அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க புறப்பட்டுச் சென்றபோது அவர்களை நான் பார்த்தேன். (உரையாற்றியபின் பிரார்த்திக்க முற்பட்டபோது) அவர்கள் மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி, கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்கலானார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். பிறகு எங்களுக்கு இரண்டு ரக்அத் கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1026 — Sahih al Bukhari 15:21
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْقَى فَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَلَبَ رِدَاءَهُ.
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது, இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண் டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க தொழும் திடலுக்குச் சென்றார் கள். கிப்லாவை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “தமது மேல்துண்டின் வலப்புறத்தை இடப் பக்கத் தோளின்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகை) தொழுவதற்காகத் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ‘அவர்கள் பிரார்த்தனை புரிந்தபோது’ அல்லது ‘பிரார்த்தனை புரிய முற்பட்ட போது’ கிப்லாவை முன்னோக்கினார்கள். தமது மேல்துண்டை (அதன் வலப் புறத்தை இடப் பக்க தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘மாஸினீ’ குலத்தைச் சேர்ந்தவர்; முன்பு இடம்பெற்ற (1022ஆவது) ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூஃபாவாசி ஆவார். அத்தியாயம் :
ஹதீஸ் 1029 — Sahih al Bukhari 15:24
قَالَ أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَى رَجُلٌ أَعْرَابِيٌّ مِنْ أَهْلِ الْبَدْوِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَاشِيَةُ هَلَكَ الْعِيَالُ هَلَكَ النَّاسُ. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ يَدْعُو، وَرَفَعَ النَّاسُ أَيْدِيَهُمْ مَعَهُ يَدْعُونَ، قَالَ فَمَا خَرَجْنَا مِنَ الْمَسْجِدِ حَتَّى مُطِرْنَا، فَمَا زِلْنَا نُمْطَرُ حَتَّى كَانَتِ الْجُمُعَةُ الأُخْرَى، فَأَتَى الرَّجُلُ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، بَشِقَ الْمُسَافِرُ، وَمُنِعَ الطَّرِيقُ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளி யேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டு விட்டன” என்று கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 1030 — Sahih al Bukhari 15:25
وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَشَرِيكٍ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய அக்குள் களின் வெண்மையை நான் பார்க்குமள வுக்கு (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1031 — Sahih al Bukhari 15:26
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின்போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள்; (மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1032 — Sahih al Bukhari 15:27
حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِيُّ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ " صَيِّبًا نَافِعًا ". تَابَعَهُ الْقَاسِمُ بْنُ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ. وَرَوَاهُ الأَوْزَاعِيُّ وَعُقَيْلٌ عَنْ نَافِعٍ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ‘ஸய்யிபன் நாஃபிஅன்’ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1033 — Sahih al Bukhari 15:28
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَبَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ، وَمَا فِي السَّمَاءِ قَزَعَةٌ، قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ، قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَفِي الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ وَالَّذِي يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الأُخْرَى، فَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ أَوْ رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ، فَادْعُ اللَّهَ لَنَا. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ". قَالَ فَمَا جَعَلَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّمَاءِ إِلاَّ تَفَرَّجَتْ حَتَّى صَارَتِ الْمَدِينَةُ فِي مِثْلِ الْجَوْبَةِ، حَتَّى سَالَ الْوَادِي ـ وَادِي قَنَاةَ ـ شَهْرًا. قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.- அப்போது ஒரு சிறு மேகம்கூட வானத்தில் காணப்பட வில்லை.- (நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை செய்து முடிப்பதற்குள்) மலை களைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மேடையி-ருந்து இறங்கியிருக்க வில்லை; அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படியே) மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘மற்றொரு மனிதர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துவிட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்” என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம! ஹவாலைனா, வ லா அலைனா” (இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இம்மழையைத் திருப்பிவிடுவாயாக எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே) எனப் பிரார்த்தித்தார்கள். வானத்தின் எப்பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அங்கெல்லாம் மேகங்கள் கலைந்துசெல்லாமல் இருக்கவில்லை. (மதீனா நகரைவிட்டு மேகம் விலகி அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டதால்) மதீனா பாதாளம் போன்று மாறிவிட்டது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை. அத்தியாயம் :