Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1643 — Sahih al Bukhari 25:125
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقُلْتُ لَهَا أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَعَالَى ‏{‏إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا‏}‏ فَوَاللَّهِ مَا عَلَى أَحَدٍ جُنَاحٌ أَنْ لاَ يَطُوفَ بِالصَّفَا وَالْمَرْوَةِ‏.‏ قَالَتْ بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي إِنَّ هَذِهِ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَهَا عَلَيْهِ كَانَتْ لاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَتَطَوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا أُنْزِلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي كَانُوا يَعْبُدُونَهَا عِنْدَ الْمُشَلَّلِ، فَكَانَ مَنْ أَهَلَّ يَتَحَرَّجُ أَنْ يَطُوفَ بِالصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا أَسْلَمُوا سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نَتَحَرَّجُ أَنْ نَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ‏}‏ الآيَةَ‏.‏ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ وَقَدْ سَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الطَّوَافَ بَيْنَهُمَا، فَلَيْسَ لأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بَيْنَهُمَا‏.‏ ثُمَّ أَخْبَرْتُ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ إِنَّ هَذَا لَعِلْمٌ مَا كُنْتُ سَمِعْتُهُ، وَلَقَدْ سَمِعْتُ رِجَالاً مِنْ أَهْلِ الْعِلْمِ، يَذْكُرُونَ أَنَّ النَّاسَ إِلاَّ مَنْ ذَكَرَتْ عَائِشَةُ مِمَّنْ كَانَ يُهِلُّ بِمَنَاةَ، كَانُوا يَطُوفُونَ كُلُّهُمْ بِالصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا ذَكَرَ اللَّهُ تَعَالَى الطَّوَافَ بِالْبَيْتِ، وَلَمْ يَذْكُرِ الصَّفَا وَالْمَرْوَةَ فِي الْقُرْآنِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كُنَّا نَطُوفُ بِالصَّفَا وَالْمَرْوَةِ، وَإِنَّ اللَّهَ أَنْزَلَ الطَّوَافَ بِالْبَيْتِ، فَلَمْ يَذْكُرِ الصَّفَا فَهَلْ عَلَيْنَا مِنْ حَرَجٍ أَنْ نَطَّوَّفَ بِالصَّفَا وَالْمَرْوَةِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ‏}‏ الآيَةَ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ فَأَسْمَعُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الْفَرِيقَيْنِ كِلَيْهِمَا فِي الَّذِينَ كَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بِالْجَاهِلِيَّةِ بِالصَّفَا وَالْمَرْوَةِ، وَالَّذِينَ يَطُوفُونَ ثُمَّ تَحَرَّجُوا أَنْ يَطُوفُوا بِهِمَا فِي الإِسْلاَمِ مِنْ أَجْلِ أَنَّ اللَّهَ تَعَالَى أَمَرَ بِالطَّوَافِ بِالْبَيْتِ، وَلَمْ يَذْكُرِ الصَّفَا حَتَّى ذَكَرَ ذَلِكَ بَعْدَ مَا ذَكَرَ الطَّوَافَ بِالْبَيْتِ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ‘ஸஃபா’வும் ‘மர்வா’வும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று” (2:158) எனும் இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருவர் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரா விட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமன்று என்றிருந்தால்தான் நீர் கூறும் கருத்து வரும். (‘சுற்றிவருவது குற்றமன்று’ என்றே இவ்வசனம் கூறுகின்றது.) ஆனால், இவ்வசனம் அன்சாரிகள் தொடர்பாக அருளப்பெற்றதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாம் வழிபட்டுவந்த ‘முஷல்லல்’ எனும் குன்றில் உள்ள ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ் லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா-மர்வா வைச் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றி, ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா - மர்வாவைச் சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகின்றோம்’ எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், “நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும்” (2:158) எனும் வசனத்தை அருளினான். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்கு மிடையே சுற்றி வருவதை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள். எனவே, அவ்விரண்டிற்குமிடையே சுற்றி வருவதைக் கைவிடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை” எனக் கூறினார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: பிறகு நான் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் இது பற்றித் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் கேள்விப்படாத விளக்கமாகும் இது. மக்களில் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடிக்கொண்டிருந்தார்கள். குர்ஆனில் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும் என்று கூறிய அல்லாஹ், ஸஃபா-மர்வா பற்றிக் குறிப்பிடாததால் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா- மர்வாவுக்கிடையே சுற்றிக்கொண்டிருந் தோம். அல்லாஹ்வோ ஸஃபாவைப் பற்றிக் கூறாமல் கஅபாவை தவாஃப் செய்வது பற்றிக் கூறுகிறானே? ஸஃபா-மர்வாவுக் கிடையே நாங்கள் ஓடுவது எங்கள் மீது குற்றமாகுமா” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும்” (2:158) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று பல அறிஞர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். நான், இந்த வசனம் இரண்டு சாரார் தொடர்பாகவும் அருளப்பெற்றது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாரார், அறியாமைக் காலத்தில் ஸஃபா-மர்வாவைச் சுற்றிவந்ததைப் பாவமாகக் கருதியவர்கள். மற்றொரு சாரார், ஏற்கெனவே அவ்வாறு சுற்றி வந்துகொண்டிருந்துவிட்டு, இஸ்லாத்தில் நுழைந்த பின்பும் ஸஃபா-மர்வா இடையே சுற்றுவதைப் பாவமாகக் கருதியவர்கள். அல்லாஹ் கஅபாவை தவாஃப் செய்வது பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, ஸஃபாவைக் குறிப்பிடாமல் இருந்ததே இதற்குக் காரணம். இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வது பற்றி (22:29ஆவது வசனத்தில்) கூறிய பிறகே, (இடைவெளி விட்டு) ஸஃபா-மர்வா பற்றி (2:158ஆவது வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டான். அத்தியாயம் :
