حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ ـ رضى الله عنه ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى. قَالَ فَكِلاَهُمَا قَالَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي، حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் வாகனத்தின்பின் அமர்ந்து ‘அரஃபா’விலிருந்து ‘முஸ்தலிஃபா’வரை சென்றார்கள். பிறகு ஃபள்ல் (ரலி) அவர்கள் ‘முஸ்தலிஃபா’விலிருந்து ‘மினா’வரை சென்றார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாவை நிறுத்தவில்லை” என இவ்விருவருமே கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1544 — Sahih al Bukhari 25:30
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ ـ رضى الله عنه ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى. قَالَ فَكِلاَهُمَا قَالَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي، حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் வாகனத்தின்பின் அமர்ந்து ‘அரஃபா’விலிருந்து ‘முஸ்தலிஃபா’வரை சென்றார்கள். பிறகு ஃபள்ல் (ரலி) அவர்கள் ‘முஸ்தலிஃபா’விலிருந்து ‘மினா’வரை சென்றார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாவை நிறுத்தவில்லை” என இவ்விருவருமே கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எண்ணெய் தடவித் தலைசீவி கீழாடையும் மேல் துண்டும் அணிந்துகொண்டு, தம் தோழர் களோடு மதீனாவிலிருந்து (விடைபெறும் ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல்மீது ஒட்டிக்கொள்ளும் அளவுக்குக் குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி மேல்துண்டு, கீழாடை போன்றவற்றை அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ‘துல்ஹுலைஃபா’விற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறியமர்ந்து ‘பைதா’ எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது (குர்பானி) ஒட்டகத்தில் அடையாள மாலையைத் தொங்கவிட்டார் கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாட்கள் எஞ்சியிருக்கும்போது நடந்தது. துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்ற டைந்தபோது, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்திற்கு அடையாள மாலை அணிவித்து தம்மோடு கொண்டுவந்ததனால், (தலைமுடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய நிலையில் மக்காவின் மேற்பகுதியில் ஹஜூன் எனும் மலைக்கு அருகில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்த அவர்கள், அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவை நெருங்கினார்கள். தம் தோழர்கள், கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும், ஸஃபா, மர்வா இடையில் ஓடுமாறும் பிறகு தலைமுடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். இது, தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டுவராதவர்களுக்குச் சொல்லப் பட்டதாகும். அவர்களில் துணைவியோடு வந்தவர்கள் தாம்பத்திய உறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் ஆகியவை அப்போது அனுமதிக்கப்பட்ட வையாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 1546 — Sahih al Bukhari 25:32
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ بِذِي الْحُلَيْفَةِ، فَلَمَّا رَكِبَ رَاحِلَتَهُ وَاسْتَوَتْ بِهِ أَهَلَّ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரத்அத்கள் (கஸ்ராகத்) தொழுதுவிட்டு அங்கேயே விடியும்வரை தங்கினார்கள். பிறகு ஊர்தி ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, ஒட்டகம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் கட்டி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1547 — Sahih al Bukhari 25:33
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، قَالَ وَأَحْسِبُهُ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராக) அஸ்ர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும்வரை தங்கினார்கள் என்றே எண்ணுகிறேன்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 1548 — Sahih al Bukhari 25:34
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَسَمِعْتُهُمْ يَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا.
அனஸ் (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’ வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற் கான ‘தல்பியா’வை உரத்த குரலில் கூறியதை நான் கேட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1549 — Sahih al Bukhari 25:35
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ تَلْبِيَةَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க ல(க்)க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க லா ஷரீக்க லக்” என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ‘தல்பியா’ ஆகும். (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் யாருமில்லை). அத்தியாயம் :
ஹதீஸ் 1550 — Sahih al Bukhari 25:36
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنِّي لأَعْلَمُ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ. تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ. وَقَالَ شُعْبَةُ أَخْبَرَنَا سُلَيْمَانُ، سَمِعْتُ خَيْثَمَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ‘தல்பியா’ கூறிவந்தார்கள் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்: “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்” என்று கூறுவார்கள். (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். எல்லாப் புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1551 — Sahih al Bukhari 25:37
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ مَعَهُ بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ، ثُمَّ رَكِبَ حَتَّى اسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ، حَمِدَ اللَّهَ وَسَبَّحَ وَكَبَّرَ، ثُمَّ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَأَهَلَّ النَّاسُ بِهِمَا، فَلَمَّا قَدِمْنَا أَمَرَ النَّاسَ فَحَلُّوا، حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ أَهَلُّوا بِالْحَجِّ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا، وَذَبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ بَعْضُهُمْ هَذَا عَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ் பயணத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். பிறகு விடியும்வரை அங்கேயே இரவில் தங்கினார்கள். பிறகு வாகனத்தின் மீதமர்ந்து ‘பைதா’ எனுமிடத் தில் வாகனம் நிலைக்கு வந்தபோது, ‘அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் தூயவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூறினார்கள். பிறகு ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற் காகவும் இஹ்ராம் கட்டி, தல்பியா கூறினார்கள். மக்களும் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்குமே இஹ்ராம் கட்டி தல்பியா கூறினர். நாங்கள் (மக்கா) வந்(து உம்ராவை முடித்)தபோது இஹ்ராமி லிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் அவ்வாறே செய்தனர்; துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கடடினார்கள். நபி (ஸல்) அவர்கள் (குர்பானி) ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளன்று இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1552 — Sahih al Bukhari 25:38
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகம் நிலைக்கு வந்தபோது ‘தல்பியா’ கூறினார்கள். அத்தியாயம் :