Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1583 — Sahih al Bukhari 25:69
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏"‏ أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ‏.‏ قَالَ ‏"‏ لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ ‏"‏‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ لَئِنْ كَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ، إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷா! நிச்சயமாக உன் சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை கட்டியபோது இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தைக் குறைத்து விட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு நீங்கள் அதை மாற்றலாமல்லவா?” எனக் கேட்டேன். “உன் சமுதாயத்தார் இறைமறுப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லை என்றால், அவ்வாறே நான் செய்திருப்பேன்” என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்(களிடம் தெரிவித்தபோது அவர்)கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்ன வற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ர்’ (எனும் வளைந்த) பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை முத்தமிடாததற்குக் காரணம், இறை இல்லமான கஅபாவானது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப் படாமல் (சிறிது விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1584 — Sahih al Bukhari 25:70
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ ‏"‏ إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ ‏"‏‏.‏ قُلْتُ فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ ‏"‏ فَعَلَ ذَلِكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (கஅபா வை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “அப்படியானால், கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உன் சமூகத்தாருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். நான் “கஅபாவின் வாசலை உயரமாக வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் நாடியவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உன் சமுதாயத்தார் அவ்வாறு செய்தார்கள். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1585 — Sahih al Bukhari 25:71
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْلاَ حَدَاثَةُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْبَيْتَ ثُمَّ لَبَنَيْتُهُ عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَإِنَّ قُرَيْشًا اسْتَقْصَرَتْ بِنَاءَهُ ـ وَجَعَلْتُ لَهُ خَلْفًا ‏"‏‏.‏ قَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ خَلْفًا يَعْنِي بَابًا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சமுதாயத்தார் (குறைஷி யர்) இறைமறுப்புக்கு நெருங்கிய காலத்த வர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் அதை (அடித்தளத்தைவிட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்ட னர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (‘பின்புற வாசல்’ என்பதைக் குறிக்க வந்துள்ள) ‘கல்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘வாசல்’ எனப் பொருள் செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1586 — Sahih al Bukhari 25:72
حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏ "‏ يَا عَائِشَةُ لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لأَمَرْتُ بِالْبَيْتِ فَهُدِمَ، فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ وَأَلْزَقْتُهُ بِالأَرْضِ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا، فَبَلَغْتُ بِهِ أَسَاسَ إِبْرَاهِيمَ ‏"‏‏.‏ فَذَلِكَ الَّذِي حَمَلَ ابْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ عَلَى هَدْمِهِ‏.‏ قَالَ يَزِيدُ وَشَهِدْتُ ابْنَ الزُّبَيْرِ حِينَ هَدَمَهُ وَبَنَاهُ وَأَدْخَلَ فِيهِ مِنَ الْحِجْرِ، وَقَدْ رَأَيْتُ أَسَاسَ إِبْرَاهِيمَ حِجَارَةً كَأَسْنِمَةِ الإِبِلِ‏.‏ قَالَ جَرِيرٌ فَقُلْتُ لَهُ أَيْنَ مَوْضِعُهُ قَالَ أُرِيكَهُ الآنَ‏.‏ فَدَخَلْتُ مَعَهُ الْحِجْرَ فَأَشَارَ إِلَى مَكَانٍ فَقَالَ هَا هُنَا‏.‏ قَالَ جَرِيرٌ فَحَزَرْتُ مِنَ الْحِجْرِ سِتَّةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன் சமுதாயத்தார் அறி யாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையானால், கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; (இடிக்கப்பட்டதும்) கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பகுதியை அதனுடன் சேர்த்து(க் கட்டி), அத(ன் வாசல்த)னைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒரு வாசல், மேற்கே ஒரு வாசல் என இரு வாசல்களை அதற்கு அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்” என்றார்கள். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கஅபாவை இடிக்கக் காரணமாக அமைந்தது, இந்தச் செய்திதான். “இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ‘ஹிஜ்ர்’ (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன்” என (அறிவிப்பாளர்) யஸீத் பின் ரூமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களிடம், “அந்த அடித்தளம் இப்போது எங்கே உள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்” என்றார். அவருடன் ‘ஹிஜ்ர்’ எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ‘இந்த இடம்தான்’ என்றார். நான் அதை அளந்து பார்த்தபோது, ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அது இருந்தது.22 அத்தியாயம் :
