நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘துல் ஹுலைஃபா’வில் ‘சுப்ஹு’ தொழுதவுடன், தமது ஊர்தி ஒட்டகத்தை(ப் பயணத்திற்கு)த் தயாராக்கும்படி கட்டளையிடுவார்கள். அவ்வாறே தயார் செய்யப்படும். பிறகு அவர்கள் (அதில்) ஏறி, ஒட்டகம் நிலைக்கு வந்ததும் நேராக (அமர்ந்து) ‘கிப்லா’வை முன்னோக்குவார்கள். பின்னர் ‘தல்பியா’ கூறத் தொடங்குவார் கள். புனித (ஹரம்) எல்லை வரும்வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தை அடையும் போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும்வரை தங்குவார்கள். சுப்ஹு தொழுதுவிட்டு (அங்கேயே) குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்த தாகவும் கூறுவார்கள். இது, இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது அறிவிப்பில் குளித்தது உள்ளிட்ட சில தகவல்களே இடம்பெறுகின்றன. அத்தியாயம் :
ஹதீஸ் 1554 — Sahih al Bukhari 25:40
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا أَرَادَ الْخُرُوجَ إِلَى مَكَّةَ ادَّهَنَ بِدُهْنٍ لَيْسَ لَهُ رَائِحَةٌ طَيِّبَةٌ، ثُمَّ يَأْتِي مَسْجِدَ الْحُلَيْفَةِ فَيُصَلِّي ثُمَّ يَرْكَبُ، وَإِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً أَحْرَمَ، ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஹஜ் மற்றும் உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால், நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலுக் குச் சென்று, (அதிகாலைத் தொழுகையைத்) தொழுவார்கள். பிறகு (தமது வாகனத்தில்) ஏறுவார்கள். அவர்களின் ஊர்தி ஒட்டகம் நேராக நிலைக்கு வந்தபின் இஹ்ராம் கட்டுவார்கள். “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் கண்டேன்” எனக் கூறு வார்கள். அத்தியாயம் :
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது மக்கள், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்கு மத்தியில் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் இதைக் கேள்விப்படவில்லை; மாறாக, ‘மூசா (அலை) அவர்கள் ‘தல்பியா’ கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் இப்போதும் காண்பதைப் போன்று உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதையே நான் கேட்டிருக்கிறேன்” என்றார்கள்.11 அத்தியாயம் :
ஹதீஸ் 1556 — Sahih al Bukhari 25:42
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيُهِلَّ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا " فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَشَكَوْتُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ، وَدَعِي الْعُمْرَةَ ". فَفَعَلْتُ فَلَمَّا قَضَيْنَا الْحَجَّ أَرْسَلَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ فَقَالَ " هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ ". قَالَتْ فَطَافَ الَّذِينَ كَانُوا أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا وَاحِدًا بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الْحَجَّ وَالْعُمْرَةَ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றிருந்தபோது, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். பிறகு அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால், நான் மக்கா வந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவை தவாஃபும், செய்யவில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள் “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டிக்கொண்டு உம்ராவை விட்டுவிடு” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் (அங்கு இஹ்ராம் கட்டியபின்) உம்ரா செய்தேன். “இது விடுபட்ட உன்னுடைய உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் அப்போது கூறினார்கள். உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒரு முறை (ஹஜ்ஜுக்காக) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒரு முறை மட்டுமே தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1557 — Sahih al Bukhari 25:43
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ ـ رضى الله عنه ـ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا ـ رضى الله عنه ـ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَذَكَرَ قَوْلَ سُرَاقَةَ.
