حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ فَقَالَ يَا أَبَا عُمَارَةَ، أَوَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ الْبَرَاءُ وَأَنَا أَسْمَعُ أَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُوَلِّ يَوْمَئِذٍ، كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ، فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ، فَجَعَلَ يَقُولُ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ قَالَ فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ.
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். நான் கேட்டுக்கொண்டிருக்க, பராஉ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பொறுத்த வரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்லவில்லை. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, யிநான் இறைத்தூதர்தான். (இதில்) பொய் யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன்’ என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களைவிடத் துணிச்சல் மிகுந்த எவரும் மக்களிடையே காணப்படவில்லை” என்று கூறினார்கள்.151 அத்தியாயம் :
ஹதீஸ் 3043 — Sahih al Bukhari 56:249
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ ـ هُوَ ابْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ ـ هُوَ ابْنُ مُعَاذٍ ـ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُومُوا إِلَى سَيِّدِكُمْ ". فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ ". قَالَ فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ. قَالَ " لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ الْمَلِكِ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும் படி ஆளனுப்பினார்கள். லிசஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்தான் (அகழ்ப் போரில் காயமடைந்து) இருந்தார்கள்லி அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று (அன்சாரிகளிடம்) கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நான் அவர்களில் உள்ள போர் வீரர்களைக் கொன்றுவிட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தை களையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக் கின்றேன்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்றார்கள்.152 அத்தியாயம் :
ஹதீஸ் 3044 — Sahih al Bukhari 56:250
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ " اقْتُلُوهُ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில், தலையில் இரும்புத் தொப்பி அணிந்துகொண்டு (மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள்.153 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்களைத் தலைவராக்கி னார்கள்.154 அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள யிஹத்ஆ’ எனுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் எனப்படும் ஒரு கிளை’னருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளை ‘னர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் இருநூறு வீரர்களைத் தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். (வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களை உண்ட இடத்தில் அவற்றைக் கண்டனர். அப்போது ‘‘இது யஸ்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம்பழம்” என்று கூறினர். எனவே, அவர்கள் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றுகொண்டனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தார் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்” என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறு தியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” என்று கூறி விட்டு, ‘‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள்மீது எதிரிகள் அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்று விட்டனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கினார்கள். அவர்கள் அன்சாரியான குபைப் (ரலி) அவர்களும், இப்னு தஸினா (ரலி) அவர்களும் மற்றுமொருவரும் ஆவர்.155 இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘‘இது முதலாவது நம்பிக்கை துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு (நல்ல) ஒரு பாடமாக அமைந்துள்ளனர்” என்று (எதிரிகளிடம்) கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி கட்டாயப்படுத்தினர். அதற்கு அவர் மறுத்துவிடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் (ரலி) அவர்களையும் இப்னு தஸினா (ரலி) அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர். இது பத்ர் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் விலைக்கு வாங்கினர். (அந்தக் குலத்தின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குபைப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதம் கழியும்வரை) கைதியாக இருந்தார்கள். உபைதுல்லாஹ் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹாரிஸ் பின் ஆமிரின் மகள் என்னி டம் கூறினார்:156 குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்றுகூடியபோது, குபைப் (மறைவான உறுப்புகளிலிருந்த) முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக்கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என் குழந்தை ஒருவனை அவர் கையிலெடுத்துக்கொண்டார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக்கத்தி இருக்க, தமது மடியின் மீது அவனை உட்காரவைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந் தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்துகொண்டார். உடனே, ‘‘நான் இவனைக் கொன்றுவிடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒருநாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. லிமேலும், ஹாரிஸின் மகள், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண வாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்” என்று கூறி வந்தார்லி (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.) (தொடர்ந்து அறிவிப்பாளர் கூறு கிறார்:) அவர்கள் குபைப் (ரலி) அவர்களைக் கொல்வதற்காக புனித ஹரம் எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்” என்று கேட்டார்கள். (தொழுது முடித்த)பிறகு, ‘‘நான் (மரணத்தைக் கண்டு) அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக்கொண்டு (ஒருவர் விடாமல்) பழிவாங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நான்முஸ்லிமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லைஎந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காககொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே!) நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான். என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் (ரலி) அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து கட்டிவைத்துக் கொல்லப் படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத் கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து) விட்டான். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள். குறைஷி இறைமறுப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப் பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்துகொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது குறைஷி தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். (ஆஸிம் அவர்களின் உடலில் ஓர் உறுப்பைத் துண்டிக்க எதிரிகள் முற்பட்ட போது) ஆஸிம் (ரலி) அவர்களுக்கு (பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும்படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷித் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. ஆகவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.157 அத்தியாயம் :
ஹதீஸ் 3046 — Sahih al Bukhari 56:252
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فُكُّوا الْعَانِيَ ـ يَعْنِي الأَسِيرَ ـ وَأَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيضَ ".
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவருக்கு உணவளி யுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3047 — Sahih al Bukhari 56:253
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُطَرِّفٌ، أَنَّ عَامِرًا، حَدَّثَهُمْ عَنْ أَبِي جُحَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ لِعَلِيٍّ ـ رضى الله عنه هَلْ عِنْدَكُمْ شَىْءٌ مِنَ الْوَحْىِ إِلاَّ مَا فِي كِتَابِ اللَّهِ قَالَ وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا أَعْلَمُهُ إِلاَّ فَهْمًا يُعْطِيهِ اللَّهُ رَجُلاً فِي الْقُرْآنِ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ وَفَكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ.
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்ப தைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட் டேன். அவர்கள், ‘‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனில் அளிக் கின்ற விளக்கத்தையும் இந்த ஏட்டில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் இறைமறுப்பாளனுக்குப் பதிலாகக் கொல்லக் கூடாது ஆகியவை” என்று பதிலளித்தார்கள்.159 அத்தியாயம் :
ஹதீஸ் 3048 — Sahih al Bukhari 56:254
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. فَقَالَ " لاَ تَدَعُونَ مِنْهَا دِرْهَمًا ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை நாங்கள் (வாங்காமல்) விட்டு விட அனுமதியுங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிணைத் தொகை ‘லிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.160 அத்தியாயம் :
ஹதீஸ் 3049 — Sahih al Bukhari 56:255
وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ، فَجَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلاً. فَقَالَ " خُذْ ". فَأَعْطَاهُ فِي ثَوْبِهِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி கொண்டுவரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ர் போரில் கைதியாகப் பிடிபட்டபோது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தி யிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காக வும் பிணைத் தொகை செலுத்தியிருக்கி றேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எடுத்துக்கொள்வீராக!” என்று கூறி, (நிதியை) அவரது ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.161 அத்தியாயம் :
ஹதீஸ் 3050 — Sahih al Bukhari 56:256
حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ جَاءَ فِي أُسَارَى بَدْرٍ ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ர் போர்க் கைதிகளின் (பிணைத்தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.162 அத்தியாயம் :
ஹதீஸ் 3051 — Sahih al Bukhari 56:257
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهْوَ فِي سَفَرٍ، فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اطْلُبُوهُ وَاقْتُلُوهُ ". فَقَتَلَهُ فَنَفَّلَهُ سَلَبَهُ.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பாளர்களில் உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பிறகு திரும்பிச் சென்றுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘‘அவனைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.163 நான் அவனை (தேடிப்பிடித்துக்) கொன்றுவிட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமை களை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) கூடுதலாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். அத்தியாயம் :