அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்துசென்றான். அப்பெண், ‘‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும்வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளது) மார்பில் பால் அருந்தலாயிற்று. பிறகு (தரையில்) இழுபட்டுக்கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்துசென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட் டுப் பொருளாக நடத்திக்கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த) அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தது. பிறகு அது, ‘‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் யிஇவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள். அவர்கள், யிஇவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்” என (அக்குழந்தை) சொல்லிற்று. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137 அத்தியாயம் :
ஹதீஸ் 3467 — Sahih al Bukhari 60:134
حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا بِهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக் குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக்கொண்டு), ‘‘மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள் இது போன்றதி லிருந்து (மக்களைத்) தடுப்பதையும், இஸ்ரவேலர்கள் அழிந்துபோனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன் படுத்தியபோதுதான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 3469 — Sahih al Bukhari 60:136
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ، فَإِنَّهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவரேனும் எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின், அது உமர் பின் அல்கத்தாப் அவர்கள்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந் தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர் களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்த படி, ‘‘(எனக்குப்) பாவமன்னிப்புக் கிடைக் குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், ‘‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவி யது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார். அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக்கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, ‘‘நீ தூரப் போ!” என்று (அவர் வசித்துவந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, ‘‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்தபோது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்துவந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவுக்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி னார். பிறகு அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தை) உழுவதற்காகத்தான்” என்று கூறியது எனச் சொன்னார்கள். மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்துபோய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள்) புகுந்து ஆட்டை(த் தாக்கிக் கவ்வி)க்கொண்டு சென்றுவிட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். அப்போது அந்த ஓநாய் அவரைப் பார்த்து, யிஏய்! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள். அப்போதும் மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்க வில்லை.138 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கி னார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழி யுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிகொள்ளை நோய் என்பது இஸ்ரவேலர் களின் ஒரு கூட்டத்தார்மீது லிஅல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீதுலி (அவர்களுடைய அட்டூழியங்கள் அதி கரித்தபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள் எனப் பதிலளித்தார்கள். அபுந்நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.) அத்தியாயம் :
ஹதீஸ் 3474 — Sahih al Bukhari 60:141
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي " أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلاَّ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ ".
நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்குக் கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், ‘‘கொள்ளைநோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவரேனும் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தமது ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3475 — Sahih al Bukhari 60:142
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ قُرَيْشًا، أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالَ وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ". ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ " إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ ابْنَةَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல்அஸ்வத்) திருடிவிட்டார். அவர் விஷயமாக குறைஷியர் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘‘அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களில் சிலர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர். (உசாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ள, அவ்வாறே) உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்?” என்று (கோபத்து டன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரை யில்), ‘‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :