ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவது யார்?” என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறே செய்தேன்” என்று பதிலளித்தார்கள்.140 அத்தியாயம் :
ஹதீஸ் 3033 — Sahih al Bukhari 56:240
قَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُبَىُّ بْنُ كَعْبٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، فَحُدِّثَ بِهِ فِي نَخْلٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، طَفِقَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَابْنُ صَيَّادٍ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا صَافِ، هَذَا مُحَمَّدٌ، فَوَثَبَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இருக்க, (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத் தில் அவனிடம் நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவ னாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று அவள் கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படை யாகப் பேசியிருப்பான்” என்று சொன்னார்கள்.141 அத்தியாயம் :
ஹதீஸ் 3034 — Sahih al Bukhari 56:241
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْخَنْدَقِ وَهُوَ يَنْقُلُ التُّرَابَ حَتَّى وَارَى التُّرَابُ شَعَرَ صَدْرِهِ، وَكَانَ رَجُلاً كَثِيرَ الشَّعَرِ وَهْوَ يَرْتَجِزُ بِرَجَزِ عَبْدِ اللَّهِ اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا إِنَّ الأَعْدَاءَ قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا يَرْفَعُ بِهَا صَوْتَهُ.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது பார்த்தேன். அப்போது அவர்கள் (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்துவிட்டிருந்தது லிமேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடி யுடையவர்களாக இருந்தார்கள்லி அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் (பின் வரும்) ஈரசைச்சீர் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம். எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! எதிரிகள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்! இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.144 அத்தியாயம் :
ஹதீஸ் 3035 — Sahih al Bukhari #3035
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ. فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ. فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
ஹதீஸ் 3036 — Sahih al Bukhari 56:242
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ. فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ. فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
ஹதீஸ் 3037 — Sahih al Bukhari 56:243
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ ـ رضى الله عنه ـ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِالْمَاءِ فِي تُرْسِهِ، وَكَانَتْ ـ يَعْنِي فَاطِمَةَ ـ تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، ثُمَّ حُشِيَ بِهِ جُرْحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரில்) ஏற்பட்ட காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘அதைப் பற்றி என்னைவிட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத் தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். (இறுதி யில் ஈச்சம்) பாய் ஒன்று எடுத்துவரப்பட்டு, கரிக்கப்பட்டது. அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3038 — Sahih al Bukhari 56:244
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى الْيَمَنِ قَالَ " يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا ".
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தபோது (எங்கள்) இருவரிடமும், ‘‘நீங்கள் (மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள். (மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டிவிடாதீர்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுங்கள்; (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக்கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3039 — Sahih al Bukhari 56:245
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ ـ وَكَانُوا خَمْسِينَ رَجُلاً ـ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ فَقَالَ " إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ، فَلاَ تَبْرَحُوا مَكَانَكُمْ هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا الْقَوْمَ وَأَوْطَأْنَاهُمْ فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ " فَهَزَمُوهُمْ. قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ، فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ الْغَنِيمَةَ ـ أَىْ قَوْمِ ـ الْغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ فَلَنُصِيبَنَّ مِنَ الْغَنِيمَةِ. فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرُ اثْنَىْ عَشَرَ رَجُلاً، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أَصَابَ مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلاً، فَقَالَ أَبُو سُفْيَانَ أَفِي الْقَوْمِ مُحَمَّدٌ ثَلاَثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُجِيبُوهُ ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ الْخَطَّابِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ أَمَّا هَؤُلاَءِ فَقَدْ قُتِلُوا. فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ فَقَالَ كَذَبْتَ وَاللَّهِ يَا عَدُوَّ اللَّهِ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لَكَ مَا يَسُوؤُكَ. قَالَ يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالْحَرْبُ سِجَالٌ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي الْقَوْمِ مُثْلَةً لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ أُعْلُ هُبَلْ، أُعْلُ هُبَلْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ تُجِيبُوا لَهُ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ " قُولُوا اللَّهُ أَعْلَى وَأَجَلُّ ". قَالَ إِنَّ لَنَا الْعُزَّى وَلاَ عُزَّى لَكُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ تُجِيبُوا لَهُ ". قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ " قُولُوا اللَّهُ مَوْلاَنَا وَلاَ مَوْلَى لَكُمْ ".
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். அவர்களிடம், ‘‘(நாங்கள் போரில் கொல்லப் பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இந்த இடத்தைவிட்டு நகராதீர் கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க்களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துக்கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் எதிரிகளைத் தோற்கடித்து விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்திய வர்களாக, தம் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய (மலையில்) ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், ‘‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று (உரக்கக்) கூறலாயினர். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத் திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர் களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துக்கொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது, நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பத்ர் போரின்போது இணை வைப்பாளர்களில் (மொத்தம்) நூற்று நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டி ருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்றுவிட்டிருந்தார்கள். ஆகவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூசுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். அவருக்குப் பதிலளிக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும், ‘‘(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களெல்லாரும் கொல்லப்பட்டு விட்டனர்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், ‘‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்குத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி)தான் இப்போது எஞ்சியுள்ளது” என்று சொன்னார்கள். (உடனே) அபூசுஃப்யான், ‘‘இந்நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போர் (வெற்றியும் தோல்வியும் மாறி மாறிவரும்) கிணற்று வாளியாகும். (உங்கள்) கூட்டத்தாரில் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவும் இல்லை” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார்.146 நபி (ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘‘ இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். அபூசுஃப்யான், ‘‘எங்களுக்கு யிஉஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியோர்) உதவியாளன் இல்லையே! என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.147 அத்தியாயம் :
ஹதீஸ் 3040 — Sahih al Bukhari 56:246
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، قَالَ وَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً سَمِعُوا صَوْتًا، قَالَ فَتَلَقَّاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ، وَهُوَ مُتَقَلِّدٌ سَيْفَهُ فَقَالَ " لَمْ تُرَاعُوا، لَمْ تُرَاعُوا ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَجَدْتُهُ بَحْرًا ". يَعْنِي الْفَرَسَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்)குணமுடையவர் களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந் தார்கள். (ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவ தாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள்; ஏதோ சப்தத்தையும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள். அப்போது, ‘யிபயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிலிருந்து ‘அல்ஃகாபா’வை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன்.148 நான் அல்ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமையொருவர் என்னைச் சந்தித்தார். நான், ‘‘உனக்குக் கேடுதான்! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்ட”’ என்று கூறினார். நான், ‘‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதிலளித்தார். உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக் கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யிஉதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)› என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். ‘‘அக்வஇன் மகன் நான்இன்று அற்பர்கள் (அழியும்) நாள்” என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்துவிட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் என் னைச் சந்தித்தார்கள். நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர்கூட அருந்தவிடாமல் அவர்களை நான் (அம் பெய்து) அவசரமாக ஓடவைத்துவிட்டேன். உடனே அவர்களைத் துரத்திச் சென்று பிடித்துவரப் படையனுப்புங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஇன் மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள்! அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.149 அத்தியாயம் :