Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1653 — Sahih al Bukhari 25:134
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قُلْتُ أَخْبِرْنِي بِشَىْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى‏.‏ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ‏.‏ ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ‏.‏
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்’ என்றார்கள். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் எங்கு அஸ்ர் தொழுதார்கள் எனக் கேட்டதும், ‘அல்அப்தஹ்’ (அல்முஹஸ்ஸப்) எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, “உம்முடைய தலைவர்கள் செய்வதைப் போன்றே செய்வீராக!” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1654 — Sahih al Bukhari 25:135
حَدَّثَنَا عَلِيٌّ، سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَيَّاشٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، لَقِيتُ أَنَسًا‏.‏ وَحَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ خَرَجْتُ إِلَى مِنًى يَوْمَ التَّرْوِيَةِ فَلَقِيتُ أَنَسًا ـ رضى الله عنه ـ ذَاهِبًا عَلَى حِمَارٍ فَقُلْتُ أَيْنَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم هَذَا الْيَوْمَ الظُّهْرَ فَقَالَ انْظُرْ حَيْثُ يُصَلِّي أُمَرَاؤُكَ فَصَلِّ‏.‏
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் துல்ஹஜ் எட்டாம் நாள் மினாவுக் குப் புறப்பட்டேன். அப்போது கழுதையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நான் அவர்களிடம், “இன்றைய (துல்ஹஜ் எட்டாம்) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கவனியுங்கள்! உம்முடைய தலைவர்கள் எந்த இடத்தில் தொழுகின்றார்களோ அந்த இடத்தில் தொழுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1655 — Sahih al Bukhari 25:136
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உஸ்மான் (ரலி) அவர்கள், தமது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1656 — Sahih al Bukhari 25:137
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا قَطُّ وَآمَنُهُ بِمِنًى رَكْعَتَيْنِ‏.‏
ஹாரிஸா பின் வஹ்ப் அல் குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்க ளுக்கு இரு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம்; எந்த அச்சமும் இல்லாமலும் இருந்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 1657 — Sahih al Bukhari 25:138
حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இரண்டு ரக்அத்களாவே தொழுதேன்; அபூபக்ர் (ரலி) அவர்களுட னும் உமர் (ரலி) அவர்களுடனும் (மினாவில்) (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். பின்னர் உங்களிடம் பல்வேறு கருத்துகள் தோன்றிவிட்டன. (நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!47 அத்தியாயம் :
ஹதீஸ் 1658 — Sahih al Bukhari 25:139
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَالِمٌ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الْفَضْلِ عَنْ أُمِّ الْفَضْلِ، شَكَّ النَّاسُ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَعَثْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرَابٍ فَشَرِبَهُ‏.‏
உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் ஒன்றை அனுப்பிவைத்தேன். அதை அவர்கள் அருந்தினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1659 — Sahih al Bukhari 25:140
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُهِلُّ مِنَّا الْمُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ‏.‏
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக் குப் போகும்போது அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய (அரஃபா) நாள் என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு, “அன்று எங்களில் சிலர் தல்பியா கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறினார்கள்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1660 — Sahih al Bukhari 25:141
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، قَالَ كَتَبَ عَبْدُ الْمَلِكِ إِلَى الْحَجَّاجِ أَنْ لاَ يُخَالِفَ ابْنَ عُمَرَ فِي الْحَجِّ، فَجَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ وَأَنَا مَعَهُ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِ الْحَجَّاجِ، فَخَرَجَ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ فَقَالَ مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ‏.‏ قَالَ هَذِهِ السَّاعَةَ قَالَ نَعَمْ‏.‏ قَالَ فَأَنْظِرْنِي حَتَّى أُفِيضَ عَلَى رَأْسِي ثُمَّ أَخْرُجَ‏.‏ فَنَزَلَ حَتَّى خَرَجَ الْحَجَّاجُ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي، فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ‏.‏ فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَبْدِ اللَّهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ عَبْدُ اللَّهِ قَالَ صَدَقَ‏.‏
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மன்னர்) அப்துல் மலிக் (பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ள வேண்டாம் என (அமீர்) ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் மஞ்சள் சாயம் பூசப்பட்ட பெரிய கீழங்கியுடன் வெளியே வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?” எனக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்” என்றார்கள். ஹஜ்ஜாஜ் “இந்த நேரத்திலா?” எனக் கேட்டதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகின் றேன், அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார்கள். ஹஜ்ஜாஜ், எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் உரையை (குத்பா) சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும்” என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களைப் பார்க்கலானார். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அதைக் கண்டபோது, “சாலிம் சொன்னது உண்மைதான்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1661 — Sahih al Bukhari 25:142
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا، اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ‏.‏ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهْوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَهُ‏.‏
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது தொடர்பாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்துகொண்டிருந்தனர். சிலர், ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் வேறுசிலர், ‘இல்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர். எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பி னேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டே அதை அருந்தி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1662 — Sahih al Bukhari 25:143
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ، عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ سَأَلَ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَيْفَ تَصْنَعُ فِي الْمَوْقِفِ يَوْمَ عَرَفَةَ فَقَالَ سَالِمٌ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ صَدَقَ‏.‏ إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السُّنَّةِ‏.‏ فَقُلْتُ لِسَالِمٍ أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَالِمٌ وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلاَّ سُنَّتَهُ
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில் (ஹஜ்ஜுக்கு வந்திருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள்?” என ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு சாலிம் (ரஹ்) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் அரஃபா நாளில் நண்பகலில் தொழுது விடுவீராக!” என்றார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “சாலிம் கூறியது உண்மைதான். (நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹ்ரையும் அஸ்ரையும் நபிவழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்” என்றார்கள். நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழியை நபித்தோழர்கள் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.