حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الْحَجَّاجِ بْنِ حَجَّاجٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ ". تَابَعَهُ أَبَانُ وَعِمْرَانُ عَنْ قَتَادَةَ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ عَنْ شُعْبَةَ قَالَ " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ الْبَيْتُ ". وَالأَوَّلُ أَكْثَرُ، سَمِعَ قَتَادَةُ عَبْدَ اللَّهِ وَعَبْدُ اللَّهِ أَبَا سَعِيدٍ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த (கஅபா) ஆலயத்தில் நிச்சயமாக ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கஅபாவில் ஹஜ் நடைபெறாத நிலை வராத வரை யுகமுடிவு நாள் வராது” என்று காணப்படுகிறது. முதல் அறிவிப்பே பெரும்பான்மை (யோரால் அறிவிக்கப்பட்டது) ஆகும். அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷைபா பின் உஸ்மான் பின் அபீதல்ஹா (ரலி) அவர்களுடன் கஅபா வில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா (ரலி) அவர்கள், “இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அப்போது ‘இந்த கஅபாவில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் பங்குவைக்காமல் விடுவதில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘தங்களுடைய தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அவ்வாறு செய்யவில்லையே?’ எனக் கூறினேன். அதற்கு ‘அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என்றார்கள்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 1595 — Sahih al Bukhari 25:81
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ، يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வெளிப் பக்கமாக) வளைந்த கால் களை உடைய கறுப்பு நிறத்தவர் ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்து கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பதைப் போன்றிருக்கிறது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1596 — Sahih al Bukhari 25:82
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களை உடைய மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1597 — Sahih al Bukhari 25:83
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ.
ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ அருகில் வந்து அதை முத்த மிட்டுவிட்டு, “நீ தீங்கோ நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிரா விட்டால், உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள்.30 அத்தியாயம் :
ஹதீஸ் 1598 — Sahih al Bukhari 25:84
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحُوا، كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ، فَلَقِيتُ بِلاَلاً فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ، بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவி னுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது முதல் ஆளாக நானே உள்ளே நுழைந்தேன். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், ‘ஆம்! வலப் பக்க இரு தூண்களுக்கு மத்தியில்’ எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபா வுக்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கும் தமக்கும் இடையே சுமார் மூன்று முழம் இருக்குமாறு நின்று தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் கூறினார்களோ அந்த இடத்தைக் கண்டறிந்து, அதில் தொழ விரும்பியே இவ்வாறு செய்தார்கள். (இருப்பினும்,) கஅபாவுக்குள் விரும்பிய எத்திசையில் தொழுதாலும் அது யார்மீதும் தவறாகாது. அத்தியாயம் :
ஹதீஸ் 1600 — Sahih al Bukhari 25:86
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَقَالَ لَهُ رَجُلٌ أَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَعْبَةَ قَالَ لاَ.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ரா செய்தபோது தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிட மிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றி ருந்தார். அவரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?” என ஒருவர் கேட்டதற்கு அவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 1601 — Sahih al Bukhari 25:87
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الآلِهَةُ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَاتَلَهُمُ اللَّهُ أَمَا وَاللَّهِ قَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ ". فَدَخَلَ الْبَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்துவிட்டார்கள்; பிறகு அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங் களும் இருந்தன. அவற்றையும் வெளி யேற்றினார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(தைச் செய்த)வர்களை அல்லாஹ் அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இவர்கள் அறிந்தே உள்ளார்கள்” என்று கூறினார்கள். பிறகு கஅபாவினுள் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறினார்கள்; அங்கு தொழவில்லை.33 அத்தியாயம் :
ஹதீஸ் 1602 — Sahih al Bukhari 25:88
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ فَقَالَ الْمُشْرِكُونَ إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ، وَقَدْ وَهَنَهُمْ حُمَّى يَثْرِبَ. فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَرْمُلُوا الأَشْوَاطَ الثَّلاَثَةَ، وَأَنْ يَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ، وَلَمْ يَمْنَعْهُ أَنْ يَأْمُرَهُمْ أَنْ يَرْمُلُوا الأَشْوَاطَ كُلَّهَا إِلاَّ الإِبْقَاءُ عَلَيْهِمْ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்கா) வந்தனர். அப்போது (குறைஷி) இணைவைப்பாளர் கள், “யஸ்ரிபின் (மதீனா) காய்ச்சலால் அவர்கள் நலிவடைந்த நிலையில் அவர் (முஹம்மத்) உங்களிடம் வந்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டனர். அப்போது (நலிவடையவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் (தவாஃபில் முதல்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளை யிட்டார்கள். தவாஃபின் எல்லாச் சுற்று களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரண மாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிடவில்லை. அத்தியாயம் :