Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1723 — Sahih al Bukhari 25:201
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ‏.‏ فَقَالَ ‏"‏ لاَ حَرَجَ ‏"‏‏.‏ قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ‏.‏ قَالَ ‏"‏ لاَ حَرَجَ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்தபின் கல்லெறிந்தேன்” என்று கேட்டார். அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகவே தலையை மழித்துவிட்டேன்” என்றபோதும் அவர்கள், “குற்றமில்லை” என்றே கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1724 — Sahih al Bukhari 25:202
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْبَطْحَاءِ‏.‏ فَقَالَ ‏"‏ أَحَجَجْتَ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ بِمَا أَهْلَلْتَ ‏"‏‏.‏ قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ قَالَ ‏"‏ أَحْسَنْتَ، انْطَلِقْ فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ‏"‏‏.‏ ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ، فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ، حَتَّى خِلاَفَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ فَذَكَرْتُهُ لَهُ‏.‏ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ‏.‏
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தபோது (ஹஜ்ஜுக்காக) நான் (யமன் நாட்டிலிருந்து) வந்தேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீரா?” எனக் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என அவர்கள் கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக” என்றேன். அவர்கள், “நன்றே செய்தீர். போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா- மர்வாவையும் தவாஃப் செய்யும்!” என்றார் கள். பிறகு நான் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவுப்) பெண்களில் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன். உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி நான் கூறியதும் அவர்கள், “நாம் இறைவேதத்தை எடுத்துக்கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக்கொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை” என்று கூறினார்கள்.60 அத்தியாயம் :
ஹதீஸ் 1725 — Sahih al Bukhari 25:203
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ ‏ "‏ إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ ‏"‏‏.‏
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்து விட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்தபிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே, குர்பானி கொடுக்காத வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1726 — Sahih al Bukhari 25:204
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّتِهِ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1727 — Sahih al Bukhari 25:205
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ ‏"‏‏.‏ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ ‏"‏‏.‏ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ وَالْمُقَصِّرِينَ ‏"‏‏.‏ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ ‏"‏ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ ‏"‏ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ‏.‏ قَالَ وَقَالَ عُبَيْدُ اللَّهِ حَدَّثَنِي نَافِعٌ وَقَالَ فِي الرَّابِعَةِ ‏"‏ وَالْمُقَصِّرِينَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறினார்கள். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தி யுங்கள்)” என்றார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர் களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நான்காவது தடவையில், “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” எனக் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 1728 — Sahih al Bukhari 25:206
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ ‏"‏‏.‏ قَالُوا وَلِلْمُقَصِّرِينَ‏.‏ قَالَ ‏"‏ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ ‏"‏‏.‏ قَالُوا وَلِلْمُقَصِّرِينَ‏.‏ قَالَهَا ثَلاَثًا‏.‏ قَالَ ‏"‏ وَلِلْمُقَصِّرِينَ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...” என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும் அதைக் கூறியபோது “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக!)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1729 — Sahih al Bukhari 25:207
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ حَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَقَصَّرَ بَعْضُهُمْ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களு டைய தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் (ஹஜ்ஜில்) தலையை மழித்துக்கொண்டனர். வேறுசிலர் முடியைக் குறைத்துக்கொண்டனர். அத்தியாயம் :
ஹதீஸ் 1730 — Sahih al Bukhari 25:208
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاوِيَةَ ـ رضى الله عنهم ـ قَالَ قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ‏.‏
முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடியை (மர்வாவில் வைத்து) கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்தேன்.62 அத்தியாயம் :
ஹதீஸ் 1731 — Sahih al Bukhari 25:209
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ يَحِلُّوا، وَيَحْلِقُوا أَوْ يُقَصِّرُوا‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்தபின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென் றும் பிறகு தலையை மழித்துக்கொள் ளவோ முடியைக் குறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்றும் (‘தமத்துஉ’ செய்த) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1732 — Sahih al Bukhari 25:210
وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا، ثُمَّ يَقِيلُ ثُمَّ يَأْتِي مِنًى ـ يَعْنِي يَوْمَ النَّحْرِ ـ‏.‏ وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரேயொரு தவாஃப் செய்துவிட்டு மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மினாவுக்கு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்த தாக (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாக) மற்றோர் அறிவிப்பில் காணப்படு கிறது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.