Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்

309 ஹதீஸ்கள் · #2782–3090

ஹதீஸ் 2982 — Sahih al Bukhari 56:191
حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه قَالَ خَفَّتْ أَزْوَادُ النَّاسِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَحْرِ إِبِلِهِمْ، فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ فَقَالَ مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ فَدَخَلَ عُمَرُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَادِ فِي النَّاسِ يَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ ‏"‏‏.‏ فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ، ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ، فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவுகள் தீர்ந்துபோய் பஞ்சத்திற் குள்ளானார்கள்; ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு அனுமதி அளித்தார்கள். (திரும்பும் போது) மக்களை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். மக்கள் உமர் (ரலி) அவர்களி டம் விவரத்தைத் தெரிவிக்கவே உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தங்கள் பயண உணவுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டுவரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக!” என்று கூறிவிட்டு, (அவையெல்லாம் கொண்டுவரப்பட்டவுடன்) அவற்றில் வளம் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி அழைத்தார்கள். மக்கள் திருப்தியடையும்வரை (தம் கைகளால்) அள்ளிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.106 அத்தியாயம் :
ஹதீஸ் 2983 — Sahih al Bukhari 56:192
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ نَحْمِلُ زَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ زَادُنَا، حَتَّى كَانَ الرَّجُلُ مِنَّا يَأْكُلُ فِي كُلِّ يَوْمٍ تَمْرَةً‏.‏ قَالَ رَجُلٌ يَا أَبَا عَبْدِ اللَّهِ، وَأَيْنَ كَانَتِ التَّمْرَةُ تَقَعُ مِنَ الرَّجُلِ قَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا، حَتَّى أَتَيْنَا الْبَحْرَ فَإِذَا حُوتٌ قَدْ قَذَفَهُ الْبَحْرُ، فَأَكَلْنَا مِنْهَا ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا مَا أَحْبَبْنَا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரிகளில் சுமந்து கொண்டு (அறப்போருக்காகப்) புறப்பட் டோம். எங்கள் பயண உணவு குறைய லாயிற்று. எந்த அளவுக்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறி வித்துக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர், ‘‘அபூஅப்தில்லாஹ்வே! (ஒருநாள் முழுவ தற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?” என்று கேட்டார்லி நாங்கள் அதையும் இழந்தபோதுதான் அதன் மதிப்பை உணர்ந்தோம்” என்றார் கள்லி இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கடல் கரைஒதுங்கச் செய்திருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாட்கள் விரும்பியவாறு உண்டோம்.107 அத்தியாயம் :
ஹதீஸ் 2984 — Sahih al Bukhari 56:193
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الأَسْوَدِ، حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ، وَلَمْ أَزِدْ عَلَى الْحَجِّ‏.‏ فَقَالَ لَهَا ‏ "‏ اذْهَبِي وَلْيَرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ ‏"‏‏.‏ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ، فَانْتَظَرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது) நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தங்கள் தோழர்கள் எல்லாரும் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜைவிட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!” என்று (ஏக்கத்துடன்) கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீ (உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தமக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை யிதன்யீம்’ எனுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை யிட்டார்கள். நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எதிர் பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்தி ருந்தார்கள்.108 அத்தியாயம் :
ஹதீஸ் 2985 — Sahih al Bukhari 56:194
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ـ رضى الله عنهما ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أُرْدِفَ عَائِشَةَ وَأُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ‏.‏
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, யிதன்யீம்’ என்னுமிடத்திலிருந்து அவர்களை உம்ரா செய்ய அழைத்துச் செல்லும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட் டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2986 — Sahih al Bukhari 56:195
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ رَدِيفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّهُمْ لَيَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا الْحَجِّ وَالْعُمْرَةِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (வாகனத்தில் அவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டுக்குமே உரக்க யிதல்பியா’ கூறிக்கொண்டிருந் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2987 — Sahih al Bukhari 56:196
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ‏.‏
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். அதில் சேணம் விரித்து குஞ்சம்வைத்த முரட்டுத் துணிமேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்திக்கொண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2988 — Sahih al Bukhari 56:197
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبَلَ يَوْمَ الْفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ، مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ وَمَعَهُ بِلاَلٌ وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ مِنَ الْحَجَبَةِ، حَتَّى أَنَاخَ فِي الْمَسْجِدِ، فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ الْبَيْتِ، فَفَتَحَ وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُسَامَةُ وَبِلاَلٌ وَعُثْمَانُ، فَمَكَثَ فِيهَا نَهَارًا طَوِيلاً ثُمَّ خَرَجَ، فَاسْتَبَقَ النَّاسُ، وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ، فَوَجَدَ بِلاَلاً وَرَاءَ الْبَابِ قَائِمًا، فَسَأَلَهُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ، قَالَ عَبْدُ اللَّهِ فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தை) பள்ளிவாசலில் மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே பகலில் நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் (கஅபாவினுள் நுழைய) ஒருவரோ டொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், ‘‘எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.109 அத்தியாயம் :
ஹதீஸ் 2989 — Sahih al Bukhari 56:198
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الاِثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ، فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خَطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் ஒரு தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.110 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2990 — Sahih al Bukhari 56:199
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனு(டைய பிரதியு)டன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.111 அத்தியாயம் :
ஹதீஸ் 2991 — Sahih al Bukhari 56:200
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَبَّحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي عَلَى أَعْنَاقِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا هَذَا مُحَمَّدٌ وَالْخَمِيسُ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ‏.‏ فَلَجَئُوا إِلَى الْحِصْنِ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ ‏ "‏ اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏"‏‏.‏ وَأَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ، فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا‏.‏ تَابَعَهُ عَلِيٌّ عَنْ سُفْيَانَ رَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டுவிட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘‘முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்). முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். உடனே கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் (போர்க்) களத்தில் இறங்கிவிட்டோமென்றால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள். எங்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் (அறுத்து) சமைத்தோம். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (நாட்டுக்) கழுதை களின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.112 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.