Qurani·قرآني
தமிழ்

ஹஜ் (தீர்த்தயாத்திரை)

260 ஹதீஸ்கள் · #1513–1772

ஹதீஸ் 1763 — Sahih al Bukhari 25:239
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبِرْنِي بِشَىْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى‏.‏ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ‏.‏ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ‏.‏
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்’ என்று பதிலளித்தார் கள். அடுத்து நான், “(மினாவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கே அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘அல்அப்தஹில்’ என்று கூறிவிட்டு, “உன் தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1764 — Sahih al Bukhari 25:240
حَدَّثَنَا عَبْدُ الْمُتَعَالِ بْنُ طَالِبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ قَتَادَةَ، حَدَّثَهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، وَرَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நஃப்ருடைய நாளில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை அல்முஹஸ்ஸ பில் நிறைவேற்றிவிட்டு சிறிது நேரம் உறங்கினார்கள். பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1765 — Sahih al Bukhari 25:241
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّمَا كَانَ مَنْزِلٌ يَنْزِلُهُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَكُونَ أَسْمَحَ لِخُرُوجِهِ‏.‏ يَعْنِي بِالأَبْطَحِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல; மதீனாவுக்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே அல்முஹஸ்ஸப் -அதாவது அல்அப்தஹ்- ஆகும். அத்தியாயம் :
ஹதீஸ் 1766 — Sahih al Bukhari 25:242
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَيْسَ التَّحْصِيبُ بِشَىْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ் ஜின் கிரியைகளில் ஒன்றல்ல; அது நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓரிடம்; அவ்வளவுதான். அத்தியாயம் :
ஹதீஸ் 1767 — Sahih al Bukhari 25:243
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبِيتُ بِذِي طُوًى بَيْنَ الثَّنِيَّتَيْنِ، ثُمَّ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَكَانَ إِذَا قَدِمَ مَكَّةَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا لَمْ يُنِخْ نَاقَتَهُ إِلاَّ عِنْدَ باب الْمَسْجِدِ، ثُمَّ يَدْخُلُ فَيَأْتِي الرُّكْنَ الأَسْوَدَ فَيَبْدَأُ بِهِ، ثُمَّ يَطُوفُ سَبْعًا ثَلاَثًا سَعْيًا، وَأَرْبَعًا مَشْيًا، ثُمَّ يَنْصَرِفُ فَيُصَلِّي سَجْدَتَيْنِ، ثُمَّ يَنْطَلِقُ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى مَنْزِلِهِ، فَيَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَكَانَ إِذَا صَدَرَ عَنِ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ الَّتِي كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنِيخُ بِهَا‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘தூ துவா’ விலுள்ள இரண்டு கணவாய்களுக் கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக் காகவோ மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் தலைவாயில் அருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள். பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து ஆரம்பித்து (கஅபாவை) ஏழு முறை சுற்றுவார்கள். (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்தும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு தமது இருப்பிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பாகச் சென்று ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள். மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக் குத்) திரும்பும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்துத் தங்கிய, ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் வாகனத்தைப் படுக்கவைத்துத் தங்குவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1768 — Sahih al Bukhari 25:244
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ سُئِلَ عُبَيْدُ اللَّهِ عَنِ الْمُحَصَّبِ، فَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ،، قَالَ نَزَلَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعُمَرُ وَابْنُ عُمَرَ‏.‏ وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُصَلِّي بِهَا ـ يَعْنِي الْمُحَصَّبَ ـ الظُّهْرَ وَالْعَصْرَ ـ أَحْسِبُهُ قَالَ وَالْمَغْرِبَ‏.‏ قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي الْعِشَاءِ، وَيَهْجَعُ هَجْعَةً، وَيَذْكُرُ ذَلِكَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம் ‘அல்முஹஸ்ஸப்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள். “இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார் கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் நினைக்கிறேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. “(இஷாவைத் தொழுத) பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கிவிடுவார்கள்; மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்” எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1769 — Sahih al Bukhari 25:245
وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى، حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ، وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்கா வுக்கு) வரும்போது ‘தூ துவா’வில் இரவில் தங்குவார்கள். விடிந்ததும் (மக்காவுக்குள்) நுழைவார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ‘தூ துவா’வில் விடியும்வரை தங்குவார்கள். மேலும், இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள் என்றும் கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1770 — Sahih al Bukhari 25:246
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ ‏{‏لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ‏}‏ فِي مَوَاسِمِ الْحَجِّ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: துல்மஜாஸ், உ(க்)காழ் ஆகியவை அறியாமைக் கால வணிகத் தலங்களாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் மக்கள் அவ்வணிகத் தலங்களை வெறுக்கலா னார்கள். இறுதியில், “(ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமாகாது” (2:198) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது. அத்தியாயம் :
ஹதீஸ் 1771 — Sahih al Bukhari #1771
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ، فَقَالَتْ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَكُمْ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ ‏"‏‏.‏ قِيلَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَانْفِرِي ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَزَادَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا مُحَاضِرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا أَنْ نَحِلَّ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ حَلْقَى عَقْرَى، مَا أُرَاهَا إِلاَّ حَابِسَتَكُمْ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ ‏"‏‏.‏ قَالَتْ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَانْفِرِي ‏"‏‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ‏.‏ قَالَ ‏"‏ فَاعْتَمِرِي مِنَ التَّنْعِيمِ ‏"‏‏.‏ فَخَرَجَ مَعَهَا أَخُوهَا، فَلَقِينَاهُ مُدَّلِجًا‏.‏ فَقَالَ ‏"‏ مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا ‏"‏‏.‏

ஹதீஸ் 1772 — Sahih al Bukhari 25:247

← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.