حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளால் (அதாவது கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1614 — Sahih al Bukhari #1614
حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،، ذَكَرْتُ لِعُرْوَةَ، قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَّ أَوَّلَ، شَىْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً، ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ مِثْلَهُ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ ـ رضى الله عنه ـ فَأَوَّلُ شَىْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ، ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا.
உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1615 — Sahih al Bukhari 25:100
حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،، ذَكَرْتُ لِعُرْوَةَ، قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَّ أَوَّلَ، شَىْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً، ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ مِثْلَهُ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ ـ رضى الله عنه ـ فَأَوَّلُ شَىْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ، ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا.
உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1616 — Sahih al Bukhari 25:101
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ فِي الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَوَّلَ مَا يَقْدَمُ سَعَى ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعَةً، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ (மக்கா) வந்ததும் முதன் முதலாக தவாஃப் செய்வார்கள். அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து ஓடுவார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையே சுற்றுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1617 — Sahih al Bukhari 25:102
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الأَوَّلَ يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَيَمْشِي أَرْبَعَةً، وَأَنَّهُ كَانَ يَسْعَى بَطْنَ الْمَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத் தில் முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக் கிடையே சுற்றும்போது, ‘பத்னுல் மசீல்’ எனும் (நீரோடை) பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள். அத்தியாயம் :
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் (அவரிடம், “நபியவர்களின் துணைவியர் இவ்வாறு தவாஃப் செய்தது, (திரைக்கப்பால் நின்றே அவர்களிடம் பேச வேண்டும் என்ற) ‘ஹிஜாப்’ சட்டம் வந்த பின்பா? அல்லது அதற்கு முன்பா?” என்று கேட்டேன். அவர் “ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி)மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இதை நான் கண்டேன்” என்றார். நான், “அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்துவிடுவார்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கலந்துவிடமாட்டார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களுடன் கலக்காமல் ஓரமாக தவாஃப் செய்வார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கை யாளர்களின் தாயே! நடங்கள்! நாம் (சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்’ என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீ போ(ய் முத்தமிடு; நான் வரவில்லை)!’ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேற்றப்படும்வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர்கள் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கி (இஃதிகாஃபில்) இருந்தார்கள்” என்று கூறினார். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “(அப்போது) அவர்களின் ஹிஜாப் என்னவாக இருந்தது?” எனக் கேட்டேன். “ஆயிஷா (ரலி) அவர்கள், துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை இருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இளஞ்சிவப்பு நிறமுள்ள சட்டை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1619 — Sahih al Bukhari 25:104
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. فَقَالَ " طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ، وَأَنْتِ رَاكِبَةٌ ". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، وَهْوَ يَقْرَأُ {وَالطُّورِ * وَكِتَابٍ مَسْطُورٍ}
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) “நான் நோயுற்றுள் ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்” என்றார்கள். நான் அவ்வாறே தவாஃப் செய்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹு) தொழுதுகொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1620 — Sahih al Bukhari 25:105
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ بِإِنْسَانٍ رَبَطَ يَدَهُ إِلَى إِنْسَانٍ بِسَيْرٍ، أَوْ بِخَيْطٍ، أَوْ بِشَىْءٍ غَيْرِ ذَلِكَ، فَقَطَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، ثُمَّ قَالَ " قُدْهُ بِيَدِهِ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதருக்கு அருகே சென்றார்கள். அவர் தமது கையை வாரினாலோ அல்லது கயிற் றாலோ அல்லது வேறு ஒரு பொருளாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டி (தவாஃப் செய்து)கொண்டிருந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் துண்டித்துவிட்டு, “இவரது கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!” என்று (அந்த மற்றொருவரிடம்) கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1621 — Sahih al Bukhari 25:106
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1622 — Sahih al Bukhari 25:107
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ " أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக யாரும் தவாஃப் செய்யக் கூடாது” எனப் பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் என்னையும் ஒருவனாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அத்தியாயம் :