Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1533 — Sahih al Bukhari 25:21
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ، وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي، وَبَاتَ حَتَّى يُصْبِحَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது ‘அல்முஅர்ரஸ்’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குச் செல்லும்போது ‘அஷ்ஷஜரா’விலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது ‘பத்னுல்வாதி’யிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுது விட்டு, விடியும்வரை அங்கேயே தங்குவார்கள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 1534 — Sahih al Bukhari 25:22
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، وَبِشْرُ بْنُ بَكْرٍ التِّنِّيسِيُّ، قَالاَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي عِكْرِمَةُ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ إِنَّهُ سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِوَادِي الْعَقِيقِ يَقُولُ ‏ "‏ أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي فَقَالَ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةً فِي حَجَّةٍ ‏"‏‏.‏
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘அல்அகீக்’ பள்ளத்தாக்கில் இருந்தபோது, “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் இன்றிரவும் என்னிடம் வந்தார். அவர், ‘இந்த வளமிக்க பள்ளத்தாக்கில் தொழுங் கள்; ஹஜ்ஜுடன் உம்ரா என்று கூறுங்கள்’ என்றார்” எனக் கூறியதை நான் கேட்டேன்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1535 — Sahih al Bukhari 25:23
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رُئِيَ وَهُوَ فِي مُعَرَّسٍ بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي قِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ‏.‏ وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ، يَتَوَخَّى بِالْمُنَاخِ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُنِيخُ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ أَسْفَلُ مِنَ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي، بَيْنَهُمْ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذَلِكَ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்னுல்வாதியில் உள்ள துல்ஹுலை ஃபாவில் (இரவின் இறுதியில்) ஓய்வெடுக் கும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) “நீங்கள் வளமிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்கள்” என்று (வானவரால்) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தைத் தேர்வு செய்ததைப் போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் அங்கேயே தமது ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிமும் அவ்வாறே செய்வார்கள். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல்வாதியில் உள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் இருந்த சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற் கும் நடுவில் உள்ளது என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1536 — Sahih al Bukhari 25:24
قَالَ أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى، أَخْبَرَهُ أَنَّ يَعْلَى قَالَ لِعُمَرَ ـ رضى الله عنه ـ أَرِنِي النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ يُوحَى إِلَيْهِ قَالَ فَبَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَهْوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَسَكَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاعَةً فَجَاءَهُ الْوَحْىُ، فَأَشَارَ عُمَرُ ـ رضى الله عنه ـ إِلَى يَعْلَى، فَجَاءَ يَعْلَى، وَعَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ، وَهُوَ يَغِطُّ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ ‏"‏ أَيْنَ الَّذِي سَأَلَ عَنِ الْعُمْرَةِ ‏"‏ فَأُتِيَ بِرَجُلٍ فَقَالَ ‏"‏ اغْسِلِ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ، وَانْزِعْ عَنْكَ الْجُبَّةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ ‏"‏‏.‏ قُلْتُ لِعَطَاءٍ أَرَادَ الإِنْقَاءَ حِينَ أَمَرَهُ أَنْ يَغْسِلَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَ نَعَمْ‏.‏
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வரும்போது அவர்களை எனக்குக் காட்டுங்கள்” என்று சொல்லியிருந்தேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘ஜிஇர்ரானா’ எனுமிடத்தில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வந்தது. உமர் (ரலி) அவர்கள் என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத்துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட் டார். அவரிடம் “உம் மீதுள்ள நறு மணத்தை மூன்று முறை கழுவுவீராக! (தைக்கப்பட்ட) உமது நீளங்கியைக் களைவீராக! உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள். “மும்முறை கழுவச் சொன்னது நன்கு தூய்மைப்படுத்தவா?” என்று (அறிவிப்பாள ரான) அதாஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். அத்தியாயம் :
ஹதீஸ் 1537 — Sahih al Bukhari #1537
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَدَّهِنُ بِالزَّيْتِ‏.‏ فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ قَالَ مَا تَصْنَعُ بِقَوْلِهِ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ‏.‏
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறினேன். அப்போது, “இப்னு உமரின் கூற்றை வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது, தமது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணத்தின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1538 — Sahih al Bukhari 25:25
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَدَّهِنُ بِالزَّيْتِ‏.‏ فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ قَالَ مَا تَصْنَعُ بِقَوْلِهِ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ‏.‏
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறினேன். அப்போது, “இப்னு உமரின் கூற்றை வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது, தமது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணத்தின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1539 — Sahih al Bukhari 25:26
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ حِينَ يُحْرِمُ، وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டும் நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். அவ்வாறே, இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வருவதற்கு முன்னாலும் நறுமணம் பூசுவேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1540 — Sahih al Bukhari 25:27
حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியில் களிம்பு தடவி படிய வைத்திருந்த நிலையில் ‘தல்பியா’ கூறியதைச் செவியுற்றேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1541 — Sahih al Bukhari 25:28
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ‏.‏ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ عِنْدِ الْمَسْجِدِ يَعْنِي مَسْجِدَ ذِي الْحُلَيْفَةِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் கட்டியதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1542 — Sahih al Bukhari 25:29
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَلْبَسُ الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ، إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடைகளை அணிய லாம்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முழு நீளங்கிகள், தலைப்பாகை கள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் ஆகியவற்றை அவர் அணியக் கூடாது. காலணி கிடைக்காதவர், தம் காலுறை யின் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்துகொள்ளலாம். குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்கள்” என்றார்கள்.8 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.