ஹதீஸ் 1587 — Sahih al Bukhari 25:73
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ ‏ "‏ إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியடைந்த நாளில், “அல்லாஹ் இந்த ஊரைப் புனிதமானதாக்கியுள்ளான். இவ்வூரிலுள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது; இங்கே வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை. (மக்களுக்கு) அறிவிப்பு செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது!” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1588 — Sahih al Bukhari 25:74
حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ فِي دَارِكَ بِمَكَّةَ‏.‏ فَقَالَ ‏"‏ وَهَلْ تَرَكَ عَقِيلٌ مِنْ رِبَاعٍ أَوْ دُورٍ ‏"‏‏.‏ وَكَانَ عَقِيلٌ وَرِثَ أَبَا طَالِبٍ هُوَ وَطَالِبٌ وَلَمْ يَرِثْهُ جَعْفَرٌ وَلاَ عَلِيٌّ ـ رضى الله عنهما ـ شَيْئًا لأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ، وَكَانَ عَقِيلٌ وَطَالِبٌ كَافِرَيْنِ، فَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ لاَ يَرِثُ الْمُؤْمِنُ الْكَافِرَ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ وَكَانُوا يَتَأَوَّلُونَ قَوْلَ اللَّهِ تَعَالَى ‏{‏إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ‏}‏ الآيَةَ‏.‏
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், (மக்கா பயணத்தின்போது), “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அபூதாலிபின் புதல்வர்) அகீல், தங்கும் விடுதிகள், அல்லது வீடுகள் எதையேனும் (நமக்கு) விட்டுவைத்துள் ளாரா, என்ன?” எனக் கேட்டார்கள். அபூதாலிபின் சொத்துகளுக்கு (அவருடைய மக்களில்) அகீலும் தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூதாலிப் இறந்தபோது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந் தனர். “இறைமறுப்பாளருக்கு இறை நம்பிக்கையாளர் வாரிசாகமாட்டார்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இறைநம்பிக்கை கொண்டு, (மார்க்கத்துக்காகப்) புலம்பெயர்ந்து சென்று, தம் செல்வங்களாலும் உயிர்களாலும் இறைவழியில் போரிட்டவர்களும், (அவர்களுக்கு) அடைக்கலம் அளித்து உதவி புரிந்தவர்களும்தான் சிலருக்குச் சிலர் உற்ற நண்பர்கள் ஆவர்” (8:72) என அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்திற்கு, இறைநம்பிக்கையாளர்களே சிலருக்குச் சிலர் வாரிசாவார்கள் என (முற்கால) அறிஞர்கள் விளக்கம் அளித்துவந்தனர். அத்தியாயம் :
ஹதீஸ் 1589 — Sahih al Bukhari 25:75
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَادَ قُدُومَ مَكَّةَ ‏ "‏ مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜில் ‘மினா’விலிருந்து) மக்காவிற்கு வருகை தர விரும்பியபோது, “நாளை நாம் தங்கப்போகும் இடம் இறைவன் நாடினால், ‘பனூ கினானா’ குலத்தாரின் (அல்முஹஸ்ஸப்) பள்ளத் தாக்கு ஆகும். அங்குதான் (குறைஷியர்), ‘இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1590 — Sahih al Bukhari 25:76
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْغَدِ يَوْمَ النَّحْرِ وَهُوَ بِمِنًى ‏ "‏ نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ ‏"‏‏.‏ يَعْنِي ذَلِكَ الْمُحَصَّبَ، وَذَلِكَ أَنَّ قُرَيْشًا وَكِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَوْ بَنِي الْمُطَّلِبِ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ، وَلاَ يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمُ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ سَلاَمَةُ عَنْ عُقَيْلٍ وَيَحْيَى بْنُ الضَّحَّاكِ عَنِ الأَوْزَاعِيِّ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ وَقَالاَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بَنِي الْمُطَّلِبِ أَشْبَهُ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை ‘மினா’வில் இருந்தபோது, “நாம் நாளை பனூ கினானா பள்ளத்தாக்கை -அதாவது அல்முஹஸ்ஸபை- அடை வோம். அங்குதான் (குறைஷியர்) ‘இறை மறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்” என்றார்கள். “பனூ ஹாஷிம் குலத்தாருக்கும் பனூ அப்தில் முத்தலிப் -அல்லது பனுல் முத்தலிப்- குலத்தாருக்கும் எதிராக, ‘நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக் காத வரை இவர்களோடு திருமண ஒப்பந் தமோ வியாபாரக் கொடுக்கல்வாங்கலோ செய்யமாட்டோம்’ என்று குறைஷியரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சலாமா (ரஹ்), யஹ்யா பின் அள்ளஹ்ஹாக் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் என (ஐயமின்றி) வந்துள் ளது. ‘பனுல் முத்தலிப்’ என்பதே பொருத்த மானது என்று அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நானும்) கூறுகிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1591 — Sahih al Bukhari 25:77
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த, சிறுத்த கால்களை உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1592 — Sahih al Bukhari 25:78
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ‏.‏ وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ ـ هُوَ ابْنُ الْمُبَارَكِ ـ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்பு கிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.