Qurani·قرآني
தமிழ்

தொழுகை குறைத்தல் (கஸ்ர்)

40 ஹதீஸ்கள் · #1080–1119

ஹதீஸ் 1100 — Sahih al Bukhari 18:20
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا حَبَّانُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ اسْتَقْبَلْنَا أَنَسًا حِينَ قَدِمَ مِنَ الشَّأْمِ، فَلَقِينَاهُ بِعَيْنِ التَّمْرِ، فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ مِنْ ذَا الْجَانِبِ، يَعْنِي عَنْ يَسَارِ الْقِبْلَةِ‏.‏ فَقُلْتُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ‏.‏ فَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ لَمْ أَفْعَلْهُ‏.‏ رَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ حَجَّاجٍ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அப்துல் மலிக் பின் மர்வானைச் சந்தித்து பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பற்றி முறையிட்டுவிட்டு) ஷாம் (சிரியா) நாட்டி லிருந்து திரும்பி வந்தபோது, அவர்களை நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அவர்களை நாங்கள் ‘அய்னுத் தம்ர்’ எனும் இடத்தில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து (கூடுதலான தொழுகை) தொழுவதை நான் பார்த்தேன். அவர்களின் முகம் கிப்லாவுக்கு அந்தப் பக்கம் -அதாவது இடப்புறம்- நோக்கி அமைந்திருந்தது. “கிப்லா அல்லாத வேறு திசையில் நீங்கள் தொழுவதை நான் கண்டேனே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்கமாட்டேன்” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1101 — Sahih al Bukhari 18:21
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ حَفْصَ بْنَ عَاصِمٍ، حَدَّثَهُ قَالَ سَافَرَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ صَحِبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمْ أَرَهُ يُسَبِّحُ فِي السَّفَرِ، وَقَالَ اللَّهُ جَلَّ ذِكْرُهُ ‏{‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ‏}‏‏.‏
ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பயணத்தின்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் (பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தில் கூடுதலான தொழு கைகளைத் தொழுவதை நான் பார்த்ததே யில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று புகழுக்குரிய அல்லாஹ்வே கூறுகின்றான்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1102 — Sahih al Bukhari 18:22
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِيسَى بْنِ حَفْصِ بْنِ عَاصِمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ لاَ يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ، وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَذَلِكَ ـ رضى الله عنهم‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்திருக்கி றேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிட (கூடுதலாக) வேறெந்தத் தொழுகையையும் தொழமாட்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் இவ்வாறே நான் (பயணத்தில்) இருந்திருக்கிறேன் (அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்தனர்).12 அத்தியாயம் :
ஹதீஸ் 1103 — Sahih al Bukhari 18:23
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ مَا أَنْبَأَ أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الضُّحَى غَيْرُ أُمِّ هَانِئٍ ذَكَرَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا، فَصَلَّى ثَمَانِ رَكَعَاتٍ، فَمَا رَأَيْتُهُ صَلَّى صَلاَةً أَخَفَّ مِنْهَا، غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ‏.‏
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவதைக் கண்டதாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் நமக்கு அறிவிக்கவில்லை. “நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்தில் குளித்துவிட்டு, எட்டு ரக்அத் கள் தொழுதார்கள். அதைவிடச் சுருக்க மாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும், ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1104 — Sahih al Bukhari 18:24
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ‏.‏
ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்தபோது, தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து அது சென்ற திசை நோக்கிக் கூடுதல் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1105 — Sahih al Bukhari 18:25
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَبِّحُ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ، يُومِئُ بِرَأْسِهِ، وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசையில் தலையால் சைகை செய்து கூடுதல் தொழுகைகளைத் தொழுவார்கள். இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1106 — Sahih al Bukhari 18:26
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1107 — Sahih al Bukhari 18:27
وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ الْحُسَيْنِ الْمُعَلِّمِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الظُّهْرِ وَالْعَصْرِ إِذَا كَانَ عَلَى ظَهْرِ سَيْرٍ، وَيَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்) பயணத்தில் இருக்கும்போது லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழு வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1108 — Sahih al Bukhari 18:28
وَعَنْ حُسَيْنٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ‏.‏ وَتَابَعَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ وَحَرْبٌ عَنْ يَحْيَى عَنْ حَفْصٍ عَنْ أَنَسٍ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1109 — Sahih al Bukhari 18:29
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ صَلاَةَ الْمَغْرِبِ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ‏.‏ قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ، وَيُقِيمُ الْمَغْرِبَ فَيُصَلِّيهَا ثَلاَثًا، ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ الْعِشَاءَ، فَيُصَلِّيهَا رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ وَلاَ يُسَبِّحُ بَيْنَهَا بِرَكْعَةٍ، وَلاَ بَعْدَ الْعِشَاءِ بِسَجْدَةٍ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ‏.‏
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபை யும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுவதை நான் பார்த்திருக்கி றேன்” என்று கூறினார்கள். அவசரமாகப் பயணம் செல்ல நேரிட்டால் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். மஃக்ரிப் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி மூன்று ரக்அத்கள் தொழுது சலாம் கொடுப்பார்கள். பிறகு சிறிய இடைவெளி விட்டு இஷா தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ‘சலாம்’ கொடுப்பார்கள். அவ்விரு தொழுகை களுக்கும் இடையே கூடுதலான தொழுகை எதையும் தொழமாட்டார்கள். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து இரவுத் தொழுகைக்காக எழும் நேரம் (நடுநிசி)வரை வேறெதையும் தொழ மாட்டார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.