Qurani·قرآني
தமிழ்

தொழுகை குறைத்தல் (கஸ்ர்)

40 ஹதீஸ்கள் · #1080–1119

ஹதீஸ் 1110 — Sahih al Bukhari 18:30
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَرْبٌ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ فِي السَّفَرِ‏.‏ يَعْنِي الْمَغْرِبَ وَالْعِشَاءَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் -மஃக்ரிப், இஷா ஆகிய- இவ்விரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1111 — Sahih al Bukhari 18:31
حَدَّثَنَا حَسَّانُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி யிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் மேற்கொண்டால். லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து (அஸ்ர் நேரத்தில்) தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலி ருந்து சாய்ந்துவிட்டால், லுஹ்ர் தொழுகை யைத் தொழுதுவிட்டே பயணம் மேற் கொள்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1112 — Sahih al Bukhari 18:32
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا، فَإِنْ زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் புறப்பட்டுவிட்டால், லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்துவார்கள். பிறகு (வாகனத்திலிருந்து) இறங்கி, லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 1113 — Sahih al Bukhari 18:33
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ "‏ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழு தார்கள். (அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்திருந்த) மக்களில் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உட்காருங்கள்’ என்று மக்களுக் குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். எனவே, அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள் அவர் நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்” என்று கூறினார்கள்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 1114 — Sahih al Bukhari 18:34
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سَقَطَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فَرَسٍ فَخُدِشَ ـ أَوْ فَجُحِشَ ـ شِقُّهُ الأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى قَاعِدًا فَصَلَّيْنَا قُعُودًا وَقَالَ ‏ "‏ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ‏.‏ فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களுக்கு வலப்புற விலாப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது ஒரு தொழுகை(யின் நேரம்) வந்துவிடவே, அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். அப்போது நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்த படியே தொழுதோம். (தொழுது முடித்ததும்) “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட் டுள்ளார். அவர் ‘தக்பீர்’ சொன்னால் நீங்களும் ‘தக்பீர்’ சொல்லுங்கள். அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள். (ருகூஉவிலிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ் வோரின் புகழுரையை ஏற்கிறான்)’ என்று கூறும் போது நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1115 — Sahih al Bukhari 18:35
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَخْبَرَنَا حُسَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَأَلَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ أَخْبَرَنَا إِسْحَاقُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ عَنِ ابْنِ بُرَيْدَةَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ـ وَكَانَ مَبْسُورًا ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ قَاعِدًا فَقَالَ ‏ "‏ إِنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ ‏"‏‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு, நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1116 — Sahih al Bukhari 18:36
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ وَكَانَ رَجُلاً مَبْسُورًا ـ وَقَالَ أَبُو مَعْمَرٍ مَرَّةً عَنْ عِمْرَانَ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهْوَ قَاعِدٌ فَقَالَ ‏ "‏ مَنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ نَائِمًا عِنْدِي مُضْطَجِعًا هَا هُنَا‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு, உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித் தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘நாயிம்’ (தூங்குபவர்) எனும் சொல்லுக்கு ‘படுத்துத் தொழுபவர்’ என்பதே என்னைப் பொறுத்த வரை பொருளாகும்.19 அத்தியாயம் :
ஹதீஸ் 1117 — Sahih al Bukhari 18:37
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فَقَالَ ‏ "‏ صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ ‏"‏‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே, நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துக் கொண்டு தொழுவீராக!” என்று சொன் னார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 1118 — Sahih al Bukhari 18:38
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ، فَكَانَ يَقْرَأُ قَاعِدًا حَتَّى إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ، فَقَرَأَ نَحْوًا مِنْ ثَلاَثِينَ آيَةً أَوْ أَرْبَعِينَ آيَةً، ثُمَّ رَكَعَ‏.‏
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதுமை அடையும்வரை ஒருபோதும் இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. (முதுமையடைந்த பின்னர்) உட்கார்ந்தவாறே (குர்ஆன் வசனங்களை) ஓதுவார்கள். ருகூஉ செய்ய எண்ணும்போது எழுந்து, முப்பது அல்லது நாற்பது வாசனங்கள் அளவுக்கு ஓதி விட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1119 — Sahih al Bukhari 18:39
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَأَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهْوَ جَالِسٌ، فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهْوَ قَائِمٌ، ثُمَّ يَرْكَعُ ثُمَّ يَسْجُدُ، يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ، فَإِذَا قَضَى صَلاَتَهُ نَظَرَ، فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي، وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ‏.‏
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்தபின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள். அப்போது உட்கார்ந்தபடியே (இறை வசனங்களை) ஓதுவார்கள். ஓத வேண்டிய தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அந்த நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉ செய்வார்கள். பின்னர் சஜ்தா செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இதைப் போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக்கொள்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.