حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَجْنِي الْكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ ". قَالُوا أَكُنْتَ تَرْعَى الْغَنَمَ قَالَ " وَهَلْ مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ رَعَاهَا ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதில் கறுப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற் றில் மிகவும் நல்லது” என்று சொன் னார்கள். மக்கள், ‘‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா?” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3407 — Sahih al Bukhari 60:80
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. قَالَ ارْجِعْ إِلَيْهِ، فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعَرَةٍ سَنَةٌ. قَالَ أَىْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. قَالَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الأَحْمَرِ ". قَالَ وَأَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامٍ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யிமலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும் பிச் சென்று, ‘‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட் டாய்” என்று கூறினார். இறைவன், ‘‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)” எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். இறைவன், ‘‘மரணம்தான்” என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அங்கிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (இதை எடுத்துரைத்தபோது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற்குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.85 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3408 — Sahih al Bukhari 60:81
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَبَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ. فَقَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صلى الله عليه وسلم عَلَى الْعَالَمِينَ. فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ. فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ. فَرَفَعَ الْمُسْلِمُ عِنْدَ ذَلِكَ يَدَهُ، فَلَطَمَ الْيَهُودِيَّ، فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَقَالَ " لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனை வரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்துவிடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா, இறை அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப் பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா; அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாரா; அல்லது மூர்ச்சை யடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.86 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3409 — Sahih al Bukhari 60:82
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الْجَنَّةِ. فَقَالَ لَهُ آدَمُ أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَىَّ قَبْلَ أَنْ أُخْلَقَ ". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَحَجَّ آدَمُ مُوسَى " مَرَّتَيْنِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். ஆதமிடம் மூசா (அலை), ‘‘உங்கள் தவறு உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கிறீர்களே!” என்று கேட்டார்கள். ‘‘இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஆக, ஆதம் (அலை) அவர்கள் விவாதத்தில் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3410 — Sahih al Bukhari 60:83
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَالَ " عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ فَقِيلَ هَذَا مُوسَى فِي قَوْمِهِ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87 அத்தியாயம் :
ஹதீஸ் 3411 — Sahih al Bukhari 60:84
حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் பலர் முழுமைபெற்றிருக் கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளைவிடவும் ‘ஸரீத்’89 உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்” இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
ஹதீஸ் 3412 — Sahih al Bukhari 60:85
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ،. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ ". زَادَ مُسَدَّدٌ " يُونُسَ بْنِ مَتَّى ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘‘யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட” எனும் வாசகத்தை அதிகமாகக் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3413 — Sahih al Bukhari 60:86
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யியூனுஸ் பின் மத்தா’லிமத்தாவின் மகன் யூனுஸ் என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :