அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) இறை யில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(ஜெரூஸலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது).40 பிறகு, ‘‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3367 — Sahih al Bukhari 60:41
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ " هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا ". رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுத் மலை தென்பட்டது. அப்போது ‘‘இந்த மலை நம்மை நேசிக் கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித் தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக் கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்” என்று சொன் னார்கள்.41 அத்தியாயம் :
ஹதீஸ் 3368 — Sahih al Bukhari 60:42
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ. فَقَالَ " لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ ". فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ. وَقَالَ إِسْمَاعِيلُ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ.
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டியபொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லாதிருந்தால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபா வின்) இரு மூலைகளையும் தொட்டு முத்த மிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம் விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே நான் கருதுகிறேன்” எனக் கூறினார்கள்.42 அத்தியாயம் :
ஹதீஸ் 3369 — Sahih al Bukhari 60:43
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ ـ رضى الله عنه ـ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல் அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக் குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்) என்று சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘நபி (ஸல்) அவர் களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட் டுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், யிதங்கள்மீதும் தங்கள் குடும்பத்தார்மீதும் ஸலவாத் சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.) ஏனெனில், தங்க ளுக்கு நாங்கள் சலாம் சொல்வது எப்படி என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில்) கற்றுக்கொடுத்திருக் கின்றான்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம! ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம் இன்ன(க்)க ஹமீதும் மஜீத்; அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (பொருள்: ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3371 — Sahih al Bukhari 60:45
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ " إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘‘அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வ மின் குல்லி ஐனின் லாம்மத்தின்” (பொருள்: ‘‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்று கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3372 — Sahih al Bukhari 60:46
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نَحْنُ أَحَقُّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} وَيَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறந்தவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. குர்ஆனின்படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டு” என்று கேட்டபோது அல்லாஹ், ‘‘நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘ஆம்; (நம்பிக்கை கொண் டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.43 யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலை யளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக்கொண்டிருப்பேன்.44 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3373 — Sahih al Bukhari 60:47
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ ". قَالَ فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا لَكُمْ لاَ تَرْمُونَ ". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ قَالَ " ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ ".
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.45 நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரு சாராரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்திக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம் பெய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.46 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர்” என்று பதிலளித் தார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.50 அத்தியாயம் :
ஹதீஸ் 3375 — Sahih al Bukhari 60:49
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ {يَغْفِرُ اللَّهُ لِلُوطٍ إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ}.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லூத் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர் களாயிருந்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 அத்தியாயம் :