حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي وَحَوَّلَ رِدَاءَهُ.
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திப்பதற்காக (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். (பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தபோது) தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் இருந்த பகுதியை இடப் பக்கத் தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும், “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை கடுமையாக்குவாயாக! இறைவா! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று கூறிவந்தார்கள். மேலும் ‘ஃகிஃபார்’ குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பு அளிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக!” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹு தொழுகையிலேயே நடந்தது.2 அத்தியாயம் :
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப் பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர் களைத் திருத்)திடுவாயாக!” என்று பிரார்த் தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங் களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினி யால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி னால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றை)யே காண்பார். இந்நிலையில் (குறைஷியரின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறவுகளைப் பேண வேண்டும் என்றும் நீர் கட்டளையிடுகிறீர். உம்முடைய சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக!” என்று கூறினார். பிறகு “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீராக!” என்று தொடங்கி, “நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிச் செல்கிறீர்கள்; கடுமையான முறையில் நாம் பிடிக்கும் அந்நாளில்” என்று முடியும் (44:10-16) வசனங்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ (பத்ஷத்) என்பது பத்ர் போரைக் குறிக்கும். புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் ‘அர்ரூம்’ அத்தியாயத்திலுள்ள (பாரசீகர் களால் கிழக்கு ரோமர்கள் தோற்கடிக்கப் படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்துவிட்டன.3 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்களை, மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அந்நேரங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! எங்கள் நபியவர்கள் (இருக்கும் வரை அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி, அதன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். நீயும் (அதை ஏற்று) எங்களுக்கு மழை பொழிவித்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி அதன்) மூலம் உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!” என்று வேண்டுவார்கள். அதன்படி மக்களுக்கு மழையும் பெய்துவந்தது.5 அத்தியாயம் :
ஹதீஸ் 1011 — Sahih al Bukhari 15:6
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا وَهْبٌ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ.
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோள்மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.6 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது ‘கிப்லா’ திசையை முன்னோக்கி, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர் களே தொழுகை அறிவிப்பு முறையான பாங்கை (கனவில்) கண்டவர் ஆவார் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஆனால், அது தவறு. ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அன்சாரிகளிலுள்ள ‘மாஸின்’ குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். (பாங்கைக் கனவில் கண்டவர் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.) அத்தியாயம் :
ஹதீஸ் 1013 — Sahih al Bukhari 15:8
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلاً، دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ فَقَالَ " اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا ". قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ". قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ. قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மேடைக்கு எதிர்த் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடை(ச் செல்வங்)கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டத்தையோ தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) வேறு எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழை மேகத்தைப் பார்க்க முடியாதவாறு தடுக்கக்கூடிய) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தியபோது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால் நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், கோட்டைகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம். இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்தவர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1014 — Sahih al Bukhari 15:9
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ جُمُعَةٍ مِنْ بَابٍ كَانَ نَحْوَ دَارِ الْقَضَاءِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا ". قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ. قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، فَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا عَنَّا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ". قَالَ فَأَقْلَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ. قَالَ شَرِيكٌ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ فَقَالَ مَا أَدْرِي.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ‘தாருள் களா’ எனும் இல்லத்தின் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக் குள் வந்தார்.9 அவர் நின்றுகொண்டே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்க ளுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக்கூட்டத்தையோ தனி மேகத் தையோ நாங்கள் பார்க்கவில்லை. எங்களுக்கும் ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழைமேகத்தைப் பார்க்க முடியாதவாறு) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. (அடுத்த) ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது அதே வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பெருமழையால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, எங்களைவிட்டு மழையை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். பிறகு “இறைவா! எங்கள் சுற்றுப்புறங் களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடு வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின்மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே மழை (மதீனாவில்) நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம். ஷரீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்த மனிதர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :