حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எனக்குப்பின் வருகின்ற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்: அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்குமேல் அவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது.164 அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, சரளைக்கல் பூமியை நனைத்துவிடும் அளவுக்குக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிறகு கூறினார்கள்: அந்த வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘‘ஓர் ஏட்டை என்னி டம் கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை அழைக்கின்ற (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் இருக்கும்) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள்.166 மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களை வலியுறுத்தினார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர் களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக்குழுவினருக்கு நான் வழங்கிவந்ததைப் போன்று நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள். லிமூன்றாவது கட்டளையை நான் மறந்துவிட்டேன்லி யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஃகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், யிமக்கா, மதீனா, யமாமா, யமன் ஆகியவை’ என்று பதிலளித்தார்கள். மேலும் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அல்அர்ஜ்’ எனும் இடம்தான் திஹாமாவின் முதற் கட்டமாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 3054 — Sahih al Bukhari 56:260
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَلِلْوُفُودِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ، أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ ". فَلَبِثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ حَتَّى أَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ " إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لا خَلاَقَ لَهُ ". ثُمَّ أَرْسَلْتَ إِلَىَّ بِهَذِهِ فَقَالَ " تَبِيعُهَا، أَوْ تُصِيبُ بِهَا بَعْضَ حَاجَتِكَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப் படுவதைக் கண்டார்கள் அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை விலைக்கு வாங்கி, பெருநாளின்போதும் தூதுக்குழுக்கள் வருகை தரும்போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்” லிஅல்லது ‘‘(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்கள்தான் இதை அணிவார்கள்”லி என்று சொன்னார்கள். அல்லாஹ் நாடிய (சிறிது) காலம் கழிந் தது. நபி (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாத வருடைய ஆடையாகும்; லிஅல்லது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’லி என்று கூறினீர் கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே!” என்று கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதையேனும் இதைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வீர்கள் (என்பதற்காகவே இதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தேன்)” என்று கூறினார்கள்.167 அத்தியாயம் :
ஹதீஸ் 3055 — Sahih al Bukhari 56:261
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ انْطَلَقَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قِبَلَ ابْنِ صَيَّادٍ حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ يَوْمَئِذٍ ابْنُ صَيَّادٍ يَحْتَلِمُ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ". فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ " قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَاذَا تَرَى ". قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خُلِطَ عَلَيْكَ الأَمْرُ ". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا ". قَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ". قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களோடு (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.168 யிபனூ மஃகாலா’ குலத் தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டி ருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டி ருந்தான். நபி (ஸல்) அவர்கள் தமது கரத் தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணர வில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்துவிட்டு,”நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) யிஉம்மீ’களின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் இறைத்தூதர் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கின்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள்மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘‘எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்ற”’ என்றான். நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன என்று சொல்)” எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத், அது யிதுக்’ என்று கூறினான். (அதாவது யிதுகான்’ என்பதை யிதுக்’ என அரைகுறையாகச் சொன்னான்.)169 உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனது கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்; அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக் குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவ னில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்று சொன்னார்கள்.170 அத்தியாயம் :
ஹதீஸ் 3056 — Sahih al Bukhari #3056
قَالَ ابْنُ عُمَرَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ طَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ وَهْوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ أَىْ صَافِ ـ وَهْوَ اسْمُهُ ـ فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ". وَقَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே! லிஇது இப்னு ஸய்யாதின் பெயராகும்லி என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்று சொன்னார்கள்.171 அத்தியாயம் :
ஹதீஸ் 3057 — Sahih al Bukhari 56:262
قَالَ ابْنُ عُمَرَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ طَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ وَهْوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ أَىْ صَافِ ـ وَهْوَ اسْمُهُ ـ فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ". وَقَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே! லிஇது இப்னு ஸய்யாதின் பெயராகும்லி என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்று சொன்னார்கள்.171 அத்தியாயம் :
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச்சென்றுள்ளாரா?”174 என்று கேட் டார்கள். பிறகு, ‘‘நாளை நாம் யிபனூ கினானா’ பள்ளத்தாக்கான ‘அல்முஹஸ்ஸப்’ எனும் இடத்தில் தங்குவோம். அங்குதான், குறைஷியர் இறைமறுப்பில் நிலைத்திருப் போம் எனச் சங்கல்பம் ஏற்றனர்” என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷியரிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளமாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும்மாட்டோம்” என்று ஒப்பந்தம் செய்திருந் ததையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.175 இங்கு யிபள்ளத்தாக்கு’ என்பதைக் குறிக்க யிகைஃப்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது லி என அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
உமர் (ரலி) அவர்களின் (முன் னாள்) அடிமை அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், (ஸகாத் கால்நடைகளின்) பிரத்யேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு யிஹுû” எனப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது (அவரிடம் பின்வருமாறு) கூறினார்கள்: ஹுனையே! உன் கையை முஸ்லிம் களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனையை அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்துபோய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு வந்து, ‘‘இறைநம்பிக்கையாளரின் தலைவரே! (இறைநம்பிக்கையாளரின் தலைவரே!) என்று அரற்றுவார்கள். அவர்களை (இதே நிலையில்) நான் விட்டுவிட முடியுமா? உனக்குத் தந்தை இல்லாமல் போக! (அவர்களை நான் விட்டுவிட்டால், பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும்தான் அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிவரும்.) ஆனால், (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை)விட (அரசின் பிரத்யேக மேய்ச்சல் நிலத்திலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவதே எனக்கு எளிதானதாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவர்களின் பகுதியில் மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கிய தால்) இவர்களுக்கு நான் அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்தில் போரிட்டிருக் கிறார்கள்; இஸ்லாத்தில் இணையும்போது இதனுடன்தான் இணைந்துள்ளார்கள். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக்கூட (கையகப்படுத்தி) பிரத்யேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்கமாட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 3060 — Sahih al Bukhari 56:265
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اكْتُبُوا لِي مَنْ تَلَفَّظَ بِالإِسْلاَمِ مِنَ النَّاسِ ". فَكَتَبْنَا لَهُ أَلْفًا وَخَمْسَمِائَةِ رَجُلٍ، فَقُلْنَا نَخَافُ وَنَحْنُ أَلْفٌ وَخَمْسُمِائَةٍ فَلَقَدْ رَأَيْتُنَا ابْتُلِينَا حَتَّى إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي وَحْدَهُ وَهْوَ خَائِفٌ. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، فَوَجَدْنَاهُمْ خَمْسَمِائَةٍ. قَالَ أَبُو مُعَاوِيَةَ مَا بَيْنَ سِتِّمِائَةٍ إِلَى سَبْعِمِائَةٍ.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மக்களில் இஸ்லாத்தை மொழிந்தவர்களின் பெயர்களை எனக்காக (கணக் கெடுத்து)ப் பதிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.176 நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பேரின் பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், ‘‘நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?” என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப் பட்டுக்கொண்டு தனியாகத் தொழுமளவுக்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘(நாங்கள் கணக்கெடுத்தபோது) ஐநூறு பேரைக் கண்டோம்” என்று காணப்படு கிறது. ஆபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அறுநூறு முதல் எழுநூறு வரை’ என்று இடம்பெற்றுள்ளது.177 அத்தியாயம் :
ஹதீஸ் 3061 — Sahih al Bukhari 56:266
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي حَاجَّةٌ. قَالَ " ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான்) இன்னின்ன அறப்போர்களில் (கலந்துகொள்ள பெயர் கொடுத்துள்ளேன். அவற் றில்) என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்யவிருக்கிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் திரும்பிச் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.178 அத்தியாயம் :