Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1573 — Sahih al Bukhari 25:59
حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا دَخَلَ أَدْنَى الْحَرَمِ أَمْسَكَ عَنِ التَّلْبِيَةِ، ثُمَّ يَبِيتُ بِذِي طُوًى، ثُمَّ يُصَلِّي بِهِ الصُّبْحَ وَيَغْتَسِلُ، وَيُحَدِّثُ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், புனித ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால், தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கு வார்கள். பின்னர் அங்கு சுப்ஹு தொழுது விட்டு குளிப்பார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1574 — Sahih al Bukhari 25:60
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذِي طُوًى حَتَّى أَصْبَحَ ثُمَّ دَخَلَ مَكَّةَ‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கிவிட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்துவந்தார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1575 — Sahih al Bukhari 25:61
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள்) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறு வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1576 — Sahih al Bukhari 25:62
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ مِنْ كَدَاءٍ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا الَّتِي بِالْبَطْحَاءِ، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ يُقَالُ هُوَ مُسَدَّدٌ كَاسْمِهِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ لَوْ أَنَّ مُسَدَّدًا أَتَيْتُهُ فِي بَيْتِهِ فَحَدَّثْتُهُ لاَسْتَحَقَّ ذَلِكَ، وَمَا أُبَالِي كُتُبِي كَانَتْ عِنْدِي أَوْ عِنْدَ مُسَدَّدٍ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பத்ஹா’ எனும் இடத்திலுள்ள ‘கதா’ எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸை எமக்கு அறிவித்த) முசத்தத் (ரஹ்) அவர்கள் தம் பெயருக் கேற்ப நேர்மையாளர் ஆவார். (‘முசத்தத்’ என்றால் ‘சீராக்கப்பட்டவர்’ என்பது பொருள்.) “முசத்தத் அவர்களின் இல்லத்திற்கு நான் சென்று அன்னாரிடம் நபிமொழிகளை எடுத்துரைக்கிறேன் என்றால், அதற்கு அவர் தகுதி பெற்றவர் (என்பதே பொருள்). என் நூல்கள் என்னிடம் உள்ளனவா, அல்லது முசத்தத் அவர்களிடம் உள்ளனவா என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1577 — Sahih al Bukhari 25:63
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்தால், அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1578 — Sahih al Bukhari 25:64
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ، وَخَرَجَ مِنْ كُدًا مِنْ أَعْلَى مَكَّةَ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1579 — Sahih al Bukhari 25:65
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ أَعْلَى مَكَّةَ‏.‏ قَالَ هِشَامٌ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ عَلَى كِلْتَيْهِمَا مِنْ كَدَاءٍ وَكُدًا، وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَتْ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள். அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் ‘கதாஉ’, ‘குதா’ ஆகிய இரண்டின் வழி யாகவும் நுழைபவராக இருந்தார்கள். பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள். ஏனெனில், அவ்விரண்டில் ‘கதாஉ’தான் அவர்களது இல்லத்திற்கு அருகில் இருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1580 — Sahih al Bukhari 25:66
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ‏.‏ وَكَانَ عُرْوَةُ أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள். அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார்கள். அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர்களின் இல்லத்திற்கு அருகில் இருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1581 — Sahih al Bukhari 25:67
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ‏.‏ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ أَقْرَبِهِمَا إِلَى مَنْزِلِهِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَدَاءٌ وَكُدًا مَوْضِعَانِ‏.‏
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள். அறிவிப்பாளர் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்கள் ‘கதாஉ’, ‘குதா’ ஆகிய இரண்டின் வழியாக வும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார்கள். தமது இல்லத்திற்கு அருகில் உள்ள ‘கதாஉ’ வழியாகவே பெரும்பாலும் அவர்கள் நுழைவார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ‘கதாஉ’, ‘குதா’ என்பன இரண்டு இடங்களாகும்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 1582 — Sahih al Bukhari 25:68
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ‏.‏ فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ ‏ "‏ أَرِنِي إِزَارِي ‏"‏‏.‏ فَشَدَّهُ عَلَيْهِ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்துச் சென்றார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (கல் சுமப்பதற்கு வசதியாக), “உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்” எனக் கூறினார்கள். (நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி இருந்தன. (அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி) “எனது ஆடையை எனக்குக் கொடுங்கள்” என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்தவுடன்) அதை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.