ஹதீஸ் 1644 — Sahih al Bukhari 25:126
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا طَافَ الطَّوَافَ الأَوَّلَ خَبَّ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا، وَكَانَ يَسْعَى بَطْنَ الْمَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ‏.‏ فَقُلْتُ لِنَافِعٍ أَكَانَ عَبْدُ اللَّهِ يَمْشِي إِذَا بَلَغَ الرُّكْنَ الْيَمَانِيَ قَالَ لاَ‏.‏ إِلاَّ أَنْ يُزَاحَمَ عَلَى الرُّكْنِ فَإِنَّهُ كَانَ لاَ يَدَعُهُ حَتَّى يَسْتَلِمَهُ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது (பத்னுல் மசீல்) ஓடைப் பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.43 உபைதில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தவாஃபின்போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் (சாதாரணமாக) நடந்துதானே செல்வார்கள்?” என நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “ருக்னுல் யமானியில் கூட்டநெரிசல் ஏற்பட்டால் தவிர (சாதாரண மாக) அவர்கள் நடந்து செல்லமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் ருக்னுல் யமானி யைத் தொட்டு முத்தமிடாமல் விடுவ தில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1645 — Sahih al Bukhari #1645
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، فَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا ‏{‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ‏}‏‏.‏ وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ‏.‏
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)” எனக் கேட்டோம். அதற்கு “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார்கள்: பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரு ரக்அத்கள் தொழுதார்கள்: பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு முறை சயீ செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1646 — Sahih al Bukhari 25:127
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، فَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا ‏{‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ‏}‏‏.‏ وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ‏.‏
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)” எனக் கேட்டோம். அதற்கு “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார்கள்: பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரு ரக்அத்கள் தொழுதார்கள்: பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு முறை சயீ செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1647 — Sahih al Bukhari 25:128
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ تَلاَ ‏{‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ‏}‏‏.‏
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்தபின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடினார்கள்” என்று கூறி னார்கள். இதை அறிவித்த பிறகு, “நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்ற இறைவசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1648 — Sahih al Bukhari 25:129
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَكُنْتُمْ تَكْرَهُونَ السَّعْىَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ نَعَمْ‏.‏ لأَنَّهَا كَانَتْ مِنْ شَعَائِرِ الْجَاهِلِيَّةِ، حَتَّى أَنْزَلَ اللَّهُ ‏{‏إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا‏}‏‏.‏
ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவதை (அன்சாரிகளான) நீங்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருந்தீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! ஏனெனில், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்ற மன்று” (2:158) எனும் இறைவசனம் அருளப்பெறும்வரை அவ்விரண்டும் (எங்கள் பழைய நம்பிக்கைப்படி) அறியாமைக் காலச் சின்னங்களாகவே இருந்தன” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1649 — Sahih al Bukhari 25:130
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّمَا سَعَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيُرِيَ الْمُشْرِكِينَ قُوَّتَهُ‏.‏ زَادَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، سَمِعْتُ عَطَاءً، عَنِ ابْنِ عَبَّاسٍ، مِثْلَهُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வரும்போது தொங்கோட்டம் ஓடியது, இணைவைப்பாளர் களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1650 — Sahih al Bukhari 25:131
