حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ،. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ الْغَنَمِ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ بِهَا، ثُمَّ يَمْكُثُ حَلاَلاً.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக (குர்பானி) ஆடுகளின் அடையாள மாலை களைத் தொடுப்பேன். நபி (ஸல்) அவர்கள் அந்த ஆடுகளை (மக்காவுக்கு) அனுப்பி விட்டு, அவர்கள் இஹ்ராமில்லாத நிலை யில் (தமது வீட்டில்) தங்குவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1704 — Sahih al Bukhari 25:182
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ لِهَدْىِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ تَعْنِي الْقَلاَئِدَ ـ قَبْلَ أَنْ يُحْرِمَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பாக, அவர்களின் குர்பானிப் பிராணிக்கு -அடையான மாலைகளை- நான் தொடுத்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1705 — Sahih al Bukhari 25:183
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது: நான் குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளை என்னிடமிருந்த கம்பளியால் திரித்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1706 — Sahih al Bukhari 25:184
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، قَالَ " ارْكَبْهَا ". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا ". قَالَ فَلَقَدْ رَأَيْتُهُ رَاكِبَهَا يُسَايِرُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالنَّعْلُ فِي عُنُقِهَا. تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்பானி பிராணியை இழுத்துக் கொண்டு (நடந்து) சென்ற ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி பிராணி” என்றதும், “அதில் ஏறுவீராக!” என்று மீண்டும் கூறினார்கள். பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை நான் பார்த்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்த ஒட்டகத்தின் கழுத்தில் காலணி கிடந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1707 — Sahih al Bukhari 25:185
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறுக்கும் குர்பானி பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்துவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56 அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள். பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1709 — Sahih al Bukhari 25:187
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، لاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ، إِذَا طَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ، قَالَتْ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ. فَقُلْتُ مَا هَذَا قَالَ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُهُ لِلْقَاسِمِ، فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். மக்காவை நாங்கள் நெருங்கிய தும், “குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்த வுடன், இஹ்ராமைக் களைந்துவிட வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டி றைச்சி எங்களிடம் கொண்டுவரப்பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக குர்பானி கொடுத்தார் கள்” என்று (வந்தவர்) சொன்னார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1710 — Sahih al Bukhari 25:188
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ خَالِدَ بْنَ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ. قَالَ عُبَيْدُ اللَّهِ مَنْحَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்திலேயே குர்பானி கொடுப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1711 — Sahih al Bukhari 25:189
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبْعَثُ بِهَدْيِهِ مِنْ جَمْعٍ مِنْ آخِرِ اللَّيْلِ، حَتَّى يُدْخَلَ بِهِ مَنْحَرُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ حُجَّاجٍ فِيهِمُ الْحُرُّ وَالْمَمْلُوكُ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் முஸ்தலி ஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதி யில் தமது குர்பானிப் பிராணியை ஹாஜிகளுடன் அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற் காக இவ்வாறு அனுப்புவார்கள். அந்த ஹாஜிகளில் அடிமைகளும் சுதந்திர மானவர்களும் இருந்தனர்.57 அத்தியாயம் :
ஹதீஸ் 1712 — Sahih al Bukhari 25:190
حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ وَذَكَرَ الْحَدِيثَ ـ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ. مُخْتَصَرًا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்துத் தமது கையாலேயே அறுத்தார்கள், மேலும், அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள். அத்தியாயம் :