْرٌ ". فَمَا سُبِقَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் (வாகனங்களில்) ஏறிப் பாய்ந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பீதியடையாதீர்கள். (பீதியடையும்படி யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக உள்ளது” என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிய வில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2970 — Sahih al Bukhari 56:179
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، سَأَلَ زَيْدَ بْنَ أَسْلَمَ، فَقَالَ زَيْدٌ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم آشْتَرِيهِ فَقَالَ " لاَ تَشْتَرِهِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ".
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒருவரை இறைவழியில் அறப் போர் புரிய ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தேன். பிறகு அக்குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் அதை விலைக்கு வாங்கலாமா?” என்று கேட் டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத் தைத் திரும்பப்பெறாதீர்கள்” என்று கூறி னார்கள்.99 இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2971 — Sahih al Bukhari 56:180
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ تَبْتَعْهُ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தார்கள். பிறகு அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை விலைக்கு வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர் கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள். அத்தியாயம் :