ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் தொழுகை இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டிரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் (தொழும் லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகள் நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டன. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா (ரஹ்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக் கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார் கள்?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கம் கூறியதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் கூறிவந்தார் கள் என்று பதிலளித்தார்கள்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 1091 — Sahih al Bukhari #1091
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ. قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ. وَزَادَ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَالِمٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ. قَالَ سَالِمٌ وَأَخَّرَ ابْنُ عُمَرَ الْمَغْرِبَ، وَكَانَ اسْتُصْرِخَ عَلَى امْرَأَتِهِ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ فَقُلْتُ لَهُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. فَقُلْتُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. حَتَّى سَارَ مِيلَيْنِ أَوْ ثَلاَثَةً ثُمَّ نَزَلَ فَصَلَّى ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي إِذَا أَعْجَلَهُ السَّيْرُ. وَقَالَ عَبْدُ اللَّهِ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ، فَيُصَلِّيهَا ثَلاَثًا ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ الْعِشَاءَ فَيُصَلِّيَهَا رَكْعَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ، وَلاَ يُسَبِّحُ بَعْدَ الْعِشَاءِ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (மஃக்ரிபின் கடைசி நேரத்தில்) தொழுவார்கள். சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1092 — Sahih al Bukhari 18:12

ஹதீஸ் 1093 — Sahih al Bukhari 18:13
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ.
ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டக ஊர்தியில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1094 — Sahih al Bukhari 18:14
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي التَّطَوُّعَ وَهْوَ رَاكِبٌ فِي غَيْرِ الْقِبْلَةِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது, ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கி கூடுதலான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1095 — Sahih al Bukhari 18:15
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ وَيُوتِرُ عَلَيْهَا، وَيُخْبِرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1096 — Sahih al Bukhari 18:16
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، أَيْنَمَا تَوَجَّهَتْ يُومِئُ. وَذَكَرَ عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பயணத்தின்போது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகை களை) சைகை செய்து தொழுவார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1097 — Sahih al Bukhari 18:17
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَامِرَ بْنَ رَبِيعَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الرَّاحِلَةِ يُسَبِّحُ، يُومِئُ بِرَأْسِهِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ فِي الصَّلاَةِ الْمَكْتُوبَةِ.
ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான (ஃபர்ள்) தொழுகையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள். அத்தியாயம் :
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது ஊர்தி ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். தமது முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் ஊர்தி ஒட்டகத்தின்மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். எனினும், கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழு வார்கள்)” என்றும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவாகள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகை யைத் தொழ விரும்பும்போது (ஊர்தி யிலிருந்து) இறங்கி ‘கிப்லா’வை முன் னோக்குவார்கள். அத்தியாயம் :