Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1663 — Sahih al Bukhari 25:144
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، كَتَبَ إِلَى الْحَجَّاجِ أَنْ يَأْتَمَّ، بِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الْحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ جَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَأَنَا مَعَهُ حِينَ زَاغَتِ الشَّمْسُ أَوْ زَالَتْ، فَصَاحَ عِنْدَ فُسْطَاطِهِ أَيْنَ هَذَا فَخَرَحَ إِلَيْهِ فَقَالَ ابْنُ عُمَرَ الرَّوَاحَ‏.‏ فَقَالَ الآنَ قَالَ نَعَمْ‏.‏ قَالَ أَنْظِرْنِي أُفِيضُ عَلَىَّ مَاءً‏.‏ فَنَزَلَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ حَتَّى خَرَجَ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي‏.‏ فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ الْيَوْمَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ صَدَقَ‏.‏
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மன்னர்) அப்துல் மலிக் பின் மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர் களைப் பின்பற்றுமாறு (அமீர்) ஹஜ்ஜாஜுக் குக் கடிதம் எழுதினார். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று ‘எங்கே அவர்?’ என்று சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் வெளியே வந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘புறப்படு வீராக!’ என்றார் ஹஜ்ஜாஜ், ‘இப்போதேவா?’ எனக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “நான் தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகிறேன்; அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை, (தமது வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார்கள். ஹஜ்ஜாஜ் எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்கு மிடையே நடந்துகொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால், உரையை (குத்பாவை)ச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்துவீராக!” என்றேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் “(சாலிம்) உண்மையே சொன்னார்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1664 — Sahih al Bukhari 25:145
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، كُنْتُ أَطْلُبُ بَعِيرًا لِي‏.‏ وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ هَذَا وَاللَّهِ مِنَ الْحُمْسِ فَمَا شَأْنُهُ هَا هُنَا
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒரு முறை) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளன்று எனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக்கொண்டு வந்த போது, நபி (ஸல்) அவர்கள் அரஃபா பெரு வெளியில் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (நபி (ஸல்) அவர்கள்), கடினமான சமயப் பற்றுடைய (குறைஷிக் குலத்த)வர் ஆயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என என்னுள் கூறிக் கொண்டேன்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1665 — Sahih al Bukhari 25:146
حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ عُرْوَةُ كَانَ النَّاسُ يَطُوفُونَ فِي الْجَاهِلِيَّةِ عُرَاةً إِلاَّ الْحُمْسَ، وَالْحُمْسُ قُرَيْشٌ وَمَا وَلَدَتْ، وَكَانَتِ الْحُمْسُ يَحْتَسِبُونَ عَلَى النَّاسِ يُعْطِي الرَّجُلُ الرَّجُلَ الثِّيَابَ يَطُوفُ فِيهَا، وَتُعْطِي الْمَرْأَةُ الْمَرْأَةَ الثِّيَابَ تَطُوفُ فِيهَا، فَمَنْ لَمْ يُعْطِهِ الْحُمْسُ طَافَ بِالْبَيْتِ عُرْيَانًا، وَكَانَ يُفِيضُ جَمَاعَةُ النَّاسِ مِنْ عَرَفَاتٍ، وَيُفِيضُ الْحُمْسُ مِنْ جَمْعٍ‏.‏ قَالَ وَأَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الْحُمْسِ ‏{‏ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ‏}‏ قَالَ كَانُوا يُفِيضُونَ مِنْ جَمْعٍ فَدُفِعُوا إِلَى عَرَفَاتٍ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றி வருவார்கள்; ‘ஹும்ஸ்’ (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! ‘ஹும்ஸ்’ என்போர், குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர்.50 இந்த ‘ஹும்ஸ்’கள் இறைவனுக்காக மக்களுக்கு நற்பணி ஆற்றிவந்தனர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு ஆணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ‘ஹும்ஸ்’கள் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும், மக்கள் கூட்டம் அரஃபாவி லிருந்தே திரும்பிச் செல்வார்கள். ஆனால், (குறைஷியரான) ஹும்ஸ்களோ (எல்லாம் முடிந்த பின்பு) முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள். “பின்பு மக்கள் திரும்புகிற இடத்தி லிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199) எனும் இறைவசனம் ‘ஹும்ஸ்’கள் தொடர் பாகவே அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா) எனும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களா யிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்கள் திருப்பி விடப்பட்டனர். அத்தியாயம் :
ஹதீஸ் 1666 — Sahih al Bukhari 25:147
