நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (இந்த ஆண்டு ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில், இறையில்லம் கஅபாவை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது” எனக் கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது’ (33:21) என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே, நான் என்மீது உம்ராவைக் கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சி யாக்குகிறேன்” எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ‘பைதாஉ’ எனுமிடத்தை அடைந்தததும் ஹஜ்ஜுக் கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். அப்போது அவர்கள் “ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே” எனக் கூறிவிட்டு, ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். பின்னர் இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக் காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு தவாஃப் செய்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.54 அத்தியாயம் :
ஹதீஸ் 1694 — Sahih al Bukhari 25:173
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ زَمَنَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، حَتَّى إِذَا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْهَدْىَ وَأَشْعَرَ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியோர் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனா விலிருந்து புறப்பட்டார்கள்; துல்ஹுலை ஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணி யின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டு அடையாளமும் இட்டார்கள்; பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1695 — Sahih al Bukhari #1695
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ زَمَنَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، حَتَّى إِذَا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْهَدْىَ وَأَشْعَرَ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியோர் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனா விலிருந்து புறப்பட்டார்கள்; துல்ஹுலை ஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணி யின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டு அடையாளமும் இட்டார்கள்; பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1696 — Sahih al Bukhari 25:174
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَأَهْدَاهَا، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ أُحِلَّ لَهُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களுக்கு நான் என் கைகளால் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களின் கழுத்தில் தொங்கவிட்டு, அவற்றுக்கு அடையாளமிட்டார்கள். (பிறகு மக்காவில்) குர்பானி கொடு(ப்பதற்காக அனுப்பிவை)த்தார்கள். ஆனால், (அதற்குமுன்) அவர்களுக்கு அனுமதிக்கப்படடிருந்த எதுவும் (அப்போது மதீனாவிலிருந்த) அவர்கள்மீது (இஹ்ராம் கட்டியவருக்குப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.55 அத்தியாயம் :
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால், நீங்கள் இஹ்ராவிலிருந்து விடுபடவில்லையே!?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் தலைமுடி யில் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டுள்ளேன்; எனவே, நான் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1698 — Sahih al Bukhari 25:176
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُهْدِي مِنَ الْمَدِينَةِ، فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ، ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து குர்பானிப் பிராணியை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களது குர்பானி பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் திரிப்பேன். (குர்பானி பிராணியை அனுப்பிய) பிறகு அவர்கள், இஹ்ராம் கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1699 — Sahih al Bukhari 25:177
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا ـ أَوْ قَلَّدْتُهَا ـ ثُمَّ بَعَثَ بِهَا إِلَى الْبَيْتِ، وَأَقَامَ بِالْمَدِينَةِ، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ لَهُ حِلٌّ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கு நான் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவர்கள் அதற்கு அடையாளமிட்டு மாலைகளைத் தொங்க விட்டார்கள் -அல்லது நான் தொங்க விட்டேன். பிறகு அதை இறையில்லம் கஅபா வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்பட்டதாக ஆகவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1700 — Sahih al Bukhari 25:178
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ زِيَادَ بْنَ أَبِي سُفْيَانَ كَتَبَ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ حَتَّى يُنْحَرَ هَدْيُهُ. قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ، أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸியாத் பின் அபீசுஃப்யான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப் படும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறாரே! (இது சரியா?) எனக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கான அடையாள மாலைகளை எனது கையாலேயே திரித்திருக்கிறேன்; பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மாலைகளைத் தம் கரங்களால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத் தார்கள்; ஆனால், அந்த குர்பானிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் தடை செய்யப்பட வில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1701 — Sahih al Bukhari 25:179
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً غَنَمًا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1702 — Sahih al Bukhari 25:180
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ الْقَلاَئِدَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَلِّدُ الْغَنَمَ، وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلاَلاً.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரிப்பேன். நபி (ஸல்) அவர்கள் ஆட்டுக்கு அவற்றைத் தொங்க விடுவார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தம் குடும்பத்தாருடன் இஹ்ராம் கட்டாத நிலையில் (மதீனாவில்) தங்குவார்கள். அத்தியாயம் :