அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர்கள் தனித்தனியாக (மஃக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளை, தனித் தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமானபோது தொழுதார்கள். அப்போது சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகிவிட்டது’ என்றும் சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகவில்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர். பிறகு அவர்கள், “இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று: மக்ரிப் மற்றும் இஷாவாகும்; ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில்தான்) முஸ்தலிஃபாவை அடை வார்கள். மற்றொன்று: இந்த நேரத்தின் ஃபஜ்ர் தொழுகை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள். பிறகு அவர்கள் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உஸ்மான் (ரலி) அவர்கள்) இப்போது இங்கிருந்து (மினா) திரும்பினால் நபிவழியைச் செயல்படுத்தியவர் ஆவார்” எனக் கூறினார்கள். “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா, அல்லது உஸ்மான் (ரலி) அவர்கள் புறப்பட்டது விரைவானதா?” என்பது எனக்குத் தெரியவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் ‘ஜம்ரத்துல் அகபா’வுக்கு வந்து கல்லெறியும்வரை ‘தல்பியா’ சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1684 — Sahih al Bukhari 25:164
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، يَقُولُ شَهِدْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ صَلَّى بِجَمْعٍ الصُّبْحَ، ثُمَّ وَقَفَ فَقَالَ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَيَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ. وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَالَفَهُمْ، ثُمَّ أَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ.
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா வில் ஃபஜ்ர் தொழுததை நான் கண்டேன். பிறகு அங்கு அவர்கள் தங்கினார்கள். “இணைவைப்பாளர்கள், சூரியன் உதயமாகாத வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை; அவர்கள் ‘ஸபீர் மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!’ என்றும் கூறுவார்கள்; ஆனால், நபி (ஸல்) அவர் களோ இணைவைப்பாளர்களுக்கு மாற்ற மாக நடந்தார்கள்” என்று கூறினார்கள். பிறகு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1685 — Sahih al Bukhari 25:165
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ، فَأَخْبَرَ الْفَضْلُ أَنَّهُ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அரஃபாவி லிருந்து திரும்புகையில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஜம்ரா (அகபா)வில் கல்லெறிகின்ற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்” என ஃபள்ல் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1686 — Sahih al Bukhari 25:166
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى ـ قَالَ ـ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவரை நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை ஃபள்ல் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருந் தார்கள்” என அவ்விருவரும் கூறினர். அத்தியாயம் :
ஹதீஸ் 1687 — Sahih al Bukhari #1687
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى ـ قَالَ ـ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவரை நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை ஃபள்ல் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருந் தார்கள்” என அவ்விருவரும் கூறினர். அத்தியாயம் :
ஹதீஸ் 1688 — Sahih al Bukhari 25:167
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ الْمُتْعَةِ، فَأَمَرَنِي بِهَا، وَسَأَلْتُهُ عَنِ الْهَدْىِ، فَقَالَ فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ قَالَ وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا، فَنِمْتُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي حَجٌّ مَبْرُورٌ، وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ. فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَحَدَّثْتُهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم قَالَ وَقَالَ آدَمُ وَوَهْبُ بْنُ جَرِيرٍ وَغُنْدَرٌ عَنْ شُعْبَةَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، وَحَجٌّ مَبْرُورٌ.
அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் அதையே நிறைவேற்றுமாறு என்னிடம் கூறினார்கள். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆட்டை குர்பானி கொடுக்கலாம்; அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) குர்பானியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்” என்று கூறினார்கள். மக்களோ, ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜை வெறுத்தது போன்றிருந்தது. இந்நிலையில் (கஅபா அருகில்) நான் உறங்கியபோது கனவில் ஒருவர், “ஏற்கப்பட்ட ஹஜ்ஜும் ஒப்புக்கொள்ளப்பட்ட ‘தமத்துஉ’வும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று உரக்கக் கூவியதைப் போன்று தெரிந்தது. உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையே இது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் ஏற்கப்பட்ட ஹஜ்ஜும்’ என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1689 — Sahih al Bukhari 25:168
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ " ارْكَبْهَا ". فَقَالَ إِنَّهَا بَدَنَةٌ. فَقَالَ " ارْكَبْهَا ". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا، وَيْلَكَ ". فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள். அவர் “இது குர்பானி ஒட்டகம்” என்றார். (மீண்டும்) “அதில் ஏறிக்கொள்வீராக!” எள்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது தடவையிலோ, மூன்றாவது தடவையிலோ நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1690 — Sahih al Bukhari 25:169
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ " ارْكَبْهَا ". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا ". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا ". ثَلاَثًا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே?” என்றார். “(பரவாயில்லை அதில்) ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். மீண்டும் அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அப்போதும் “(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்!” என மூன்றாம் முறையும் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1691 — Sahih al Bukhari 25:170
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، وَأَهْدَى فَسَاقَ مَعَهُ الْهَدْىَ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَبَدَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَهَلَّ بِالْعُمْرَةِ، ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، فَكَانَ مِنَ النَّاسِ مَنْ أَهْدَى فَسَاقَ الْهَدْىَ، وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، قَالَ لِلنَّاسِ " مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى فَإِنَّهُ لاَ يَحِلُّ لِشَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَقْضِيَ حَجَّهُ، وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى فَلْيَطُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَلْيُقَصِّرْ، وَلْيَحْلِلْ، ثُمَّ لِيُهِلَّ بِالْحَجِّ، فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا فَلْيَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ ". فَطَافَ حِينَ قَدِمَ مَكَّةَ، وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَىْءٍ، ثُمَّ خَبَّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعًا، فَرَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا فَطَافَ بِالصَّفَا وَالْمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ، ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ، وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَىْءٍ حَرُمَ مِنْهُ، وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَهْدَى وَسَاقَ الْهَدْىَ مِنَ النَّاسِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது உம்ரா வுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள்.53 (மதீனாவாசிகளின் எல்லையான) துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச்சென்று குர்பானியும் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர் களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். வேறுசிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (ஆகவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை). நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், “உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்துள் ளாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறை வேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது; யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவரவில்லையோ அவர் இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்து விட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, பிறகு ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! யாருக்கு குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையோ அவர், ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தமது வீடு திரும்பிய தும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!” என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்ததும், (இறையில்லம் கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்துவிட்டு முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டி பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். (ஏழில்) மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடியும் நான்கு சுற்றுகள் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்தார்கள். தவாஃப் செய்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சலாம் கொடுத்ததும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு தடவை ‘சயீ’ செய்தார்கள். பிறகு, தமது ஹஜ்ஜை முடிக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தமது குர்பானிப் பிராணியைப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட் டார்கள். மக்களில் குர்பானி பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர் களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1692 — Sahih al Bukhari 25:171
وَعَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَمَتُّعِهِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா செய்தனர். இவ்வாறு தெரிவித்த ஆயிஷா (ரலி) அவர்கள், தொடர்ந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய (முந்தைய ஹதீஸில் உள்ள) செய்தியையே என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :