حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. فَقَالَ " طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ ". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، وَهْوَ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் நோய்வாய்பட்டுள்ளேன்” என முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ வாகனத்தில் அமர்ந்து மக்களுக்குப் பின்னால் (இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1634 — Sahih al Bukhari 25:117
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اسْتَأْذَنَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ ـ رضى الله عنه ـ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ، فَأَذِنَ لَهُ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக ‘மினா’வுடைய (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1635 — Sahih al Bukhari 25:118
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ إِلَى السِّقَايَةِ، فَاسْتَسْقَى، فَقَالَ الْعَبَّاسُ يَا فَضْلُ اذْهَبْ إِلَى أُمِّكَ، فَأْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشَرَابٍ مِنْ عِنْدِهَا. فَقَالَ " اسْقِنِي ". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ. قَالَ " اسْقِنِي ". فَشَرِبَ مِنْهُ، ثُمَّ أَتَى زَمْزَمَ، وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا، فَقَالَ " اعْمَلُوا، فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ ـ ثُمَّ قَالَ ـ لَوْلاَ أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ حَتَّى أَضَعَ الْحَبْلَ عَلَى هَذِهِ ". ـ يَعْنِي عَاتِقَهُ ـ وَأَشَارَ إِلَى عَاتِقِهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (தம் புதல்வர்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் “ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவரிடமுள்ள குடிதண்ணீரை கொண்டுவந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடு” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்” எனக் கேட்க, அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகின்றார்கள்” என்று கூறினார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை!) இந்தத் தண்ணீரையே கொடுங்கள்” என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள். அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், “செய்யுங்கள்! நீங்கள் நல்ல சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள்“ எனக் கூறிவிட்டு, “மக்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள் என்றில்லாவிட்டால், (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நானும் இதில் கயிற்றை வை(த்து தண்ணீர் சும)ப்பேன்” என்று கூறி, தமது தோளைச் சுட்டிக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1636 — Sahih al Bukhari 25:119
وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு இறைநம்பிக்கையும் ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டு வந்து, அதிலுள்ளதை என் நெஞ்சில் நிரப்பி, நெஞ்சை மூடினார். பிறகு என் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு ஏற்றிச் சென்றார். முதல் வானத்தின் காவலரிடம் ‘திறப்பீராக!’ என்றார். “யார் அது?” என அக்காவலர் கேட்க, ‘ஜிப்ரீல்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1637 — Sahih al Bukhari 25:120
حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ حَدَّثَهُ قَالَ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ. قَالَ عَاصِمٌ فَحَلَفَ عِكْرِمَةُ مَا كَانَ يَوْمَئِذٍ إِلاَّ عَلَى بَعِيرٍ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் அருந்தக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா (ரஹ்) அவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள் என ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1638 — Sahih al Bukhari 25:121
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ " مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيُهِلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ ثُمَّ لاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا ". فَقَدِمْتُ مَكَّةَ، وَأَنَا حَائِضٌ، فَلَمَّا قَضَيْنَا حَجَّنَا أَرْسَلَنِي مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرْتُ، فَقَالَ صلى الله عليه وسلم " هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ ". فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ، بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ طَافُوا طَوَافًا وَاحِدًا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிப் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! பிறகு இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!” எனக் கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு அனுப்பிவைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது (விடுபட்ட) உன் உம்ராவுக்குப் பகரமாகும்” எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் தவாஃப் செய்து விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பிறகு (ஹஜ்ஜுக்காக மற்றொரு இஹ்ராம் கட்டி) மினாவிலிருந்து திரும்பிய பிறகு (ஹஜ்ஜிற்காக) மற்றொரு தவாஃப் செய்தார் கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்தவர்கள் ஒரே தவாஃப் தான் செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1639 — Sahih al Bukhari 25:122