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ سُئِلَ أُسَامَةُ وَأَنَا جَالِسٌ، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ فِي حَجَّةِ الْوَدَاعِ حِينَ دَفَعَ قَالَ كَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ‏.‏ قَالَ هِشَامٌ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ فَجْوَةٌ مُتَّسَعٌ، وَالْجَمِيعُ فَجَوَاتٌ وَفِجَاءٌ، وَكَذَلِكَ رَكْوَةٌ وَرِكَاءٌ‏.‏ مَنَاصٌ لَيْسَ حِينَ فِرَارٍ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உசாமா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, “விடைபெறும் ஹஜ்ஜில் (அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவுக்குத்) திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயண (வேக)ம் எவ்வாறு இருந்தது?” என உசாமா (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பார்கள். (நெரிசல் இல்லாத) விசாலமான இடம் கிடைத்ததும் விரைவாகச் செல்வார்கள்” எனக் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இங்கு மூலத்தில் ‘விரைவாகச் செல்லல்’ என்பதைக் குறிக்க ‘நஸ்ஸு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘நஸ்ஸு’ என்பது மிதமான வேகத்துக்கு (‘அனக்’) மேலான வேகத்தைக் குறிக்கும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஃபஜ்வத்’ எனும் சொல்லுக்கு ‘விசாலமானது’ என்பது பொருளாகும். ‘ஃபஜ்வாத்’, ‘ஃபிஜாஉ’ என்பவை இதன் பன்மைகளாகும்; ‘ரக்வத்’ (தோல் கிண்ணம்) என்பதற்கு ‘ரிகாஉ’ என்பது பன்மை என்பதைப்போல. (‘நஸ்ஸு’ என்பதிலிருந்து பிறந்த) ‘மனாஸ்’ எனும் சொல்லுக்கு ‘விரண்டோடும் நேரம்’ என்பது பொருள். “விரண்டோடி தப்பிக்கும் நேரமாக அது இல்லை” (38:3) என்கிறது குர்ஆன். அத்தியாயம் :
ஹதீஸ் 1667 — Sahih al Bukhari 25:148
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ فَقَضَى حَاجَتَهُ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي فَقَالَ ‏ "‏ الصَّلاَةُ أَمَامَكَ ‏"‏‏.‏
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கிற்குப் போய் தமது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிவிட்டு, அங்கத் தூய்மை செய்துகொண்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழப் போகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1668 — Sahih al Bukhari 25:149
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، غَيْرَ أَنَّهُ يَمُرُّ بِالشِّعْبِ الَّذِي أَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَيَدْخُلُ فَيَنْتَفِضُ وَيَتَوَضَّأُ، وَلاَ يُصَلِّي حَتَّى يُصَلِّيَ بِجَمْعٍ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (ஜம்உ செய்து) முஸ்தலிஃபாவில் தொழுப வராக இருந்தார்கள். ஆயினும் அவர்கள், வழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்ற ஒதுங்கிய பள்ளத்தாக்குக்குச் சென்று, தமது தேவையை நிறைவேற்றி, அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். (ஆனால்,) முஸ்தலிஃபாவுக்கு வந்த பிறகுதான் தொழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1669 — Sahih al Bukhari #1669
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَاتٍ فَلَمَّا بَلَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشِّعْبَ الأَيْسَرَ الَّذِي دُونَ الْمُزْدَلِفَةِ أَنَاخَ، فَبَالَ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ الْوَضُوءَ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا‏.‏ فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏ "‏ الصَّلاَةُ أَمَامَكَ ‏"‏‏.‏ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى ثُمَّ رَدِفَ الْفَضْلُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَدَاةَ جَمْعٍ‏.‏ قَالَ كُرَيْبٌ فَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ الْفَضْلِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ‏.‏

ஹதீஸ் 1670 — Sahih al Bukhari 25:150

ஹதீஸ் 1671 — Sahih al Bukhari 25:151
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى وَالِبَةَ الْكُوفِيُّ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلإِبِلِ فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ وَقَالَ ‏ "‏ أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالإِيضَاعِ ‏"‏‏.‏ أَوْضَعُوا أَسْرَعُوا‏.‏ خِلاَلَكُمْ مِنَ التَّخَلُّلِ بَيْنَكُمْ، وَفَجَّرْنَا خِلاَلَهُمَا‏.‏ بَيْنَهُمَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா (துல்ஹஜ் பத்தாம்) நாளன்று நபி (ஸல்) அவர்களுடன் நான் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக்கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தமது சாட்டை யால் சைகை செய்து “மக்களே! அமைதி யைக் கடைப்பிடியுங்கள். நன்மையென்பது வேகத்தில் இல்லை” எனக் கூறினார்கள். (இங்கு மூலத்தில் ‘வேகம்’ என்பதைக் குறிக்க ‘ஈளாஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. இச்சொல்லில் இருந்த பிறந்த வினைச்சொல்லான) ‘அவ்ளஊ’ என்பதற்கு ‘அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்’ என்பது பொருள். “உங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேகம் காட்டியிருப்பார்கள்” (9:47) எனும் இறைவசனத்தில் இச்சொல் (அவ்ளஊ) இடம்பெறுகிறது. இதில் ‘கிலால(க்)கும்’ என்பதற்கு ‘உங்களுக்கு மத்தியில்’ (பைன(க்)கும்) என்பது பொருள் ஆகும். “அவ்விரண்டுக்கும் இடையில் (கிலால ஹுமா) ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்” (18:33) என்று அல்லாஹ் கூறுகின்றான். அத்தியாயம் :
ஹதீஸ் 1672 — Sahih al Bukhari 25:152
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ، فَنَزَلَ الشِّعْبَ، فَبَالَ ثُمَّ تَوَضَّأَ، وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ‏.‏ فَقُلْتُ لَهُ الصَّلاَةُ‏.‏ فَقَالَ ‏ "‏ الصَّلاَةُ أَمَامَكَ ‏"‏‏.‏ فَجَاءَ الْمُزْدَلِفَةَ، فَتَوَضَّأَ، فَأَسْبَغَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا‏.‏
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) திரும்பி னார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான் அவர்களிடம் “தொழப்போகிறீர் களா?” என்றேன். அதற்கு அவர்கள் “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) இருக்கிறது!” என்றார்கள். பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத் தைத் தத்தமது இருப்பிடத்தில் படுக்க வைத்தார்கள். பிறகு (இஷா) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.