حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ النَّزَّالَ بْنَ سَبْرَةَ الْهِلاَلِيَّ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَجُلاً، قَرَأَ، وَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ خِلاَفَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَ " كِلاَكُمَا مُحْسِنٌ، وَلاَ تَخْتَلِفُوا، فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمُ اخْتَلَفُوا فَهَلَكُوا ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். ஆகவே, அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்துபோனார்கள்” என்று சொன்னார்கள்.139 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. ‘‘அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத் தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, யிஇறைவா! என் சமுதாயத் தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3478 — Sahih al Bukhari 60:145
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَنَّ رَجُلاً كَانَ قَبْلَكُمْ رَغَسَهُ اللَّهُ مَالاً فَقَالَ لِبَنِيهِ لَمَّا حُضِرَ أَىَّ أَبٍ كُنْتُ لَكُمْ قَالُوا خَيْرَ أَبٍ. قَالَ فَإِنِّي لَمْ أَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ ذَرُّونِي فِي يَوْمٍ عَاصِفٍ. فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَقَالَ مَا حَمَلَكَ قَالَ مَخَافَتُكَ. فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ ". وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது தம் மகன்களிடம், ‘‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தை யாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரது உடல் அணுக்களை) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒன்றுதிரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘உன்(மீது எனக்குள்ள) அச்சம்தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)” என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்: ‘‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்றுவந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்தபோது தம் குடும்பத்தாரிடம் தமது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். யிநான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீ மூட்டிவிடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்துவிட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில் லிஅல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்லி என்னைக் கடலில் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். (அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரது அணுக்களை) ஒன்றுதிரட்டி, (முழு உருவையளித்து), ‘‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?” என்று கேட்டான். அவர், ‘‘உன் அச்சத்தால்தான்” என்று சொன்னார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.140 வேறொரு அறிவிப்பில், உக்பா (ரலி) அவர்கள், ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்...” என்று சொன்னார்கள். அதில் ‘‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்” என்னும் வாசகம் (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக் குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தம் (அலுவலரான) வாலிபரிடம், ‘‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரை) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் நம்மை மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட் டான்.141 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர், எல்லை மீறி (தீய செயல் புரிந்து)வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தம் மகன்களை அழைத்து, ‘‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார். அவர் இறந்தபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே உயர்ந்தோன் அல்லாஹ், பூமியை நோக்கி, ‘‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்றுசேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்ற போது அல்லாஹ், ‘‘நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘என் இறைவா! உன் அச்சம்தான் இப்படிச் செய்யும்படி என் னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். ஆகவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப் பளித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3482 — Sahih al Bukhari 60:149
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழுபூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142 அத்தியாயம் :
ஹதீஸ் 3483 — Sahih al Bukhari 60:150
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، عُقْبَةُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحِي فَافْعَلْ مَا شِئْتَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும். இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3484 — Sahih al Bukhari 60:151
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.143 இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத் துக்கொண்டே நடந்தபொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :