حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَيُّهَا النَّاسُ، ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّهُ مَعَكُمْ، إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ، تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ ".
அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (கைபர் பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறும் போது, யிலா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறிவந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள் ளுங்கள். (மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் வளமானது. அவனது புகழ் உயர்ந்தது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று தக்பீர் கூறிவந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று தஸ்பீஹ் கூறிவந்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 2994 — Sahih al Bukhari 56:203
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று யிதஸ்பீஹ்’ கூறுவோம். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ லிஅல்லது அறப்போரிலிருந்தோலி திரும்பும்போது, ஒரு குன்றில் அல்லது ஒரு மேட்டில் ஏறும்போதெல்லாம் மூன்றுமுறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க், வ லஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன லி ரப்பினா, ஹாமிதூன, ஸதகல்லாஹு வ அதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்த வன். அவனுக்கு இணையானவர் எவரு மில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் அனைத்தின்மீதும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (அவனை) வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக் குச் சிரம்பணிந்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் நாங்கள் திரும்பு கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான்; கூட்டுப்படை களைத் தன்னந்தனியாக நின்று தோற்கடித்துவிட்டான்) அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(ஆயிபூன என்பதற்குப்பின்) இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் திரும்புகிறோம்) என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறவில்லையா?” என்று கேட்டேன். அவர்கள் யிஇல்லை’ என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் ஆரோக்கியமானவராயும் ஊரிலிருக்கும்போதும் செய்துவரும் நற்செயல்களுக்குக் கிடைப்பதைப் போன்ற (அதே) நன்மை அவர் நோயுற்றுவிடும் போதும் அல்லது பிரயாணத்தில் இருக்கும் போதும் அவருக்கு எழுதப்படும். இதை அறிவித்த அபூபுர்தா (ரஹ்) அவர்கள், ‘‘இதைப் பலதடவை (என் தந்தை) அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்” என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக்கொண்டுவந்த யஸீத் பின் அபீகப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2997 — Sahih al Bukhari 56:206
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ يَوْمَ الْخَنْدَقِ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ ". قَالَ سُفْيَانُ الْحَوَارِيُّ النَّاصِرُ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது (யிஇரவில் தனியாகச் சென்று எதிரிகளை உளவு பார்ப்பதற்கு முன் வருபவர் யார்?› என்று மக்களை) அழைத்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (அப்போதும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என் (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.113 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மூலத்தில் இடம்பெற்றுள்ள யிஹவாரீ’ என்பது உதவியாளரைக் குறிக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2998 — Sahih al Bukhari 56:207
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள சிரமங்கள் குறித்து நான் அறிந்துள்ளதை மக்கள் அறிந்தால், எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்.114 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2999 — Sahih al Bukhari 56:208
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ يَحْيَى يَقُولُ وَأَنَا أَسْمَعُ فَسَقَطَ عَنِّي ـ عَنْ مَسِيرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، قَالَ فَكَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ. وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது (அரஃபா விலிருந்து முஸ்தலிஃபா திரும்பும்போது) நபி (ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் விரைவாகச் செல்வார்கள்” என்று பதிலளித்துவிட்டு, ‘‘விரைவு (நஸ்ஸு) என்பது, மிதமான வேகத்தைவிட அதிகமாக உள்ள வேகத் தைக் குறிக்கும்” என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.116 அறிவிப்பாளர் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்கள், ‘‘எனக்கு இதை அறிவித்த உர்வா (ரஹ்) அவர்கள், யிநான் உசாமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள். ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்துவிட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3000 — Sahih al Bukhari 56:209
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ ـ هُوَ ابْنُ أَسْلَمَ ـ عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ، فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى إِذَا كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ، ثُمَّ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، يَجْمَعُ بَيْنَهُمَا، وَقَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ وَجَمَعَ بَيْنَهُمَا.
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் (ரலி) அவர்கள் கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள். செம்மேகம் மறைந்தபின் (வாகனத்திலிருந்து) இறங்கி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும்போது மஃக்ரிபைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறி னார்கள்.117 அத்தியாயம் :
ஹதீஸ் 3001 — Sahih al Bukhari 56:210
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பயணம் வேதனையின் ஒரு துண்டா கும். அது உங்களின் உறக்கத்தையும் உணவையும் பானத்தையும் தடுத்து விடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர் தமது (பயணத்) தேவையை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்துசெல் லட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118 அத்தியாயம் :