இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவை யான) பொருள்களைத் தயாரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; “நாங்கள் இறைவன்மீது நம்பிக்கைவைத்துள்ளோம்” என்றும் கூறுவார்கள். மக்கா வந்ததும் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது தொடர்பாகவே அல்லாஹ் “(ஹஜ்ஜுக்குத்) தேவையான பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். தயார்செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது நிச்சயமாக இறையச்சமாகும்” (2:197) எனும் வசனத்தை அருளினான். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பில் இக்ரிமா (ரஹ்) அவர்களின் கூற்றாக (மவ்கூஃப்) அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இப் பகுதியினருக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக் காக வேறு பகுதியிலிருந்து இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ள லாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்று கூறினார்கள். இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1525 — Sahih al Bukhari 25:13
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَأَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ ". قَالَ عَبْدُ اللَّهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த்வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத் திலிருந்து இஹ்ராம் கட்டுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்குச் செய்தி கிடைத்தது” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1526 — Sahih al Bukhari 25:14
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ وَقَّتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، لِمَنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمُهَلُّهُ مِنْ أَهْلِهِ، وَكَذَاكَ حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’வை யும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல் ஜுஹ்ஃபா’வையும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸிலை’யும் யமன்வாசி களுக்கு ‘யலம்லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர் களுக்கும் உரியனவாகும். “இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லை களுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கு மிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1527 — Sahih al Bukhari 25:15
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، وَقَّتَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா)வாசிகள் ‘மஹ்யஆ’ எனும் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத்தி லிருந்து இஹ்ராம் கட்டுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் கள் கூறுகிறார்கள். ஆனால், நான் (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கேட்கவில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1528 — Sahih al Bukhari 25:16
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ ذُو الْحُلَيْفَةِ، وَمُهَلُّ أَهْلِ الشَّأْمِ مَهْيَعَةُ وَهِيَ الْجُحْفَةُ، وَأَهْلِ نَجْدٍ قَرْنٌ ". قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ زَعَمُوا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وَلَمْ أَسْمَعْهُ " وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ ".
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ ذُو الْحُلَيْفَةِ، وَمُهَلُّ أَهْلِ الشَّأْمِ مَهْيَعَةُ وَهِيَ الْجُحْفَةُ، وَأَهْلِ نَجْدٍ قَرْنٌ ". قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ زَعَمُوا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وَلَمْ أَسْمَعْهُ " وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ ".
ஹதீஸ் 1529 — Sahih al Bukhari 25:17
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லமை’யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்கா வாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1531 — Sahih al Bukhari 25:19
حَدَّثَنِي عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا فُتِحَ هَذَانِ الْمِصْرَانِ أَتَوْا عُمَرَ فَقَالُوا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّ لأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَهُوَ جَوْرٌ عَنْ طَرِيقِنَا، وَإِنَّا إِنْ أَرَدْنَا قَرْنًا شَقَّ عَلَيْنَا. قَالَ فَانْظُرُوا حَذْوَهَا مِنْ طَرِيقِكُمْ. فَحَدَّ لَهُمْ ذَاتَ عِرْقٍ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபா, பஸ்ரா எனும்) இந்த இரு (இராக்) நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். அது, நாங்கள் (மக்கா விற்கு) செல்லும் பாதையிலிருந்து விலகியுள்ளது. நாங்கள் ‘கர்ன்’ வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்” என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அதற்கு எதிரில் உள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலேயே கூறுங்கள்” என்றார்கள். பின்பு ‘தாத்து இர்க்’ என அவர்களுக்கு எல்லை நிர்ணயித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1532 — Sahih al Bukhari 25:20
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَاخَ بِالْبَطْحَاءِ بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا. وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُ ذَلِكَ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’வில் கற்கள் நிறைந்த இடத்தில் (அல்பத்ஹா) தமது ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர் (ரலி), இவ்வாறே செய் வார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :