முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பிறகு சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப் பார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதியில் இறங்கி, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார் கள்; அங்கு நிற்கமாட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள் என சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்பவராக இருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1754 — Sahih al Bukhari 25:232
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ ـ وَكَانَ أَفْضَلَ أَهْلِ زَمَانِهِ ـ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ هَاتَيْنِ حِينَ أَحْرَمَ، وَلِحِلِّهِ حِينَ أَحَلَّ، قَبْلَ أَنْ يَطُوفَ. وَبَسَطَتْ يَدَيْهَا.
தம் காலத்தவரில் சிறந்த அறிஞராக விளங்கிய காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட நாடியபோதும், தவாஃபுல் இஃபாளா செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல் லெறிந்துவிட்டு, தலையை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டிருந்த வேளையிலும் நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்” எனக் கூறித் தம்முடைய இரு கைகளை யும் விரித்துக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1755 — Sahih al Bukhari 25:233
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنِ الْحَائِضِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1756 — Sahih al Bukhari 25:234
حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ. تَابَعَهُ اللَّيْثُ حَدَّثَنِي خَالِدٌ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் மினாவில் கல்லெறிந்தபின்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தொழுது விட்டு, பின்னர் சிறிது நேரம் உறங்கினார் கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அதை (இறுதியாக) தவாஃப் செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1757 — Sahih al Bukhari 25:235
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَاضَتْ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَحَابِسَتُنَا هِيَ ". قَالُوا إِنَّهَا قَدْ أَفَاضَتْ. قَالَ " فَلاَ إِذًا ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு (ஹஜ்ஜின்போது) மாத விடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டர்கள். அதற்குத் தோழர்கள் “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், பரவாயில்லை. (நாம் போகலாம்!)” என்றார்கள். அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒரு பெண் (ஹஜ்ஜில் இஃபாளா) தவாஃப் செய்தபிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், “அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டி யதுதான்” என்றார்கள். அப்போது மக்கள், “உங்கள் கூற்றை எடுத்துக்கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை” என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றதும் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப்பாருங்கள்” என்றார்கள். மக்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்கள் (விளக்கம்) கேட்டவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

ஹதீஸ் 1760 — Sahih al Bukhari #1760
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ. قَالَ وَسَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّهَا لاَ تَنْفِرُ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لَهُنَّ.

ஹதீஸ் 1761 — Sahih al Bukhari 25:237

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தோடு புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறை யில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வா வையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய துணைவியர், அவர் களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானி பிராணி கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா கிரியைகளையும் செய்தோம். நபி (ஸல்) அவர்கள் ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கியிருந்த - (மினாவிலி ருந்து) திரும்ப வேண்டிய- இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நாம் மக்காவுக்கு வந்கு சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “நீ உன் சகோதரருடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்! மேலும், இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள். நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ சென்று உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய். நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாயல்லவா?” எனக் கேட்டார் கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்றதும், “அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசி களுடன் மேலே ஏறும்போது அவர்களை நான் சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. எல்லாத் தொடர்களிலும் (மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்ததைக் குறிக்க) ‘லா’ எனும் சொல்லே இடம்பெறுகிறது. (வேறுசில அறிவிப்புகளில் ‘பலா’ எனும் சொல் காணப்படுகிறது.) அத்தியாயம் :