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ دَخَلَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، وَظَهْرُهُ فِي الدَّارِ، فَقَالَ إِنِّي لاَ آمَنُ أَنْ يَكُونَ الْعَامَ بَيْنَ النَّاسِ قِتَالٌ، فَيَصُدُّوكَ عَنِ الْبَيْتِ، فَلَوْ أَقَمْتَ. فَقَالَ قَدْ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ، فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} ثُمَّ قَالَ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ مَعَ عُمْرَتِي حَجًّا. قَالَ ثُمَّ قَدِمَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் செல்ல) வாகனம் வீட்டில் தயாராக இருந்தது. அப்போது அப்துல்லாஹ், “நிச்சயமாக, இவ்வாண்டு மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்; எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் (நல்லது”) எனக் கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவுக்காகப்) புறப்பட்டபோது, கஅபாவுக்குச் செல்ல விடாமல் அவர்களை குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். எனவே, நான் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.’ நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டுகிறேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில், இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.40 அப்போது அவர்களிடம், “மக்களி டையே போர் மூண்டுள்ளது; எனவே, ஹஜ் செய்ய விடாமல் உங்களை அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகின் றோம்” எனக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது எனவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்” எனக் கூறினார்கள். பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டு ‘பைதா’ எனுமிடத்தின் பிரதான பகுதிக்கு வந்ததும், “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான்; (எனவே) நான் எனது உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டி யுள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டுசென்றார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. குர்பானி கொடுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை அவர்கள் பலியிடவில்லை; இஹ்ராம் கட்டியிருக்கும்போது விலக்கப் பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (குர்பானிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிய தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் அவர்கள் கருதினார்கள். மேலும், “இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி என்னிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பிறகு கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள்; பிறகு உம்ராவுக்காக(த் தனியாகத் தவாஃப்) செய்யவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அன்னாரும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் தான் செய்தார்கள். பிறகு உம்ராவுக்கென்று (தவாஃப் ஏதும்) செய்யவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவ்வாறேதான் செய்தார்கள். (அடுத்து உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்களும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்ததை நான் பார்த்தேன். அவர்கள் உம்ராவுக்காக (தவாஃப் ஏதும்) செய்ய வில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகி யோரும் ஹஜ் செய்துள்ளனர். என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவர்களும் முதன்முதலாக கஅபாவை தவாஃப் செய்தார்கள். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தனியாக தவாஃப் ஏதும்) செய்யவில்லை. முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ் வாறே செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃப்) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செய்த தைப் பார்த்தேன். அவர்கள் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் கேட்கமாட்டார்களா? ஆக, முன்சென்றவர்களில் யாரும் (மக்காவில்) பாதம் பதித்ததும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்யாமல் இருந்ததில்லை. பிறகு (அந்த தவாஃபோடு) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. என் தாயாரும் (அஸ்மா) என் சிறிய தாயாரும் (ஆயிஷா) மக்கா வந்ததும் தவாஃப் செய்வதற்குமுன் வேறு எதையும் செய்வதில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை. அத்தியாயம் :
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி என்னிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பிறகு கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள்; பிறகு உம்ராவுக்காக(த் தனியாகத் தவாஃப்) செய்யவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அன்னாரும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் தான் செய்தார்கள். பிறகு உம்ராவுக்கென்று (தவாஃப் ஏதும்) செய்யவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவ்வாறேதான் செய்தார்கள். (அடுத்து உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்களும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்ததை நான் பார்த்தேன். அவர்கள் உம்ராவுக்காக (தவாஃப் ஏதும்) செய்ய வில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகி யோரும் ஹஜ் செய்துள்ளனர். என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவர்களும் முதன்முதலாக கஅபாவை தவாஃப் செய்தார்கள். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தனியாக தவாஃப் ஏதும்) செய்யவில்லை. முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ் வாறே செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃப்) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செய்த தைப் பார்த்தேன். அவர்கள் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் கேட்கமாட்டார்களா? ஆக, முன்சென்றவர்களில் யாரும் (மக்காவில்) பாதம் பதித்ததும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்யாமல் இருந்ததில்லை. பிறகு (அந்த தவாஃபோடு) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. என் தாயாரும் (அஸ்மா) என் சிறிய தாயாரும் (ஆயிஷா) மக்கா வந்ததும் தவாஃப் செய்வதற்குமுன் வேறு எதையும் செய்வதில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை. அத்தியாயம் :