Qurani·قرآني
தமிழ்

இரு பெருநாள்கள் (ஈதுல் ஃபித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா)

42 ஹதீஸ்கள் · #948–989

ஹதீஸ் 978 — Sahih al Bukhari 13:27
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الْفِطْرِ، فَصَلَّى فَبَدَأَ بِالصَّلاَةِ ثُمَّ خَطَبَ، فَلَمَّا فَرَغَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ، فَذَكَّرَهُنَّ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ الصَّدَقَةَ‏.‏ قُلْتُ لِعَطَاءٍ زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لاَ وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ حِينَئِذٍ، تُلْقِي فَتَخَهَا وَيُلْقِينَ‏.‏ قُلْتُ أَتُرَى حَقًّا عَلَى الإِمَامِ ذَلِكَ وَيُذَكِّرُهُنَّ قَالَ إِنَّهُ لَحَقٌّ عَلَيْهِمْ، وَمَا لَهُمْ لاَ يَفْعَلُونَهُ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முத-ல் நடத்திவிட்டுத்தான் (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க, பெண்கள் (தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: இதை எனக்கு அறிவித்த அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் நான், “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டனர்)?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “இல்லை. அப்போது தாமாக (விரும்பி)ச் செய்யும் தர்மப் பொருட் களையே போட்டனர். அவர்கள் தம் (கால் விர-ல் அணிந்திருந்த) மெட்டிகளையும் போடலாயினர். இன்னும் (பிற அணிகலன் களையும்) அவர்கள் போட்டனர்” என்று பதிலளித்தார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறு (பெண்கள் பகுதிக்குச் சென்று) போதனை செய்வது இன்றைக்கும் இமாம்கள்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர் களா?” என்றும் கேட்டேன். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாம-ருக்க முடியும்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 979 — Sahih al Bukhari 13:28
قَالَ ابْنُ جُرَيْجٍ وَأَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ شَهِدْتُ الْفِطْرَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ يُصَلُّونَهَا قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ يُخْطَبُ بَعْدُ، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجْلِسُ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ مَعَهُ بِلاَلٌ فَقَالَ ‏{‏يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ‏}‏ الآيَةَ ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا ‏"‏ آنْتُنَّ عَلَى ذَلِكَ ‏"‏‏.‏ قَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ مِنْهُنَّ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ‏.‏ لاَ يَدْرِي حَسَنٌ مَنْ هِيَ‏.‏ قَالَ ‏"‏ فَتَصَدَّقْنَ ‏"‏ فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ لَكُنَّ فِدَاءٌ أَبِي وَأُمِّي، فَيُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ‏.‏ قَالَ عَبْدُ الرَّزَّاقِ الْفَتَخُ الْخَوَاتِيمُ الْعِظَامُ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர். அதன் பிறகே அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து நகர்ந்து, (மக்களைத்) தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதைப் போன்று உள்ளது. பிறகு ஆண்(கள் அமர்ந்திருந்த வரிசை)களைப் பிளந்துகொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களா யின்...” என்று தொடங்கும் (60:12ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு, “இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும், “ஆம் (இருக்கிறோம்)” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண்மணி யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்-ம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்!” என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 980 — Sahih al Bukhari 13:29
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ جَوَارِيَنَا أَنْ يَخْرُجْنَ يَوْمَ الْعِيدِ، فَجَاءَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ فَأَتَيْتُهَا فَحَدَّثَتْ أَنَّ زَوْجَ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً فَكَانَتْ أُخْتُهَا مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ‏.‏ فَقَالَتْ فَكُنَّا نَقُومُ عَلَى الْمَرْضَى وَنُدَاوِي الْكَلْمَى، فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، عَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ فَقَالَ ‏"‏ لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا فَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ ‏"‏‏.‏ قَالَتْ حَفْصَةُ فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ أَتَيْتُهَا، فَسَأَلْتُهَا أَسَمِعْتِ فِي كَذَا وَكَذَا قَالَتْ نَعَمْ، بِأَبِي ـ وَقَلَّمَا ذَكَرَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم إِلاَّ قَالَتْ بِأَبِي ـ قَالَ ‏"‏ لِيَخْرُجِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ ـ أَوْ قَالَ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ شَكَّ أَيُّوبُ ـ وَالْحُيَّضُ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى، وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ ‏"‏‏.‏ قَالَتْ فَقُلْتُ لَهَا آلْحُيَّضُ قَالَتْ نَعَمْ، أَلَيْسَ الْحَائِضُ تَشْهَدُ عَرَفَاتٍ وَتَشْهَدُ كَذَا وَتَشْهَدُ كَذَا
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பெருநாளன்று எங்கள் இளம்பெண்கள் (தொழும் திடலுக்கு) வெளியேறக் கூடாது என்று நாங்கள் தடுத்துவந்தோம். இந் நிலையில், ஒரு பெண்மணி ‘பனூ கலஃப்’ குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா -ர-) வழியாக வந்த ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்: -என் சகோதரியின் கணவர் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பன்னிரண்டு போர் களில் கலந்துகொண்டார். என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவருடன் இருந்தார்- என் சகோதரி கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (போர்கள் நடை பெறும்போது) காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப் போம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணுக்குத் துப்பட்டா இல்லாவிட்டால், (பெருநாளன்று தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லாமல் (வீட்டிலேயே) அவள் இருப்பது குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டுமே! பெண்களும் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளட்டுமே!” என்று சொன்னார்கள். ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அத்தியா (ரலி) அவர்கள் வந்தபோது நான் அவர்களிடம் சென்று, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப்பணமாகட்டும்! ஆம் (நான் செவியுற்றேன்)” என்று பதிலளித்தார்கள். உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதெல்லாம் “என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப் பணமாகட்டும்” என்று கூறாமல் இருந்தது அபூர்வமே. ‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண் களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும், திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லட்டும். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்; நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர் களின் பிரார்த்தனையிலும் அவர்கள் கலந்துகொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள் உம்மு அத்திய்யா (ரலி). பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்த அந்தப் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார்: நான் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “ஆம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபா (மினா, முஸ்த-ஃபா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்குச் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 981 — Sahih al Bukhari 13:30