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ قَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، قَالَتْ فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ افْعَلِي كَمَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவு மில்லை. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், “ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையாத வரை இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யாதே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1651 — Sahih al Bukhari 25:132
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ،‏.‏ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم هُوَ وَأَصْحَابُهُ بِالْحَجِّ، وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْىٌ، غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَقَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ، وَمَعَهُ هَدْىٌ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، وَيَطُوفُوا، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا، إِلاَّ مَنْ كَانَ مَعَهُ الْهَدْىُ، فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى، وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ ‏"‏‏.‏ وَحَاضَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا طَهُرَتْ طَافَتْ بِالْبَيْتِ‏.‏ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَأَنْطَلِقُ بِحَجٍّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்க வில்லை. யமனிலிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் ‘மினா’வுக்குச் செல்ல வேண்டுமா? என்று பேசிக்கொண்டார்கள்.45 இச்செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்கள், “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது செல்லும் என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், குர்பானி(ப் பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின், இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” எனக் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறை வேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எல்லாரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே” எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின் உம்ராவையும் நிறைவேற்றினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1652 — Sahih al Bukhari 25:133
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ أَنْ أُخْتَهَا كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ، قَالَتْ كُنَّا نُدَاوِي الْكَلْمَى وَنَقُومُ عَلَى الْمَرْضَى‏.‏ فَسَأَلَتْ أُخْتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ هَلْ عَلَى إِحْدَانَا بَأْسٌ إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ قَالَ ‏"‏ لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَلْتَشْهَدِ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ ‏"‏‏.‏ فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ سَأَلْنَهَا ـ أَوْ قَالَتْ سَأَلْنَاهَا ـ فَقَالَتْ وَكَانَتْ لاَ تَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ قَالَتْ بِأَبِي‏.‏ فَقُلْنَا أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كَذَا وَكَذَا قَالَتْ نَعَمْ بِأَبِي‏.‏ فَقَالَ ‏"‏ لِتَخْرُجِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ ـ أَوِ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ ـ وَالْحُيَّضُ، فَيَشْهَدْنَ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى ‏"‏‏.‏ فَقُلْتُ الْحَائِضُ‏.‏ فَقَالَتْ أَوَ لَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَتَشْهَدُ كَذَا وَتَشْهَدُ كَذَا
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (இரு பெருநாள்களிலும் தொழும் திடலுக்கு) எங்கள் இளம் பெண்கள் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அந்தப் பெண் கூறினார்: என் சகோதரி (உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களுடைய தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார். அவருடைய கணவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் கலந்துகொண்டார். ஒரு முறை என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (போர்க் களத்தில்) காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை யளித்து வந்தோம்; நோயாளிகளைக் கவனித்து வந்தோம்; நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருத்திக்கு துப்பட்டா இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?” எனக் கேட்டேன். அதற்கு “அவளுடைய தோழி, தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்; அவள் நன்மை யான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வந்தபோது, அவரிடம் ‘(பெண்களாகிய) நாங்கள் கேட்டோம்’ அல்லது ‘பெண்கள் கேட்டனர்’. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘(அவர்களுக்கு) என் தந்தை அர்ப்பணமாகட்டும்!’ என்று கூறாமல் இருக்கவில்லை. (அதன்படி,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர், “ஆம்! என் தந்தை அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்: ‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கு கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். (அந்த மாளிகையில் தங்கியிருந்த) அப்பெண்மணி கூறினார்: இதைக் கேட்ட நான், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என (உம்மு அத்தியா விடம்) வினவினேன். அதற்கு “மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபாவுக் கும் (மினா, முஸ்தலிஃபா போன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில் லையா?” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.