حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو صَالِحٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ، وَلَكِنْ لاَ أَجِدُ حَمُولَةً، وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، وَيَشُقُّ عَلَىَّ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلَوَدِدْتُ أَنِّي قَاتَلْتُ فِي سَبِيلِ اللَّهِ فَقُتِلْتُ، ثُمَّ أُحْيِيتُ ثُمَّ قُتِلْتُ، ثُمَّ أُحْيِيتُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால், நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், சுமக்கும் வாகனம் என்னிடம் இல்லை. அதாவது என் தோழர்களை ஏற்றிச்செல்ல (போதிய) வாகன வசதி என்னிடம் இல்லை. (அதே நேரத்தில் நான் போருக்குச் செல்ல) அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மன வேதனையளிக்கிறது. மேலும், நான் இறைவழியில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.100 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2973 — Sahih al Bukhari 56:182
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ، فَحَمَلْتُ عَلَى بَكْرٍ، فَهْوَ أَوْثَقُ أَعْمَالِي فِي نَفْسِي، فَاسْتَأْجَرْتُ أَجِيرًا، فَقَاتَلَ رَجُلاً، فَعَضَّ أَحَدُهُمَا الآخَرَ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ، وَنَزَعَ ثَنِيَّتَهُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَهْدَرَهَا فَقَالَ " أَيَدْفَعُ يَدَهُ إِلَيْكَ فَتَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ ".
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களி லேயே வலுவானதாக என் மனத்தில் நான் கருதுகின்றேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தமது கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவிக் கொண்டார். அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கிவிட்டார். பல் பிடுங்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்குத் தொடுத்தார்.) அதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘‘நீ கடா ஒட்டகம் மெல்வதைப் போன்று மென்றுகொண்டிருக்க, அவர் தமது கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2974 — Sahih al Bukhari 56:183
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ أَخْبَرَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ الْقُرَظِيُّ، أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ وَكَانَ صَاحِبَ لِوَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَادَ الْحَجَّ فَرَجَّلَ.
ஸஅலபா பின் அபீமாலிக் அல் குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் கொடியை எடுத்துச் செல்பவரா யிருந்த கைஸ் பின் சஅத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பிய போது தலைவாரிக் கொண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2975 — Sahih al Bukhari 56:184
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ، وَكَانَ بِهِ رَمَدٌ، فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا فِي صَبَاحِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لأُعْطِيَنَّ الرَّايَةَ ـ أَوْ قَالَ لَيَأْخُذَنَّ ـ غَدًا رَجُلٌ يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ ـ أَوْ قَالَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ـ يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ ". فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ، وَمَا نَرْجُوهُ، فَقَالُوا هَذَا عَلِيٌّ، فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேú”’ என்று (வருத்தத் துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண் டார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (முஸ்லிம்களின்) கொடியை யிஒரு மனிதரிடம் தரப் போகிறேன்லி அல்லது யிஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்’. ‘அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்’ அல்லது ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார்’. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருந்தார்கள். உடனே மக்கள், ‘‘இதோ, அலீ அவர்கள்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். அத்தியாயம் :
ஹதீஸ் 2976 — Sahih al Bukhari 56:185
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ الْعَبَّاسَ، يَقُولُ لِلزُّبَيْرِ رضى الله عنهما هَا هُنَا أَمَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَرْكُزَ الرَّايَةَ.
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜூன் எனுமிடத்தைச் சுட்டிக்காட்டி), ‘‘நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்குதான் கொடியை நடச்சொன்னார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2977 — Sahih al Bukhari 56:186
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي ". قَالَ أَبُو هُرَيْرَةَ وَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் கொண்ட) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன்.103 (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப் பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஈலியா (ஜெரூசலம்) நகரில் இருந்தபோது (கிழக்கு) ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர் களிடையே) கூச்சல் குழப்பம் அதிகமானது; குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவை ‘லிருந்து) வெளியேற்றப்பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், ‘‘அபூகப்ஷாவின் மகனுடைய (முஹம்மது டைய) விவகாரம் வலிமைபெற்றுவிட்டது. மஞ்சள் நிறத்தாரின் (கிழக்கு ரோமானிய ரின்) அதிபர்(கூட) அவருக்கு அஞ்சுகிறார்” என்று கூறினேன்.104 அத்தியாயம் :
ஹதீஸ் 2979 — Sahih al Bukhari 56:188
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي وَ، حَدَّثَتْنِي أَيْضًا، فَاطِمَةُ عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَنَعْتُ سُفْرَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ أَبِي بَكْرٍ حِينَ أَرَادَ أَنْ يُهَاجِرَ إِلَى الْمَدِينَةِ، قَالَتْ فَلَمْ نَجِدْ لِسُفْرَتِهِ وَلاَ لِسِقَائِهِ مَا نَرْبِطُهُمَا بِهِ، فَقُلْتُ لأَبِي بَكْرٍ وَاللَّهِ مَا أَجِدُ شَيْئًا أَرْبِطُ بِهِ إِلاَّ نِطَاقِي. قَالَ فَشُقِّيهِ بِاثْنَيْنِ، فَارْبِطِيهِ بِوَاحِدٍ السِّقَاءَ وَبِالآخَرِ السُّفْرَةَ. فَفَعَلْتُ، فَلِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ.
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல விரும்பியபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றால் (தண்ணீருக்கான) தோல் பையையும் மற்றொன்றால் பயண உணவையும் கட்டு” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால்தான் எனக்கு யிஇரண்டு கச்சுடையாள்’ (தாதுந் நித்தாகைன்) எனும் (அடைமொழி) வந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2980 — Sahih al Bukhari 56:189
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் குர்பானி இறைச்சிகளைப் பயண உணவாக (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு எடுத்துச்செல்வோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2981 — Sahih al Bukhari 56:190
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّهُ، خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ ـ وَهْىَ مِنْ خَيْبَرَ وَهْىَ أَدْنَى خَيْبَرَ ـ فَصَلَّوُا الْعَصْرَ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ بِسَوِيقٍ، فَلُكْنَا فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، وَصَلَّيْنَا.
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக் காகப்) புறப்பட்டேன். மக்கள் ‘அஸ்ஸஹ்பா’ எனுமிடத்தில் லிஇதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதும், அதற்குத் தாழ்வாக உள்ளதுமாகும்லி இருந்தபோது அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்குக் குழைத்த மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பிறகு தொழுதோம்.105 அத்தியாயம் :