حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الإِسْلاَمَ " هَذَا مِنْ أَهْلِ النَّارِ ". فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ قِتَالاً شَدِيدًا، فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، الَّذِي قُلْتَ إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَدْ قَاتَلَ الْيَوْمَ قِتَالاً شَدِيدًا وَقَدْ مَاتَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِلَى النَّارِ ". قَالَ فَكَادَ بَعْضُ النَّاسِ أَنْ يَرْتَابَ، فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ، وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا. فَلَمَّا كَانَ مِنَ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ، فَقَتَلَ نَفْسَهُ، فَأُخْبِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ " اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ". ثُمَّ أَمَرَ بِلاَلاً فَنَادَى بِالنَّاسِ " إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (ஹுனைன் அல்லது கைபர் போரில்) கலந்துகொண்டோம். தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் நரகவாசி களில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அம்மனிதர் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, யிஇவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர் களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பைச்) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருக்க, ‘‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன் என்பதற்கு நானே சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘‘முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். அல்லாஹ் இந்த மார்க்கத் திற்குப் பாவியான மனிதராலும் வலுவூட்டு கின்றான்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்கள்.179 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3063 — Sahih al Bukhari 56:268
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ عَلَيْهِ، وَمَا يَسُرُّنِي ـ أَوْ قَالَ مَا يَسُرُّهُمْ ـ أَنَّهُمْ عِنْدَنَا ". وَقَالَ وَإِنَّ عَيْنَيْهِ لَتَذْرِفَانِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரின்போது போர்க்கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.180 உரையில், ‘‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் அல் ஹாரிஸா பிடித்துக்கொண்டார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதாலிப் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக் காது” என்றோ, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்காது” என்றோ சொன்னார்கள்.181 இதைச் சொல்லும்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.182 அத்தியாயம் :
ஹதீஸ் 3064 — Sahih al Bukhari 56:269
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لِحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، فَأَمَدَّهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمُ الْقُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لِحْيَانَ. قَالَ قَتَادَةُ وَحَدَّثَنَا أَنَسٌ أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا بِأَنَّا قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறினர்.183 மேலும், தம் சமுதாயத்தாருக்கெதிராக ஒரு படையனுப்பி உதவுமாறு நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்ட னர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் யிகாரீகள்’ (குர்ஆனை ம”ம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் விறகு சேகரிப்பார்கள்; இரவில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், யிபிஃரு மஊனா’184 எனுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். (செய்தி அறிந்த) நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதிவந்தோம். ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம்; அவன் எங்களைக் குறித்துத் திருப்தி அடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தி அடைந் தோம் என்று எங்கள் சமுதாயத்தாருக்கு எங்களைப் பற்றித் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம். பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.185 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3065 — Sahih al Bukhari 56:270
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ. تَابَعَهُ مُعَاذٌ وَعَبْدُ الأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِي طَلْحَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தாரை வெற்றிகொண்டால் (அவர்களின்) திறந்த வெளிப்பகுதியில் மூன்று நாட்கள் தங்குவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3066 — Sahih al Bukhari 56:271
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، أَخْبَرَهُ قَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஜிஅரானா’வி லிருந்து (புறப்பட்டு) உம்ரா செய்தார்கள். அங்குதான் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை அவர்கள் பங்கிட்டார்கள்.186 அத்தியாயம் :
ஹதீஸ் 3067 — Sahih al Bukhari 56:272
قَالَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ذَهَبَ فَرَسٌ لَهُ، فَأَخَذَهُ الْعَدُوُّ، فَظَهَرَ عَلَيْهِ الْمُسْلِمُونَ فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ، فَرَدَّهُ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானி யருடன் சேர்ந்துகொண்டான். ரோமர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அந்த அடிமையை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானியருடன் சேர்ந்துகொண்டான். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் அந்த ரோமர்களை வெற்றி கொண்டபோது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களின் குதிரையொன்று ஓடிப்போய் (கிழக்கு) ரோமானியர்களிடம் சிக்கிக்கொண்டது. (கிழக்கு) ரோமை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டார்கள். அப்போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (குதிரை ஓடிப்போனது என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஆர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது (அடிப்படையில்), காட்டுக் கழுதையைக் குறிக்கும் ‘அய்ர்’ எனும் சொல்லில் இருந்து வந்தது. இங்கு இது, வெருண்டோடுவதைக் குறிக்கும். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (கிழக்கு ரோமானியரைப் போர்க் களத்தில்) சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந் தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3070 — Sahih al Bukhari 56:275
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا، وَطَحَنْتُ صَاعًا مِنْ شَعِيرٍ، فَتَعَالَ أَنْتَ وَنَفَرٌ، فَصَاحَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " يَا أَهْلَ الْخَنْدَقِ، إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ سُؤْرًا، فَحَىَّ هَلاً بِكُمْ ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போரின்போது) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து மாவாக்கியுள் ளேன்; ஆகவே, தாங்களும் வேறு சிலரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அகழ்வாசிகளே! ஜாபிர் விருந்துணவு தயாரித்திருக்கிறார். விரைந்து வாருங்கள்” என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.188 அத்தியாயம் :
ஹதீஸ் 3071 — Sahih al Bukhari 56:276
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَبِي وَعَلَىَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَنَهْ سَنَهْ ". قَالَ عَبْدُ اللَّهِ وَهْىَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ. قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَبَرَنِي أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْهَا ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ " أَبْلِي وَأَخْلِفِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي ". قَالَ عَبْدُ اللَّهِ فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ.
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (சிறுமியாக இருந்தபோது) என் தந்தையுடன் சென்றேன். அப்போது நான் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இவள்) நன்றாயிருக் கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்” என்று சொன்னார்கள். நான் (நபி (ஸல்) அவர் களின் இரு தோள்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே என் தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழைய தாக்கிக்) கிழித்து நைந்துபோகச்செய்துவிடு. பிறகும் அதைக் கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்துபோகச்செய்துவிடு” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், ‘‘அந்தச் சட்டை, பழுத்துப்போய் மக்களால் பேசப் படும் அளவுக்கு உம்மு காலித் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய யிசனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்” என்றும் கூறுகிறார்கள்.189 அத்தியாயம் :