حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَقْدَمُ مَكَّةَ، إِذَا اسْتَلَمَ الرُّكْنَ الأَسْوَدَ أَوَّلَ مَا يَطُوفُ يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ مِنَ السَّبْعِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்த மிட்டதையும், ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் (தோள்களைக் குலுக்கி) விரைவாக ஓடியதையும் நான் பார்த்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1604 — Sahih al Bukhari 25:90
حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَعَى النَّبِيُّ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَشْوَاطٍ وَمَشَى أَرْبَعَةً فِي الْحَجِّ وَالْعُمْرَةِ. تَابَعَهُ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்கு சுற்றுகளில் (சாதாரண மாக) நடந்து செல்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1605 — Sahih al Bukhari 25:91
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ لِلرُّكْنِ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَلَمَكَ مَا اسْتَلَمْتُكَ. فَاسْتَلَمَهُ، ثُمَّ قَالَ فَمَا لَنَا وَلِلرَّمَلِ إِنَّمَا كُنَّا رَاءَيْنَا بِهِ الْمُشْرِكِينَ، وَقَدْ أَهْلَكَهُمُ اللَّهُ. ثُمَّ قَالَ شَىْءٌ صَنَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ نُحِبُّ أَنْ نَتْرُكَهُ.
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதவாது: உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன்; நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால், நிச்சயமாக நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்கள். பிறகு “நாம் ஏன் இப்போது தோள் களைக் குலுக்கியவாறு ஓடவேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற் காகத்தானே! ஆனால், இன்று அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான். (பிறகு ஏன் செய்ய வேண்டும்?)” எனக் கூறிவிட்டு, “எனினும், இது நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்று. அதை விட்டுவிட நாம் விரும்ப வில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1606 — Sahih al Bukhari 25:92
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ، مُنْذُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُمَا. قُلْتُ لِنَافِعٍ أَكَانَ ابْنُ عُمَرَ يَمْشِي بَيْنَ الرُّكْنَيْنِ قَالَ إِنَّمَا كَانَ يَمْشِي لِيَكُونَ أَيْسَرَ لاِسْتِلاَمِهِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததி லிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை. அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபி (ரஹ்) அவர்களிடம், “இப்னு உமர் (ரலி) அவர்கள், அவ்விரு மூலைகளுக்கிடையே (மட்டும் சாதாரண மாக) நடந்து செல்வார்களா?” என்று கேட்டேன். “முத்தமிடுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்து செல்வார்கள்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1607 — Sahih al Bukhari 25:93
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ. تَابَعَهُ الدَّرَاوَرْدِيُّ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1608 — Sahih al Bukhari 25:94
وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، أَنَّهُ قَالَ وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنَ الْبَيْتِ، وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ. فَقَالَ لَيْسَ شَىْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا، وَكَانَ ابْنُ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ.
அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த ஆலயத்தில் (முத்தமிடத்) தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை” என்றார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், எல்லா மூலைகளையும் முத்த மிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1609 — Sahih al Bukhari 25:95
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُ مِنَ الْبَيْتِ إِلاَّ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்த தில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1610 — Sahih al Bukhari 25:96
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا وَرْقَاءُ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبَّلَ الْحَجَرَ وَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ.
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘ஹஜருல் அஸ்வத்’ (எனும் கறுப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்த மிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1611 — Sahih al Bukhari 25:97
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ اسْتِلاَمِ الْحَجَرِ،. فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ. قَالَ قُلْتُ أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ.
ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்” எனக் கூறினார்கள். அப்போது நான், “கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருதுகிறீர் களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உமது ஊராகிய) யமனில் வைத்துக் கொள்வீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடு வதையும் கண்டேன்” என (மீண்டும்) கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1612 — Sahih al Bukhari 25:98
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார் கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் அதை நோக்கிச் சைகை செய்தார்கள். அத்தியாயம் :