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ أُمِرْنَا أَنْ نَخْرُجَ فَنُخْرِجَ الْحُيَّضَ وَالْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ‏.‏ قَالَ ابْنُ عَوْنٍ أَوِ الْعَوَاتِقَ ذَوَاتِ الْخُدُورِ، فَأَمَّا الْحُيَّضُ فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلْنَ مُصَلاَّهُمْ‏.‏
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லுமாறு (நபியவர்களால்) கடடளையிடப்பட்டோம். அப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், கன்னிப் பெண்கள், திரைக்குள்ளிருக்கும் பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யும்படி கட்டளையிடப்பட்டோம். -இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், ‘அல்லது திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களையும்’ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்- மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்-ம்கள் கூடும் இடங்களிலும் அவர் களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள் வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்தி-ருந்து ஒதுங்கியிருப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 982 — Sahih al Bukhari 13:31
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْحَرُ أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) தொழும் திட-லேயே ‘ஒட்டகங்களை’ அல்லது ‘ஆடு, மாடுகளை’ அறுப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 983 — Sahih al Bukhari 13:32
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ فَقَالَ ‏"‏ مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسْكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَتِلْكَ شَاةُ لَحْمٍ ‏"‏‏.‏ فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلاَةِ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ فَتَعَجَّلْتُ وَأَكَلْتُ وَأَطْعَمْتُ أَهْلِي وَجِيرَانِي‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ تِلْكَ شَاةُ لَحْمٍ ‏"‏‏.‏ قَالَ فَإِنَّ عِنْدِي عَنَاقَ جَذَعَةٍ، هِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ، فَهَلْ تَجْزِي عَنِّي قَالَ ‏"‏ نَعَمْ، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுகைக்குப்பின் எங்களிடையே (குத்பா) உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) நிறைவேற்றியவராவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அது இறைச்சி(க்காக அறுக்கப் பட்ட) ஆடுதான் (குர்பானி ஆடன்று)” என்று கூறினார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான், ‘இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய தினம்’ என்று கருதிக்கொண்டு, தொழுகைக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன். நான் அவசரப்பட்டுவிட்டேன். நானும் சாப்பிட்டேன்; என் குடும்பத் தாரையும் என் அண்டை வீட்டாரையும் சாப்பிடச் செய்தேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பெருநாள் தொழுகைக்கு முன்பே அறுக்கப்பட்ட) அந்த ஆடு இறைச்சி ஆடு தான் (குர்பானி ஆடன்று)” என்றார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அவ்வாறாயின், ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று என்னிடம் உள்ளது. அது (கொழுத்த) இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சரி (நீங்கள் அறுக்கலாம்). உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது போதுமாகாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 984 — Sahih al Bukhari 13:33
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ فَأَمَرَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَنْ يُعِيدَ ذَبْحَهُ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، جِيرَانٌ لِي ـ إِمَّا قَالَ بِهِمْ خَصَاصَةٌ، وَإِمَّا قَالَ بِهِمْ فَقْرٌ ـ وَإِنِّي ذَبَحْتُ قَبْلَ الصَّلاَةِ وَعِنْدِي عَنَاقٌ لِي أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ‏.‏ فَرَخَّصَ لَهُ فِيهَا‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். அப்போது (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தவர் மறுபடியும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் (அபூபுர்தா எனும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே, என் அண்டை வீட்டார் ‘பசியில் இருந்தனர்’ அல்லது ‘வறுமையில் இருந்த னர்’. (ஆகவே,) நான் தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்த) இரண்டு இறைச்சி ஆடுகளை விட எனக்கு விருப்பமானது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார். இந்த விஷயத்தில் அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 985 — Sahih al Bukhari 13:34
حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ، عَنْ جُنْدَبٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ فَقَالَ ‏ "‏ مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ ‏"‏‏.‏
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அதற்குப்பின் ‘குர்பானி’ பிராணியை அறுத்தார்கள். “(பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்து குர்பானி கொடு)க்கட்டும். யார் அறுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 986 — Sahih al Bukhari 13:35
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو تُمَيْلَةَ، يَحْيَى بْنُ وَاضِحٍ عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ‏.‏ تَابَعَهُ يُونُسُ بْنُ مُحَمَّدٍ عَنْ فُلَيْحٍ‏.‏ وَحَدِيثُ جَابِرٍ أَصَحُّ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருநாள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்.8 அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்தும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. ஆனால், ஜாபிர் (ரலி) அவர்களின் (மேற்கண்ட அறிவிப்பே) மிகவும் ஆதார பூர்வமானதாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 987 — Sahih al Bukhari #987
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ وَجْهِهِ فَقَالَ ‏"‏ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ ‏"‏‏.‏ وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى‏.‏ وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَزَجَرَهُمْ عُمَرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ دَعْهُمْ، أَمْنًا بَنِي أَرْفِدَةَ ‏"‏‏.‏ يَعْنِي مِنَ الأَمْنِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘மினா’வின் நாட்களில் என் அருகில் (அன்சாரிச்) சிறுமியர் இருவர் (சலங்கை யில்லா) கஞ்சிராக்களை அடித்து (புஆஸ் போர் பரணிகளைப் பாடி)க்கொண்டி ருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப் படுத்து)க்கொண்டி ருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) ‘மினா’வின் நாட்களாக அமைந்திருந்தன.10 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.