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர்கள் கட்டியிருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இது தொடர்பாக (‘இது உங்களுக்கு மட்டுமா, அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என) சுராக்கா (ரலி) அவர்கள் (கேட்க, “எப்போதைக்கும் உரியதே; அனைவருக்கும் பொதுவானதே” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த அந்தச்) செய்தியையும் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீர் இப்போது இருப்பதைப் போன்றே, இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்தபின்) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறியதாகக் கூடுதல் தகவல் காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 1558 — Sahih al Bukhari 25:44
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْهُذَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ مَرْوَانَ الأَصْفَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ " بِمَا أَهْلَلْتَ ". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَقَالَ " لَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ ". وَزَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِمَا أَهْلَلْتَ يَا عَلِيُّ ". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ " فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜுக்காக) யமனிலிருந்து திரும் பிய அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எதற்காக இஹ்ராம் கட்டினீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?” என்று கேட்டார் கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் “நீங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1559 — Sahih al Bukhari 25:45
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى قَوْمٍ بِالْيَمَنِ فَجِئْتُ وَهْوَ بِالْبَطْحَاءِ فَقَالَ " بِمَا أَهْلَلْتَ ". قُلْتُ أَهْلَلْتُ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " هَلْ مَعَكَ مِنْ هَدْىٍ ". قُلْتُ لاَ. فَأَمَرَنِي فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَمَرَنِي فَأَحْلَلْتُ فَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي، أَوْ غَسَلَتْ رَأْسِي، فَقَدِمَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ قَالَ اللَّهُ {وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ} وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِنَّهُ لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ الْهَدْىَ.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தாரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல் பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் எதற்கு இஹ்ராம் கட்டினீர்கள்? (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்காக மட்டுமா?)” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே இஹ்ராம் கட்டினேன்” என்றேன். “உம்மிடம் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான், “இல்லை” என்றேன். அப்போது இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும் ஸஃபா-மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுமாறும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் என்னைப் பணித்தார்கள். அதன்படி நான் செய்தேன். அதற்குப் பிறகு நான் என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். ‘அவள் எனக்கு தலைவாரிவிட்டாள்’ அல்லது ‘எனது தலையை அவள் கழுவினாள்’. உமர் (ரலி) அவர்கள் (பதவிக்கு) வந்தபோது கூறினார்கள்: நாம் இறைவேதத்தின்படி நடப்ப தெனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196) எனும் வசனத்தின்படி ‘ஹஜ், உம்ரா இரண்டையும் முழுமையாக நிறைவேற்று மாறு அது நமக்குக் கட்டளையிடுகின்றது. நாம் நபிவழியின்படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக் கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை (அதாவது இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.)12 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் மாதத்தில், ஹஜ் நாட்களில், ஹஜ்ஜின் புனித கிரியைகளில் புறப்பட்டு ‘ஸரிஃப்’ எனுமிடத்தில் இறங்கி னோம். நபி (ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர் களிடம் வந்து, “உங்களில் யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக் கொள்ள விரும்பினால், அவ்வாறே செய்து கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்றார்கள். தோழர் களில் சிலர் இதன்படி செய்தார்கள்; சிலர் இதன்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடனும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர் களால் உம்ரா(வை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட) முடியவில்லை. இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுதுகொண்டிருந்தேன். “ஏய்! ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன்; நான் உம்ரா செய்ய முடியாம லாகிவிட்டது” என்றேன். “உனக்கு என்னவாயிற்று?” எனக் கேட்டார்கள். “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். “அதனால் உனக்குப் பாதிப்பில்லை. ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே, இறைவன் அவர்களுக்கு விதியாக்கிய ஒன்றைத்தான் உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொண்டிரு! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம்” என்றார்கள். நாங்கள் அந்த ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை அடைந்தபோது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று கஅபாவை தவாஃப் செய்தேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டு ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உம்முடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ராவை முடியுங்கள். பிறகு இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நீங்கள் வரும்வரை உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹருடைய நேரத் தில் நபியவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (“உம்ராவை) முடித்துவிட்டீர்களா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.14 அத்தியாயம் :
ஹதீஸ் 1561 — Sahih al Bukhari 25:47
حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نُرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ، فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ أَنْ يَحِلَّ، فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ، وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ قَالَ " وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ ". قُلْتُ لاَ. قَالَ " فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا ". قَالَتْ صَفِيَّةُ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَهُمْ. قَالَ " عَقْرَى حَلْقَى، أَوَمَا طُفْتِ يَوْمَ النَّحْرِ ". قَالَتْ قُلْتُ بَلَى. قَالَ " لاَ بَأْسَ، انْفِرِي ". قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهْوَ مُنْهَبِطٌ مِنْهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16 (நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1562 — Sahih al Bukhari 25:48
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காகவும் (தமத்துஉ), சிலர் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்காகவும் (கிரான்), சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராத்) இஹ்ராம் கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக் கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அத்தியாயம் :