حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَى عَلَى رَجُلٍ، قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً، سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ.
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்து, “அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும்” என்று கூறியதை நான் பார்த்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :
ஹதீஸ் 1714 — Sahih al Bukhari 25:192
حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَبَاتَ بِهَا، فَلَمَّا أَصْبَحَ رَكِبَ رَاحِلَتَهُ، فَجَعَلَ يُهَلِّلُ وَيُسَبِّحُ، فَلَمَّا عَلاَ عَلَى الْبَيْدَاءِ لَبَّى بِهِمَا جَمِيعًا، فَلَمَّا دَخَلَ مَكَّةَ أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا. وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தைத் தொடங்கியபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழு(வித்)தார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதுவிட்டு அங்கேயே இரவில் தங்கினார்கள். காலை விடிந்ததும் தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வும் ‘சுப்ஹானல்லாஹ்’ வும் கூறிக்கொண்டே சென்றார்கள். ‘அல்பைதாஉ’ எனுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமி லிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்துப் பலியிட்டார்கள். (பெருநாளன்று) பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1715 — Sahih al Bukhari 25:193
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ. وَعَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ، فَصَلَّى الصُّبْحَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபா வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் சுப்ஹு தொழுதார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறி ‘அல்பைதாஉ’ எனுமிடத்தை அடைந்த போது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1716 — Sahih al Bukhari 25:194
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُمْتُ عَلَى الْبُدْنِ، فَأَمَرَنِي فَقَسَمْتُ لُحُومَهَا، ثُمَّ أَمَرَنِي فَقَسَمْتُ جِلاَلَهَا وَجُلُودَهَا. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِي عَبْدُ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَقُومَ عَلَى الْبُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு) என்னை நியமித் தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வாறே நான் செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் (ஏழைகளுக்குப்) பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். மற்றோர் அறிவிப்பில், “குர்பானி பிராணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1717 — Sahih al Bukhari 25:195
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، وَعَبْدُ الْكَرِيمِ الْجَزَرِيُّ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُمَا أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத் தையும் (தர்மமாகப்) பங்கிடுமாறும் உரிப்ப தற்கான கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1718 — Sahih al Bukhari 25:196
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مِائَةَ بَدَنَةٍ، فَأَمَرَنِي بِلُحُومِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ أَمَرَنِي بِجِلاَلِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ بِجُلُودِهَا فَقَسَمْتُهَا.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங் களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1719 — Sahih al Bukhari 25:197
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنَّا لاَ نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلاَثِ مِنًى، فَرَخَّصَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " كُلُوا وَتَزَوَّدُوا ". فَأَكَلْنَا وَتَزَوَّدْنَا. قُلْتُ لِعَطَاءٍ أَقَالَ حَتَّى جِئْنَا الْمَدِينَةَ قَالَ لاَ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மினா’வில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குமேல் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உண்ணுங்கள்; சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி எங்களுக்கு அனுமதி வழங்கியதும் நாங்கள் உண்ணலானோம்; சேமித்துவைக்கலானோம். ‘மதீனா வரும்வரை (உண்டோம்)’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.58 அத்தியாயம் :
ஹதீஸ் 1720 — Sahih al Bukhari 25:198
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، وَلاَ نَرَى إِلاَّ الْحَجَّ، حَتَّى إِذَا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ إِذَا طَافَ بِالْبَيْتِ ثُمَّ يَحِلُّ. قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقِيلَ ذَبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ. فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கிய தும், குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டிறைச்சி எங்களிடம் கொண்டுவரப் பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரின் சார்பாகப் பலியிட்டார் கள்” என்று சொல்லப்பட்டது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1721 — Sahih al Bukhari 25:199
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ. فَقَالَ " لاَ حَرَجَ، لاَ حَرَجَ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது), குர்பானி கொடுப்பதற்குமுன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை! குற்றமில்லை” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1722 — Sahih al Bukhari 25:200
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ " لاَ حَرَجَ ". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ " لاَ حَرَجَ ". قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ " لاَ حَرَجَ ". وَقَالَ عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ عَنِ ابْنِ خُثَيْمٍ أَخْبَرَنِي عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ الْقَاسِمُ بْنُ يَحْيَى حَدَّثَنِي ابْنُ خُثَيْمٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَفَّانُ أُرَاهُ عَنْ وُهَيْبٍ، حَدَّثَنَا ابْنُ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ حَمَّادٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ وَعَبَّادِ بْنِ مَنْصُورٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே ‘தவாஃபுல் இஃபாளா’ (தவாஃபுஸ் ஸியாரத்) செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்” என்றதும், அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள். மேலும் அவர், “நான் கல்லெறிவதற்கு முன்பாகவே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அப்போதும் அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :