حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ شَهِدْتُ عُثْمَانَ وَعَلِيًّا ـ رضى الله عنهما ـ وَعُثْمَانُ يَنْهَى عَنِ الْمُتْعَةِ وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا. فَلَمَّا رَأَى عَلِيٌّ، أَهَلَّ بِهِمَا لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ قَالَ مَا كُنْتُ لأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِقَوْلِ أَحَدٍ.
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ‘தமத்துஉ’ முறை ஹஜ்ஜையும் (‘கிரான்’ முறையில்) உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற் கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடப்போவதில்லை” எனக் கூறினார்கள்.17 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18 இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1565 — Sahih al Bukhari 25:51
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَأَمَرَهُ بِالْحِلِّ.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டுவராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1566 — Sahih al Bukhari 25:52
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ " إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமைக் களையக் கூடாது” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1567 — Sahih al Bukhari 25:53
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا أَبُو جَمْرَةَ، نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ قَالَ تَمَتَّعْتُ فَنَهَانِي نَاسٌ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَأَمَرَنِي، فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَجُلاً يَقُولُ لِي حَجٌّ مَبْرُورٌ وَعُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي أَقِمْ عِنْدِي، فَأَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي. قَالَ شُعْبَةُ فَقُلْتُ لِمَ فَقَالَ لِلرُّؤْيَا الَّتِي رَأَيْتُ.
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ‘தமத்துஉ’ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவினேன். அதற்கு அவர்கள், தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, “ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், “(தமத்துஉவோ) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்று கூறி, நீர் என்னுடன் தங்கிக்கொள்வீராக! எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உமக்குத் தருகிறேன்” எனக் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நான் நஸ்ர் பின் இம்ரானி டம் கேட்டேன். “நான் கண்ட கனவே காரணம்” என அவர் கூறினார். அத்தியாயம் :
அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது துல்ஹஜ் ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம், “இப்போது உமது ஹஜ் (தமத்துஉ செய்வதால்) மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும் (குறைந்த நன்மைகளே கிடைக்கும்”) என்றனர்.19 நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி விளக்கம் கேட்டேன். அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் குர்பானி ஒட்டகங்களை ஓட்டிவந்த நாளில் நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். அப்போது மக்கள் அனை வரும் ஹஜ்ஜுக்காக மட்டுமே தனியாக இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தி யில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங் கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக் கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிடில், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்ததால், அது அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை (அங்கு அதை குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளரான அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் இதைத் தவிர வேறு (மர்ஃபூஆன) ஹதீஸ்கள் அறிவிக்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1569 — Sahih al Bukhari 25:55
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الأَعْوَرُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ اخْتَلَفَ عَلِيٌّ وَعُثْمَانُ ـ رضى الله عنهما ـ وَهُمَا بِعُسْفَانَ فِي الْمُتْعَةِ، فَقَالَ عَلِيٌّ مَا تُرِيدُ إِلاَّ أَنْ تَنْهَى عَنْ أَمْرٍ فَعَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَلَمَّا رَأَى ذَلِكَ عَلِيٌّ أَهَلَّ بِهِمَا جَمِيعًا.
சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் ‘தமத்துஉ’ ஹஜ் தொடர்பாக கருத்து வேற்றுமை கொண்டனர். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்றைத் தடுக்கவே நீங்கள் எண்ணுகிறீர்கள் (போலும்)” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டு, ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1570 — Sahih al Bukhari 25:56
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ بِالْحَجِّ. فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلْنَاهَا عُمْرَةً.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகச்) சென்றோம். அப்போது ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ (உன் அழைப்பை ஏற்றோம். இறைவா! ஹஜ்ஜுக்கான உன் அழைப்பை ஏற்றோம்) எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; நாங்கள் அவ்வாறே அதை உம்ராவாக ஆக்கினோம். அத்தியாயம் :
ஹதீஸ் 1571 — Sahih al Bukhari 25:57
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي مُطَرِّفٌ، عَنْ عِمْرَانَ ـ رضى الله عنه ـ قَالَ تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلَ الْقُرْآنُ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தமத்துஉ’ செய்தோம். குர்ஆனும் (அதை அனுமதித்தே) இறங்கியது. ஆனால், ஒரு மனிதர் (உமர் (ரலி) அவர்கள்), தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.20 அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ ஹஜ் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘விடைபெறும் ஹஜ்ஜின்போது, முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் (ஹஜ்ஜுக் காக) இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் கட்டினோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியைக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார்கள். நாங்கள் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடி, மனைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்துகொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்மோடு குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள், பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை (குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” எனக் கட்டளையிட் டார்கள். பிறகு எட்டாம் நாள் மாலையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற கிரியை களை முடித்துவிட்டு வந்து தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். அத்துடன் எங்களது ஹஜ் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், நாங்கள் குர்பானி கொடுக்க வேண்டியிருந்தது. “யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்” (2:196) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். குர்பானி கொடுப்பதற்கு ஆடு போதும். எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமைகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகள் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ், “இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)” (2:196) என்று கூறுகின்றான். மேலும், அல்லாஹ் (2:197ஆவது வசனத்தில்) குறிப்பிடும் ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா, துல்ஹிஜ்ஜா ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் ‘தமத்துஉ’ செய்கிறாரோ அவர்மீது பலியிடல், அல்லது நோன்பு கடமையாகும். (அந்த வசனத்தின் (2:197) மூலத்தில் இடம்பெறும்) ‘அர்ரஃபஸ்’ என்பது தாம்பத்திய உறவையும், ‘அல்ஃபுசூக்’ என்பது பாவங்களையும், ‘அல்ஜிதால்’ என்பது தர்க்கம் புரிவதையும் குறிக்கும். அத்தியாயம் :