Qurani·قرآني
தமிழ்

நபிமார்கள் (அம்பியா)

163 ஹதீஸ்கள் · #3326–3488

ஹதீஸ் 3376 — Sahih al Bukhari 60:50
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏{‏فَهَلْ مِنْ مُدَّكِر ‏}‏‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” எனும் (54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற் றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.52 அத்தியாயம் :
ஹதீஸ் 3377 — Sahih al Bukhari 60:51
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنَ زَمْعَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏ وَذَكَرَ الَّذِي عَقَرَ النَّاقَةَ قَالَ ‏ "‏ انْتَدَبَ لَهَا رَجُلٌ ذُو عِزٍّ وَمَنَعَةٍ فِي قُوَّةٍ كَأَبِي زَمْعَةَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக்கொண்டு முன் வந்தான்” என்று சொன்னார்கள்.54 அத்தியாயம் :
ஹதீஸ் 3378 — Sahih al Bukhari 60:52
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ أَبُو الْحَسَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ بْنِ حَيَّانَ أَبُو زَكَرِيَّاءَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا نَزَلَ الْحِجْرَ فِي غَزْوَةِ تَبُوكَ أَمَرَهُمْ أَنْ لاَ يَشْرَبُوا مِنْ بِئْرِهَا، وَلاَ يَسْتَقُوا مِنْهَا فَقَالُوا قَدْ عَجَنَّا مِنْهَا، وَاسْتَقَيْنَا‏.‏ فَأَمَرَهُمْ أَنْ يَطْرَحُوا ذَلِكَ الْعَجِينَ وَيُهَرِيقُوا ذَلِكَ الْمَاءَ‏.‏ وَيُرْوَى عَنْ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ وَأَبِي الشُّمُوسِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِإِلْقَاءِ الطَّعَامِ‏.‏ وَقَالَ أَبُو ذَرٍّ عَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ اعْتَجَنَ بِمَائِهِ ‏"‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள். (ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3379 — Sahih al Bukhari 60:53
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْضَ ثَمُودَ الْحِجْرَ، فَاسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَاعْتَجَنُوا بِهِ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَأَنْ يَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ، وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَ تَرِدُهَا النَّاقَةُ‏.‏ تَابَعَهُ أُسَامَةُ عَنْ نَافِعٍ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3380 — Sahih al Bukhari 60:54
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا مَرَّ بِالْحِجْرِ قَالَ ‏ "‏ لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ ‏"‏‏.‏ ثُمَّ تَقَنَّعَ بِرِدَائِهِ، وَهْوَ عَلَى الرَّحْلِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3381 — Sahih al Bukhari 60:55
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழை யாதீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55 அத்தியாயம் :
ஹதீஸ் 3382 — Sahih al Bukhari 60:56
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ ابْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِمُ السَّلاَمُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3383 — Sahih al Bukhari 60:57
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ ‏"‏ أَتْقَاهُمْ لِلَّهِ ‏"‏‏.‏ قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ‏.‏ قَالَ ‏"‏ فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ ‏"‏‏.‏ قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ‏.‏ قَالَ ‏"‏ فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي، النَّاسُ مَعَادِنُ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا ‏"‏‏.‏ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3384 — Sahih al Bukhari 60:58
حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏"‏ مُرِي أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ‏"‏‏.‏ قَالَتْ إِنَّهُ رَجُلٌ أَسِيفٌ، مَتَى يَقُمْ مَقَامَكَ رَقَّ‏.‏ فَعَادَ فَعَادَتْ، قَالَ شُعْبَةُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ ‏"‏ إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59 அத்தியாயம் :
ஹதீஸ் 3385 — Sahih al Bukhari 60:59
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏‏.‏ فَقَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ‏.‏ فَقَالَ مِثْلَهُ فَقَالَتْ مِثْلَهُ‏.‏ فَقَالَ ‏"‏ مُرُوهُ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ ‏"‏‏.‏ فَأَمَّ أَبُو بَكْرٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقَالَ حُسَيْنٌ عَنْ زَائِدَةَ رَجُلٌ رَقِيقٌ‏.‏
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.